முறையிடுகிறது என்ன? சொல்! Jeffersonville, Indiana, USA 63-0714M 1கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! நாம் சற்று நேரம் நின்றவாறே, தலை வணங்குவோம். யாருக்காவது விசேஷித்த விண்ணப்பங்கள் உண்டா? அப்படிப்பட்டவர் தேவனுக்கு நேராக கரங்களையுயர்த்தி, அதன் மூலம் கர்த்தாவே என் தேவைகளை நீர் அறிந்திருக்கிறீர்'' என்று அறிக்கை செய்யட்டும். 2பரம பிதாவே, இன்று காலை தேவனுடைய வீட்டில் ஒன்று கூடுவதற்கு நாங்கள் சிலாக்கியம் பெற்றவர்களாயிருக்கிறோம். ஏனெனில் தேவனுடைய வீட்டில் இன்று காலை கூட வேண்டும்மென ஆர்வம் கொண்டுள்ள அநேகர் ஆஸ்பத்திரியிலும் வீடுகளிலும் வியாதியின் படுக்கையில் இருக்கின்றனர். ஆனால், இன்று இங்கே இருக்கும் சிலாக்கியத்தை நீர் எங்களுக்கு அருளியிருக்கிறீர். ஆண்டவரே, ஒருவரையொருவர், சந்திக்க வேண்டும் மென்னும் நோக்கத்துடன் நாங்கள் இங்கு கூடிவரவில்லை. நாங்கள் ஒருவரிலொருவர் அன்பு கூர்ந்து ஐக்கியங்கொள்ள விரும்புவது உண்மையே. அதை எங்கள் வீடுகளிலும் கூட செய்து கொள்ளலாம். ஆனால் எங்களை சகோதரராகவும், உம்முடைய பிள்ளைகளாகவும் ஒன்று சேர்த்துள்ள உம்முடன் ஐக்கியங் கொள்ளவே நாங்கள் இன்று கூடி வந்துள்ளோம். உமக்கு இப்பொழுது நாங்கள் நன்றி செலுத்துகின்றோம். உம் வார்த்தையின் மூலமாக மாத்திரமே உம்முடன் சரிவர ஐக்கியங்கொள்ள முடியும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். உமது வார்த்தைதான் சத்தியமாகும். ஆவிக்குரிய பெலனை அடைவதற்காக நாங்கள் இங்கு ஒன்று கூடியுள்ளோம் கர்த்தாவே, அது எங்களுக்கு அவசியம். நாங்கள் சுமக்கும் சிலுவையைத் தாங்கிக் கொள்ள எங்களுக்குப் பெலன் அவசியமாயுள்ளது. உம்முடைய மகத்தான பரிசுத்த ஆவியை இன்று அனுப்பி எங்கள் அனைவரையும் பெலப்படுத்த வேண்டுகிறோம். இங்கு கூடி வந்து உம்மை நோக்கி தங்கள் கரங்களை உயர்த்தியுள்ள உம்முடைய ஜனங்களின் விண்ணப்பங்களுக்கு உத்தரவருளும் ஆண்டவரே, அவர்கள் ஒவ்வொருவருக்கும் உத்தரவு அருளும். 3சாலையில் மோட்டார் விபத்திற்குள்ளான சகோதரி. உன்கிரனின் (Sis. Ungren) உயிரைக் காப்பாற்றினதற்காக நன்றி கூறுகின்றோம். ஆண்டவரே, நீர் கிருபையாக அவர்களைக் காத்துக் கொண்டீர். அதற்காக உமக்கு நன்றி. பரம பிதாவே, எங்கள் வாழ்க்கை பிராயணத்தில் நாங்கள் முன் செல்லும் போது, எங்கள் ஒவ்வொருவருடன் கூட இருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். என்றும் தவறாத உம் பிரசன்னம் எங்களுடன் இருக்கிறது என்னும் விசுவாசத்தோடு, இரும்பு உத்திரம் போன்ற உம் வல்லமையை எங்களுக்கு அருளுவீராக! நாங்கள், எங்களுக்கு உதவி செய்துக் கொள்ள முடியாத அந்த நேரத்தில், ''கர்த்தருடைய தூதர்கள் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப்பாளயமிறங்கி, அவர்கள் பாதங்கள் கல்லில் இடறாதபடி அவர்களை ஏந்திக்கொண்டு செல்வார்கள்'' என்று நாங்கள் அறிவோம். உமது வார்த்தையை அறிந்து கொள்ள உம் ஆசீர்வாதத்தையளித்து, எங்களுக்குள் வாசம் செய்து, எங்கள் மூலம் பேச வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 4வெளியே பிரகாசிக்கின்ற சூரிய வெளிச்சத்திற்காக, சூரிய ஒளிக்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இக்காலை சீதோஷ்ண சூழ்நிலை மிக மோசமாக இருந்தது. இந்த நாட்டில் தான் அநேகமாக மிக மந்தமான, மோசமான சீதோஷ்ணத்தை நாம் உடையவர்களாக இருக்கிறோம் என்று நான் நினைக்கின்றேன். ஆகவே, சூரியன் பிரகாசித்துக் கொண்டு வெளியே வருவதைப் பார்ப்பது மிக அருமையானதாக இருக்கிறது. இன்றைக்கு குடும்பம் ஒன்று கூடுதல் இருந்தது, நான் என்னுடைய சகோதரர்களையும் மற்றும் இப்பட்டணத்தை சுற்றிலும் உள்ள எங்களுடைய உறவினர்கள் சிலரையும் சந்தித்தேன். அவர்கள் என் சகோதரியின் வீட்டில் இருக்கின்றனர். ஒரு பெரிய பிரான்ஹாம்களின் கூட்டமாக அவர்கள் உள்ளனர். கெண்டக்கியில் உள்ள அவர்கள் அனைவரும் இங்கே வந்து கூடுவார்களென்றால், இந்த பட்டணத்தையே வாடகைக்கு அமர்த்த வேண்டுமென்று நான் யூகிக்கின்றேன்; அவர்கள் அநேகம் பேர் உள்ளனர். அது ஒரு சிறிய ஒன்று கூடுதலாகும். நாங்கள் எல்லோரும் என்னுடைய தாயாரின் வீட்டில் ஒன்று கூடுவதுண்டு. என் தாயார் எங்கள் எல்லாரையும் ஒன்றாக இணைத்துக் கொண்டிருந்த அன்பான ஒரு இணைப்பு கம்பமாக இருந்தார். ஆனால் தேவன் அந்த இணைப்பு கம்பத்தை பரலோகத்திற்கு எடுத்துக் கொண்டார். ஆகவே, நாங்களெல்லாரும் ஒரு நாளிலே அங்கே சந்தித்துக் கொள்ளுவோம் என்று நான் நம்புகிறேன். 5ஆகவே, இப்பொழுது அன்றொரு நாளில் நான் இவ்வாறு கூறினேன். நான், ''உங்களுக்குத் தெரியுமா, ஞாயிற்றுக்கிழமை செய்திகளை இருபது அல்லது முப்பது நிமிடங்களுக்கு குறைத்துக் கொண்டு, பிறகு வியாதியஸ்தருக்காக நான் ஜெபிப்பேன் என்று நான் நம்புகிறேன்'' என்று கூறினேன். ஆகவே, இக்காலை நான் அதைக் குறித்து சிந்தித்தேன். ஆகவே கடந்த இரவு, சகோதரி. டெளனிங் என்னை அழைத்து அதை கூறின போது நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் பில்லியை தொலை பேசியில் அழைத்து தானும் சகோதரி. அன்கிரன்னும் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, சாலையிலிருந்து சறுக்கி விபத்துள்ளானார்கள் என்று கூறினார்கள். ஆகவே, பில்லி அங்கே ஜன்னலிற்கருகே உட்கார்ந்துக் கொண்டிருந்தான், அது என்ன நேரமாயிருந்தது என்று எனக்குத் தெரியவில்லை; ஒரு கால் அது காலை வேளை, அல்லது ஏதாவதொன்றாக இருந்திருக்கக் கூடும். நான் சிறிது நேரம் தூங்கிக் கொண்டிருந்து விட்டேன். நான் சகோ. உட்ஸ் அவர்களின் வீட்டை நோக்கிப் பார்த்தேன், அங்கே வெளிச்சம் இல்லாதிருந்தது. ஆகவே நான் முழங்காற்படியிட்டு ஜெபிக்க ஆரம்பித்தேன். நான் ஜெபித்துக் கொண்டிருந்த போது, ஏதோ ஒன்று என்னிடம், “எல்லாம் சரியாக இருக்கின்றது என்று கூறினது. ஆகவே, அப்பொழுது நான் பில்லியிடம் எல்லாக் காரியமும் சரியாகி விடும்,'' என்று அவர்களிடம் கூறு'' என்றேன். நான் நினைத்தேன் அச்சம்பவித்திற்கு பிறகு இங்கே இக்காலை வேளையில் அவர்கள் மறுபடியுமாக கர்த்தருடைய வீட்டில் அமர்ந்திருப்பதைக் காண்பது எனக்கு சந்தோஷமாகயிருக்கின்றது. உன்னை மிகவுமாக நேசிக்கின்ற ஒரு ஜனம், சுவிசேஷத்தை கேட்பதற்கென்று நூற்றுக்கணக்கான மைல்கள் கடந்து வருவது, அப்பொழுதுதான் நினைத்தேன், “ஒரு இருபது நிமிட செய்தி, மிக மெதுவாக நான் இருப்பேனானால், அவர்களுக்கு நன்றாக அமையாது,'' ஆகவே, நான் நினைத்தேன், நான்... அவ்வளவு நேரம். ஆகவே பிறகு, இக்காலை சகோதரன். அன்கிரன், அவர்களுடைய மகன் , ''நீர் எவ்வளவு மகத்தானவர்'' என்று பாடினதை நான் கேட்டேன். அவர்.... அவர் இவருக்கு (சகோ. அன்கிரன் தமிழாக்கியோன்) நேற்று மதியவேளையைக் காட்டிலும் இன்று காலை மிகவுமாக மேம்பட்டவராக இருக்கின்றார். ஏனென்றால் பரலோகத்தின் மகத்தான அந்த தேவனானவர் இவருடைய விலையேறப்பெற்ற தாயையும், சகோதரியையும் காப்பாற்றினார். 6இப்பொழுது, இன்றைக்கு, கர்த்தருக்குள் ஒரு மகத்தான நேரத்தை நாம் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றாம். நான் இரண்டு அல்லது மூன்று வெவ்வேறான தலைப்புகளை வைத்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆகவே இக்காலை எதைக் குறித்து பேசலாம் என்கின்ற முடிவிற்கு என்னால் வர இயலவில்லை. அவைகளில் ஒன்று, ''உன்னுடைய கவலைகளை அவர் மீது வைத்துவிடு, ஏனென்றால் அவர் உன்னை விசாரிக்கிறவராக இருக்கின்றார். இப்பொழுது, அவர் உன்னை விசாரிக்கிறவராக இருப்பாரானால், உன்னைக் குறித்தென்ன?'' என்பதே. ஆகவே பிறகு வேறொன்று, பில்லிபால், அல்லது பில்லிபால் இல்லை... என்னுடைய மற்றுமொரு மகன் ஜோசப் நீண்ட நாட்களுக்கு முன்பாக இப்பொருளை என்னிடத்தில் கொண்டு வந்தான். அவன் ஒரு நாள் அந்த அறையிலே உட்கார்ந்துக் கொண்டு அந்த படத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆகவே பில்லி... அல்லது ஜோசப்பிற்கு படகுகள் என்றால் மிகவும் பிடிக்கும். சிறிய பிள்ளைகள் படகுகள் குதிரைகளை விரும்புவது உங்களுக்குத் தெரியும். ஆகவே, அவன் என்னிடம் ''அப்பா, இயேசு படகு ஒன்றை வைத்திருந்தாரா?'' என்று கேட்டான். நான், “எனக்கு தெரியவில்லை'' என்றேன். 7ஆதலால் அவன் எழுந்து வெளியே சென்றுவிட்ட பிறகு, ''அவர் ஒரு படகை வைத்திருந்தாரா?'' என்று நான் நினைக்க நேர்ந்தது. ஆகவே அதிலிருந்து ஒரு பொருளை எடுத்து இங்கே என்னுடைய புத்தகத்தில் குறித்துக் கொண்டேன். ஆகவே, “இயேசு ஒரு படகு வைத்திருந்தாரா?'' என்று நான் சிந்திக்க நேர்ந்தது. அவர், இங்கே பூமியின் மேல் இருந்த போது, பிறப்பதற்காக ஒரு கர்ப்பப்பையையும், அடக்கம் பண்ணப்படுவதற்கு ஒரு கல்லறையையும், பிரசங்கம் செய்வதற்கென்று ஒரு படகையும் இரவல் வாங்க வேண்டியதாயிருந்தது. ஆனால் பழைய சீயோனின் கப்பலிற்கு அவர் தான் மாலுமி ஆவார். நிச்சயமாக, அவர்தான். ஆகவே, நாங்கள் திரும்பிச் செல்வதற்கு முன் நான் சிந்தித்துக் கொண்டிருந்த அந்த பொருள்களின் பேரில் பிற்பாடு அணுகுவேன். உங்களுக்கு தெரியுமா, நான் இந்த கூடாரத்திலிருந்துதான் பேச விரும்புகிறேன், ஏனெனில், இது நம்முடைய சபையாகும். பரிசுத்த ஆவியானவர் என்னவெல்லாம் கூறுகின்றாரோ அதை விடுதலையோடு தங்குதடையின்றி எங்களால் பேச முடிகின்றது. மற்ற இடங்களிலோ, மனிதன் எவ்வளவாக ஒரு வரவேற்பளித்து கவனித்தாலும் கூட, நீங்கள் சற்று இடுக்க நிலையை உணர்வீர்கள். ஏனென்றால், நீங்கள் யாரோ ஒருவருடைய சபையில் இருக்கின்றீர்கள். ஆகவே, அவர்களுடைய சிந்தனைகளுக்கும், போதனைகளுக்கும் மதிப்பளிப்பளிக்கும் விதத்தில் ஒரு மிருதுவான நபராக நீங்கள் இருக்க விரும்புவீர்கள். 8அங்கே சகோதரன். பர்காம் (Burcham) அவர்களுடைய இடத்தில் இந்த வாரம் ஒரு அருமையான சமயத்தை கொண்டிருந்தோம். அங்கே அவர்கள் பாலாடைக்கட்டி தயாரிக்கின்ற தொழிற்சாலைக்கு நான் சென்றேன். இக்காலையில் அவரும், அவரது மனைவியும், பிள்ளையும் இங்கிருப்பதை நான் காண்கிறேன். ஒரு பாலாடைக்கட்டி தொழிற்சாலை நான் சென்றிருக்கின்ற மற்ற இடங்களில் உள்ளவைகளைப் போன்று. ஓ, வழவழப்பாக அழுக்காக இருக்கும் என்று நான் எப்போதும் நினைத்தத்துண்டு. என்னே, ஒரு காரியத்தை என்னால் கூற முடியும், நீங்கள் நிச்சயமாக நம்பலாம். அந்த இடம் அசுத்தமாகவே இல்லை. நான் சென்ற இடங்களிலேயே மிகவும் சுத்தமான இடமாக அது இருந்தது, அதுவும் ஒரு தொழிற்சாலையில். ஆகவே நான் அதை உணரவில்லை. ஓ, ஒருவேளை அவர்கள் ஒரு நாளில் நூறு பவுண்ட் பாலாடைக் கட்டியை தயாரிக்கலாம் என்று நான் எண்ணினேன். ஆகவே அவர்கள் ஒருநாளில் ஆறு டன் உற்பத்தி செய்கின்றனர். மூன்று தொழிற்சாலைகள் இயங்குகின்றன. ஓ, என்னே, இந்த பாலாடைக் கட்டிகளை எல்லாம் யார் சாப்பிடுவது?'' என்று நான் எண்ணினேன். ஆனால் கர்த்தர் இந்த மனிதனை ஆசீர்வதித்துள்ளார். அவருடைய வீட்டில் தங்கின சிலாக்கியம் எனக்கு உண்டாயிருந்தது, ஒரு மிக அருமையான வீடு, ஒரு அருமையான மனைவி. ஆகவே அவர்கள் செய்கின்ற விதமாகவே, கிறிஸ்துவிற்கென்று அனுதினமும் ஜிவிக்கக் கூடாது என்பதற்கான காரணமே அவர்களுக்கு உண்டாயிருக்கவில்லை. அவருடைய பிள்ளைகளை நான் சந்தித்தேன், அவர்கள் மிகவும் அருமையான பிள்ளைகள் ஆவர். ஒருவரோடு ஒருவர் நாம் கொண்டிருக்கும் இந்த ஐக்கியத்திற்கு நாங்கள் மிக்க நன்றியுள்ளவர்களாய் இருக்கின்றோம். அவர்களுடைய முன்னாள் மேய்ப்பர் எனக்கு தெரிந்த ஒரு நபர், சகோதரன் கர்லி (Gurly) ஐக்கிய பெந்தெகொஸ்தே விசுவாசத்தில் ஒரு அருமையான மனிதன் என்பதை நான் அறிந்து கொண்டேன். ஜோனஸ்போரோ, அர்க்கன்ஸாஸில் அநேக வருடங்களுக்கு முன்னர் நான் சந்தித்திருந்த ஒரு மனிதன் ஆவார். ஆகவே அவர்கள். அவர், தான் அவர்களுடய போதகர் என்று எனக்கு தெரியாதிருந்தது. 9இப்பொழுது, மாலையில் இருக்கும் ஆராதனைகளை நினைவில் கொள்ளுகள். ஆகவே பிறகு, கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த ஞாயிறும் நாம் பேசுவோம் என்று எதிர் பார்க்கின்றோம். அதன் பிறகு அதற்கு அடுத்த ஞாயிறு என்று நான் நினைக்கின்றேன், பிறகு நான் சிக்காகோ செல்ல வேண்டும். பிறகு சிறிது காலம் என்னுடைய குடும்பத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும், அல்லது திரும்பவுமாக அரிசோனாவிற்கு செல்ல வேண்டும். ஆதலால் பிள்ளைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட ஏதுவாகும். ஆகவே, தன்னுடைய ஆராதனைகளை எடுக்க போதகரை நாம் நச்சரிப்போமாக. 10வேதத்திலிருந்து சில வாக்கியங்களை படித்த பிறகு, அவைகளை விரித்துரைப்போம். நீண்ட இச்செய்திகளை அளித்து முடிக்க எவ்வளவு நேரம் செல்லும் என்று எனக்குத் தெரியாது. நீண்ட நேரம் நான் பிரசங்கம் செய்வதைக் குறித்து ஒரு நாள் நான் குறிப்பிட்ட போது, ஒருவர் என்னிடம், ''நீங்கள் சில நிமிடங்கள் மாத்திரம் பேசினால், இரகசியங்களை எங்களால் புரிந்து கொள்ள முடியாது. அந்த இரகசியங்கள் வெளிப்படும் வரை, நீங்கள் பேசிக் கொண்டே இருங்கள்'' என்றார். அம்முறையையே நாம் கையாள வேண்டுமென்று கர்த்தர் சித்தம் கொண்டுள்ளார் போலும்! நாம் மறுபடியும் தலை வணங்குவோம். 11ஆண்டவரே, பீடத்தினின்று உம்வார்த்தை அளிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் என்றாவது ஒருநாள் அது அளிக்கப்படாமல், கடைசி முறையாக மூடப்படும். பிறகு வார்த்தை மாம்சமாகும். நாங்கள் இந்தக் காலை நேரத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் வாசிக்கப் போகும் இந்த வார்த்தையின் பாகங்களை உமது பரிசுத்த ஆவியானவர் மூலம் அறிந்து கொள்ளும்படி அவைகளைத் திறந்தருளும். நாங்கள் கற்றறிய வேண்டியவைகளை பரிசுத்த ஆவியானவர் தாமே போதிப்பராக! நாங்களும் ஒவ்வொரு வார்த்தையையும் கூர்ந்து கவனித்து, அதை ஆழமாக சீர்தூக்கிப்பார்க்க அருள்புரியும். இது பதிவு செய்யப்படும் ஒலிநாடாக்களை கேட்பவரும் நன்கு கவனித்து, பரிசுத்த ஆவியானவர் எங்களுக்கு வெளிப்படுத்த முயல்வதை நாங்கள் அறிந்து கொள்ள உதவிபுரியும். நீர் எங்களை அபிஷேகித்தால் அந்த அபிஷேகம் வீண் போகாது என்பதை உணருகிறோம். ஒரு நோக்கத்திற்காகவே நீர் எங்களை அபிஷேகம் செய்கின்றீர். எங்கள் நன்மைக்கு ஏதுவாகவே அது கிரியை செய்கின்றது. கர்த்தாவே, எங்கள் இருதயங்களையும் சிந்தனைகளையும் திறந்தருளும். எங்களுக்குப் பேசுவதற்கு உரிமையும், கேட்பதற்கு உரிமையும், தேவனுடைய வார்த்தையிலிருந்து புறப்பட்டு வருவதை விசுவாசிப்பதற்கு ஏற்ற விசுவாசத்தையும் தந்தருளும். அப்பொழுது வரப்போகும் அந்த மகத்தான நாளில், அது நித்திய ஜீவனை எங்களுக்கு அளிக்கும். எங்களை இன்று ஆசீர்வதியும். நாங்கள் தவறு செய்யும் போது, எங்களைக் கடிந்து கொள்ளும். எங்களிடம் இருக்கின்ற தவறுகளை உணர்த்தும். நாங்கள் நடக்க வேண்டிய வழியை எங்களுக்குப் போதித்து, எங்களுக்கு ஜீவனையளிப்ப தற்காக எங்களுக்காக மரித்த இயேசு கிறிஸ்துவுக்கு மகிமையை கொண்டு வர, நாங்கள் எவ்விதம் இவ்வுலகில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ள எங்களை ஆசீர்வதியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென். 12வேதாகமத்திலிருந்து இரண்டு பாகங்களை இன்று படிக்க விரும்புகிறேன். அவைகளில் ஒன்று யாத்திராகமம் புஸ்தகத்தில் காணப்படுகின்றது. அவையிரண்டும் யாத்திராகமம் புஸ்தகத்தில் உள்ளன. ஒன்று, 13வது அதிகாரம், 21 மற்றும் 22வது வசனம் பிறகு மற்றொன்று, 14வது அதிகாரம்; 10, 11, 12 வசனங்கள். இப்பொழுது யாத்திராகமம்; 13: 21,22 வசனங்களைப் படிக்கிறேன். அவர்கள் இரவும் பகலும் வழி நடக்கக் கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழி நடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினி ஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார். பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினி ஸ்தம்பமும், ஜனங்களிடத்திலிருந்து விலகிப் போகவில்லை. (ஆங்கில வேதாகமத்தில், “அவர் பகலிலே மேகஸ்தம்பத்தையும் இரவிலே அக்கினி ஸ்தம்பத்தையும் ஜனங்களிடத்திலிருந்து விலக்கவில்லை'' என்றுள்ளது - தமிழாக்கியோன்.) இப்பொழுது, யாத்திராகமம்; 14:10 முதல் 12 வசனங்கள். பார்வோன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி எகிப்திலே பிரேதக் குழிகள் இல்லையென்றா வனாந்திரத்திலே சாகும்படிக்கு எங்களை கொண்டு வந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன? நாங்கள் எகிப்திலே இருக்கும் போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்திரத்திலே சாகிறதைப் பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலை செய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள். இன்னும் சில வசனங்களை தொடர்ந்து வாசிக்கப் போகிறேன். அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி; பயப்படாதிருங்கள் (இங்கே நன்றாகக் கவனியுங்கள். அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி; பயப்படாதிருங்கள், நீங்கள் நின்று கொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்கு செய்யும் இரட்சிப்பை பாருங்கள். இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிரும்பீர்கள் என்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு. நீ உன் கோலை ஓங்கி, உன் கையை சமுத்திரத்தின் மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போவார்கள். எகிப்தியர் உங்களை பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருயத்தைக் கடினபடுத்தி, பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரை வீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன். இப்படி நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரை வீரராலும் மகிமைப்படும் போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் என்றார். அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவ தூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேகஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது. அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இரா முழுவதும் ஒன்றொடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று. மோசே தன் கையை சமுத்திரத்தின் மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுவதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டு போக பண்ணினார்; ஜலம்பிளந்து பிரிந்து போயிற்று. இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடது புறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது. அப்பொழுது எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரை வீரரோடும் அவர்கள் பிறகாலே சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள். கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் கர்த்தர் அக்கினியும், மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தியரின் சேனையை பார்த்து, அவர்கள் சேனையைக் கலங்கடித்து, அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும் அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார். அப்பொழுது எகிப்தியர்: இஸ்ரவேலரை விட்டு ஓடிப்போவோம்; கர்த்தர் அவர்களுக்குத் துணை நின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிறார் என்றார்கள். 13கர்த்தருடைய வசனம் மகத்துவம் பொருந்தினதாகவும் நன்றாகவும் இருப்பதால், அதை படிப்பதை நிறுத்த முடியவில்லை. அதை நாம் படிக்கும் போது, நமது ஜீவனாகவே அது ஆகி விடுகின்றது. இன்று காலையில் இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டாலும் ஆரம்பத்திலேயே நான் இதைக் கூற வேண்டுமென்று நினைக்கிறேன். நான் இதில் என்னையே காண்பிக்கின்றேன். காரணம் என்னவென்றால் நான்... நேற்று படித்துக் கொண்டிருந்த போது இப்பொருளை தேர்ந்தேடுத்தேன். பிறகு நான், ''நான் அப்படியே செல்கிறேன், கர்த்தருக்கு சித்தமானால் இந்தப் பொருளின் பேரிலேயே பேசலாம், ஏனென்றால் இது என்னை உந்தித் தள்ளுகின்றதாய் இருக்கின்றதே'' என்று எண்ணினேன். நாம் எல்லோரும் இதைக் காண ஏவப்படுகின்றோம் என்று நான் நம்புகின்றேன். நாம் இதைச் சற்று ஆராய்ந்து, அப்போது இருந்த அந்நாளை இப்பொழுது இருக்கின்ற இந்நாளுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். 14இன்று பேசுவதற்கு நான் தெரிந்து கொண்ட பொருள் முறையிடுகிறது என்ன? சொல்! என்னும் மூன்று வார்த்தைகளைக் கொண்டதாகும். 15ம் வசனத்தில் தேவன் மோசேயினிடம், ''நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு'' என்றார். ''முறையிடுகிறது என்ன? சொல்!'' நாம் இப்பொழுது மகத்தான ஒரு தலைப்பை உடையவர்களாய் இருக்கிறோம். நான் பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலின்படியே சீக்கிரமாய் முடிக்க பிரயாசப்படுகின்றேன். நான் எண்ணின் இந்த... இந்த பொருளில், துன்பம் வந்த நேரத்தில் மோசே கர்த்தரை நோக்கி மன்றாடுகிறான். துன்பத்தின் மத்தியில் கர்த்தர் மோசேயைக் கடிந்து கொள்கிறார். நெருக்கத்தின் போது கர்த்தரிடம் முறையிடுதல் மனித இயல்பாகும். ஆனால், அதற்காக கர்த்தர் கடிந்து கொள்கிறார் என்பதைக் காணும் போது, அது மிகவும் கடூரமான செயலாக காணப்படுகிறது. 15அநேக சமயங்களில் நமக்குச் சொந்தமான வழியில் வேத வசனங்களைப் படித்தால், மிகவும் கடினமான ஒன்றாய் புலப்படும். ஆனால் அதை நன்கு ஆராய்ந்தால், சர்வ ஞானமும் பொருந்திய தேவன், தாம் செய்வது இன்னதென்று அறிந்திருக்கிறார் என்பது விளங்கும். இத்தகைய செயல்களை எவ்விதம் செய்ய வேண்டுமென்றும், மனிதனுடன் எவ்விதம் செயல்பட வேண்டுமென்றும், அவர் அறிந்திருக்கிறார். மனிதனின் அந்தரங்கங்களை அவர் அறிவார். அவர் மனிதனை அறிந்துள்ளார். நமக்கோ அது தெரியாது. நமது அறிவை உபயோகித்து மனிதனை அறிந்து கொள்ள நாம் விழைகிறோம். ஆனால், அவரோ மனிதனுக்குள் உண்மையாக என்ன இருக்கிறது என்பதை அறிவார். மோசே தாலந்துகளையுடைய ஒரு பையனாக இவ்வுலகில் பிறந்தான். ஒரு தீர்க்கதரிசியாகவும், ஜனங்களை மீட்பவனாகவும் ஆகும் பொருட்டே அவன் இவ்வுலகில் தோன்றினான். அதற்குரிய தன்மைகளைக் கொண்டவனாகவே, அவன் பிறந்தான். அவ்வாறே ஒவ்வொரு மனிதனும், அவன் நியமிக்கப்பட்டுள்ள நிலைக்கு ஏற்ப தன்மைகளைப் பெற்றவனாகவே இவ்வவுலகில் பிறக்கிறான். தேவன் முன்னறிவினால் முன்குறிக்கிறார் என்பதனை நான் முற்றிலும் நம்புகிறேன். 16ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனந்திரும்ப வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். ஆனால் அவர் தேவனாயிருப்பதால், தொடக்கத்திலிருந்து முடிவுவரை அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும், பாருங்கள். இல்லையெனில் அவர் முடிவற்றவராக (infinite) இருக்க முடியாது. அவர் முடிவற்றவராக இல்லையெனில் அவர் தேவனாக இருக்க முடியாது. ஒருவரும் கெட்டுப்போகக் கூடாது என்று அவர் விரும்பினாலும், யார்யார் கெட்டுப் போவார்கள் என்றும், யார்யார் கெட்டுப் போவதில்லை என்பதையும் அவர் முன்கூட்டியே அறிந்திருக்கிறார். தேவன் தம் முன்னறிவினால், இரட்சிக்கப்பட வேண்டுமென்று விருப்பங் கொண்டவர்களை அறிந்திருந்த காரணத்தால், நியாந்தீர்க்கப்பட்ட இவ்வுலகினின்று அவர்களை இரட்சிக்கக் கருதியே இயேசு இவ்வுலகில் தோன்றினார். தேவனுடைய முன்னறிவு என்னும் போதகத்தைத் தவிர வேறு எவ்விதம் இதை போதிக்க முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் ''ஆதி முதல் அந்தம் வரை எல்லாம் அறிந்திருக்கிறவர்'' என்று வேதம் தெளிவாக எடுத்துரைக்கின்றது. எனவே, ஒருவன் தான் இல்லாத ஒன்றாக வேறுவிதமாக இருக்க முனைந்தால் அவன் போலியாளாகக் கருதப்பட வேண்டும். சீக்கிரமாகவோ அல்லது பிறகோ அவன் யாரென்று வெளியரங்கமாகும். உங்கள் பாவங்கள் உங்களைக் கண்டு பிடிக்கும். அவைகளை நீங்கள் மறைக்க முடியாது. பாவங்களை மறைப்பதற்கு இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மாத்திரமே உள்ளது. உலகத் தோற்றத்துக்கு முன்பே தேவன் உங்களை அழைத்திராவிடில் இயேசுவின் இரத்தத்தை நீங்கள் பூசிக்கொள்ள முடியாது. இயேசுவின் இரத்தம் காலால் மிதிக்கப்படுவதற்கும், கேலி செய்வதற்கும், பொல்லாங்காய் பேசப்படுவதற்கும் சிந்தப்படவில்லை. ஒரு தெளிவான நோக்கத்திற்கென்று அது சிந்தப்பட்டது. அதனுடன் விளையாடுவதற்கோ, அல்லது பாவம் மூடப்படாத நிலையில் அவன் பாவங்கள் மூடப்பட்டது என்று கூறுவதற்கோ அது சிந்தப்படவில்லை. உலகத் தோற்றத்துக்கு முன்பே ஒருவனின் பெயர் ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படாவிட்டால் அவன் பாவங்கள் இரத்தத்தினால் மறைக்கப்பட முடியாது. இயேசுவும் கூட, ''என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்'' என்றும். “பிதாவானவர் எனக்குத் கொடுத்தயாவும், ''இறந்த காலம் என்னிடத்தில் வரும்,'' என்று கூறியுள்ளார். எனவே தேவனுடைய வார்த்தையைப் பொய்யுரைக்க செய்ய உங்களால் கூடாது. அது சத்தியத்துக்காகவும் சீர்திருத்தத்துக்காகவும், நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. 17மோசே விசுவாசம் என்னும் வரம் கொண்டவனாய் பிறந்தான். அவனுக்கு மகத்தான விசுவாசம் இருந்தது. அந்த விசுவாசம் வெளிப்படுவதை நாம் சற்று பின்னர் காணலாம். அவன் ஒரு மகத்தான குடும்பத்தில் பிறந்தான், நாம் அறிந்துள்ளபடி அவனுடைய தகப்பனும், தாயும் லேவி குடும்பத்திலிருந்து வந்தவர்கள். அவன் வரலாறு யாத்திராகமம் புஸ்தகத்தில் மிகவும் அழகாக எழுதப்பட்டுள்ளது. இந்த மகத்தான கதாபாத்திரத்தின் வாழ்க்கையை மிகவும் அழகாக சித்தரிக்கின்றது. ஆகவே அவன் வேதாகமத்தில் உள்ள மிகவும் மகத்தான கதாபாத்திரத்தில் ஒருவனாய் இருந்தான். ஏனெனில் கர்த்தராகிய இயேசுவிற்கு இவன் முன்னடையாளமாகத் திகழ்ந்தான். கர்த்தராகிய இயேசுவின் பிறப்பைப் போல் அவனுடைய பிறப்பும் வினோதமான ஒன்றாகும். கர்த்தராகிய இயேசுவை போன்று அவனும் உபத்திரவத்தின் காலத்தில் பிறந்தான். கர்த்தராகிய இயேசுவை போன்றே அவன் மீட்பவனாக, இரட்சகனாகப் பிறந்தான். கர்த்தராகிய இயேசுவை போலவே, விரோதியினிடத்திலிருந்து அவனும் தன்னுடைய பெற்றோர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்தான். கர்த்தராகிய இயேசுவை போலவே, அவனும் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். கர்த்தராகிய இயேசுவை போன்றே அவனும் ஒரு பிரமாணத்தை அளிப்பவனாக இருந்தான். ஆகவே, நாம் காண்பதென்னவெனில் அவன் அந்த கன்மலையின் மேல் மரித்தான், பிறகு அவன் உயிரோடு எழுந்திருக்க வேண்டும், ஏனெனில் எண்ணூறு ஆண்டுகள் கழித்து அவன் கர்த்தராகிய இயேசுவுடன் மறுரூப மலையின் மேல் உரையாடி கொண்டிருந்தான். பாருங்கள்? அவன் மரித்தவுடனே தேவதூதர்கள் அவனைக் கொண்டு சென்றனர். அவன் அடக்கம் பண்ணப்பட்ட ஸ்தலம் யாருக்குமே தெரியாது. பிசாசும் கூட அதனை அறியான். வெளிப்படையாகக் கூறினால் அவன் அடக்கம் பண்ணப்படவில்லை என்று நான் விசுவாசிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் முழுவதும் பின்சென்ற கன்மலையின் மேல் மரித்துப் போனான் என்றும், கர்த்தர் அவனைக் கொண்டு சென்றார் என்றும் நான் விசுவாசிக்கிறேன். அவன், கிறிஸ்துவுக்குப் பரிபூரண முன்னடையாளமாய் இருந்தான். அவன் ஜனங்களின் மேல் ராஜாவாக இருந்தான். அவன் நியாயப்பிரமாணத்தை அளித்தவனாவான். கிறிஸ்து எப்படி இருந்தாரோ, அதற்கு அவன் ஒவ்வொன்றிலும் சாயலாய் இருந்தான். 18இப்பொழுது, அவன் பிறக்கும் போதே இச்சிறந்த வரங்களையும் தன்மைகளையும் உடையவனாய்ப் பிறந்தான். அவைகளை ஜீவனுக்குக் கொண்டு வருவதற்காக ஏதோ ஒன்று அதன் மீது பளிச்சிட வேண்டியதாயிருந்தது. உயிர்ப்பிக்க ஒரு சம்பவம் அவன் வாழ்க்கையில் நிகழ வேண்டிய அவசியமிருந்தது. பாருங்கள், உலகத்தோற்றத்தின் போதே தேவனுடைய வித்தானது நமக்குள்ளே வைக்கப்பட்டது. ஆகவே அந்த ஒளியானது அதன் மேல் பட்ட உடன் அதை ஜீவனுக்குள் கொண்டு வருகின்றது, ஆனால் முதலாவதாக வித்தின் மீது அந்த ஒளியானது பட வேண்டும். கிணற்றடியிலிருந்த சமாரியா ஸ்திரீயைக் குறித்து நான் அநேக முறை உங்களுக்குக் கற்பித்திருக்கிறேன். அவள் ஒரு கீழ்த்தரமான ஸ்திரீயாய் இருந்தாலும், அவளுடைய - அவளுடைய வாழ்க்கை மோசமாக இருந்தாலும், ஏனெனில் பாரம்பரியங்கள் அவளைத் தொடாதிருந்தால் அவள் அவ்விதமாக இருந்தாள், ஆனால் அந்த வெளிச்சம் முதன் முறையாக அவள் மேல் விழுந்ததும், அது, என்னவென்பதை அவள் உடனே அறிந்து கொண்டாள். ஏனெனில் அதற்கு மறு உத்தரவு கொடுக்க அவளுக்குள் ஏதோ ஒன்று இருந்தது. “ஆழம் ஆழத்தை நோக்கிக் கூப்பிடும் போது, அதற்கு மாறுத்தரம் அருள வேறொரு ஆழம் எங்காவது இருக்க வேண்டும்.'' மோசே ஒரு தீர்க்கதரிசியாகப் பிறந்தான். எனினும் அவன் மானிட அறிவைக் கொண்டு கற்பிக்கும் பள்ளியில் கல்வி பயின்றான். அவன் பார்வோனின் அரண்மனையில் வளர்ந்து வந்தான். யோசேப்பின் காலத்திலிருந்த 'செதி' (Seti) என்னும் பெயர் கொண்ட பார்வோன், யோசேப்பு தேவனுடைய தீர்க்கதரிசி என்று அறிந்து, அவனைக் கனம் பண்ணினான். ஆனால் செதிக்கு பின்பு ராமசேஸ் என்னும் பார்வோன் தோன்றினான். ஆகவே, ராமசேஸ் யோசேப்பைக் குறித்து அக்கரை கொள்ளவில்லை. ஆகவே, ஆதலால் அப்பொழுதுதான் பிரச்சனை ஆரம்பித்தது, இப்பொழுது, யோசேப்பை அறியாத பார்வோன் ஒருவன் அங்கே எழும்பினான். நாம் இந்தப் பொருளின் முக்கிய பகுதிக்கு வரும் முன்பாக, இந்த சிறந்த தன்மைகளைக் குறித்து நாம் சிறிது நேரம் பேசுவோம். நான் ஒரு வித்தியாமான விதத்தில் பொருளை அமைத்து, அதை விவரிப்பவன் ஆவேன். இவ்விதமாக நாம் அதைச் செய்ய இன்று காலையிலே கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக! 19விசுவாசம் என்னும் மகத்தான வரத்தைக் கொண்டவனாய் மோசே பிறந்தான். பற்றியெரியும் முட்செடியின் அருகில்; அவன் அபிஷேகம் பெற்று, தேவனுடைய ஜனங்களை விடுவிக்க வேண்டுமெனும் கட்டளையை தேவனிடமிருந்து பெற்றான். இப்பொழுது பாருங்கள்? என்ன மகத்தான தன்மைகளை உடைய இந்த மனிதனாக இருந்தான். அவன் ஒரு நோக்கதிற்காக இவ்வுலகில் தோன்றினான். அவனுக்காக தேவன் ஒரு நோக்கத்தை வைத்திருந்தார். நீங்கள் இங்கு வந்திருப்பதில் தேவன் ஒரு நோக்கத்தையும் உடையவராயிருக்கிறார் பாருங்கள்? நீங்கள் மாத்திரம் உங்களுக்கென நியமிக்கப்பட்ட ஸ்தலத்திற்கு வந்து விட்டால், உங்களுக்கும் தேவனுக்கும் எவ்வளவோ தொல்லைகள் தீரும். இவ்விதமாய் பிறந்த மோசே, பிற்பாடு அவன் அபிஷேகம் பண்ணபட்ட இடத்திற்கு கொண்டு வரப்பட்டான். கவனியுங்கள், அவன் அந்த மக்களை விடுவிக்கவே பிறந்தான் என்ற நுண்ணறிவு கருத்தை கொண்டதாய் எல்லா விசுவாசத்துடனும் அந்த வித்து அங்கே புதைந்து கிடந்தது. ஆயினும் பற்றியெரியும் முட்செடியிலிருந்து புறப்பட்ட ஒளி அவன் மேல் விழும் வரை, அது உயிர் பெறவில்லை. அவன் அதைக் கண்களால் காணும் வரையில், அவன் படிக்கத்தக்கதாக ஏதோ ஒன்றல்ல, ஆனால் தன்சொந்த கண்களால் கண்ட ஏதோ ஒன்று; ஏதோ ஒன்று அவனிடம் பேசினது, அவனும் அதற்கு மாறுத்தரம் அருளினான். ஓ! அது எவ்விதம் காரியங்களை ஜீவனுக்குக் கொண்டு வருகின்றது! 20நான் எண்ணுவது என்னவெனில், எந்த ஒரு மனிதனோ, ஸ்திரீயோ, சிறுவனோ அல்லது சிறுமியோ வார்த்தையைக் குறித்த அறிவுபடைத்திருப்பதன் மூலம் ஒரு ஸ்திரமான அஸ்திபாரம் பெற முடியாது. வார்த்தையை தத்ரூபமாக்கும் ஒளியை அவர்கள் சந்திக்க வேண்டும். அவ்வாறே எந்த ஒரு சபையும் எவ்வளவாக வேத அறிவு படைத்திருந்தாலும், அடிப்படையானதாக இருந்தாலும் அந்த ஜனங்கள் நடுவில் இயற்கைக்கு மேம்பட்டவைகள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் அதைக் கண்டால் தவிர, அந்தச் சபையால் வளர முடியாது. ஏதோ ஒன்றுடன் அவர்கள் பேசி, அது அவர்களுக்கு மறுஉத்தரவு அருளும் ஒன்றாக இருக்க வேண்டும். அது எழுதப்பட்ட வார்த்தையை உறுதிப்படுத்தும். 21இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள். மோசே இந்த பற்றியெரியும் முட்செடியைச் சந்தித்த போது அந்த வார்த்தை சரியாய் உறுதிப்படுத்தப்பட்டது. அதுதான் அந்த வார்த்தையாக இருந்தது. ''இந்த சத்தம் என்னவாயிருக்கிறது? இங்கு பிரசன்னமாயிருப்பது என்ன?'' என்று மோசே கவலையடைய தேவையேயில்லை. ஏனெனில், தேவன் ஏற்கெனவே ஆதியாகமத்தில், ''உன் சந்ததியார் அன்னிய தேசத்திலே பரதேசிகளாயிருப்பார்கள். நானூறு ஆண்டுகள் கழித்து அவர்கள் இந்த தேசத்திற்கு திரும்ப வருவார்கள். ஏனெனில் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை'' என்று எழுதிவைத்திருந்தார். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முன்பே தேவன், இஸ்ரவேல் ஜனங்கள் அன்னிய தேசத்தில் பரதேசிகளாயிருந்து, நானூறு ஆண்டுகள் துன்பத்தை அனுபவிப்பார்கள் என்றும், அதன் பின்பு அவர் பலத்த கரத்தினால் அவர்களை வெளியே கொண்டு வருவார் என்றும் உரைத்திருந்தார். ஆகவே, நீங்கள் பாருங்கள், இந்த எரிகின்ற முட்செடியுடன்... இதனை மோசே அறிவுப்பூர்வமாக அறிந்திருந்தான்; அவனுக்குள் ஜெநிபிக்கப்பட்டிருந்த அந்த வித்து அவன் இருதயத்தில் புதைந்து கிடந்தது. இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்கவே அவன் பிறந்திருக்கிறான் என்று மோசே நன்கு அறிந்திருந்தான். எனவே, அவன் தான் வார்த்தையுடன் பெற்றிருந்த புத்திகூர்மையாகிய அனுபவத்தின் மூலம் அவர்களை வெளியே கொண்டுவர முயற்சித்து கொண்டிருந்தான். அவன் அந்த நேரத்தை அறிந்திருந்தான். இஸ்ரவேல் ஜனங்கள் நானூறு ஆண்டுகள் எகிப்தில் கழித்து விட்டார்கள் என்று வேத வாக்கியங்கள் யாவும் விளம்பின. அவருடைய வருகையை குறித்தும் எடுத்துக்கொள்ளப் படுதலைக் குறித்தும் சற்று முன்பு ஒரு மனிதன் என்னிடம் கேட்டது போல, நாம் அதை இப்பொழுது அறிந்துள்ளதைப் போல நாம் அறிவோம். நாமும் நமது காலத்தை இவ்வுலகில் கழித்து விட்டோம். எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும் சமயம் அருகாமையிலுள்ளது. சபையை ஒன்று சேர்த்து, நாம் வாழ்கின்ற இந்த சரீரங்களை மறுரூபப்படுத்தும் இயற்கைக்கு மேம்பட்டதை, பெலனை அளிக்கின்றதுமான எடுத்துக் கொள்ளப்படுதலின் விசுவாசத்திற்காகவும் நாம் காத்துக் கொண்டிக்கிறோம். மரித்துப் போனவர்களை தேவன் இப்பொழுது நம் கண்களுக்கு முன்பாக உயிரொடெழுப்பி அவர்களை நம் முன் கொணர்ந்து நிறுத்து வதையும், ஒரு மனிதன் நிழலைப் போன்று மாறும் அளவிற்கு அரித்தெடுக்கும் புற்றுநோயை சுகமாக்கி அவனை மறுபடியுமாக திடகாத்திரமான, ஆரோக்கியமான மனிதனாக தேவன் மாற்றுவதை நாம் காணும் போது, அது ஜனங்களுக்கு எடுத்துக்கொள்ளப் படுதலுக்கேற்ற விசுவாசத்தை நமக்களித்தாக வேண்டும். ஒளி வானத்திலிருந்து பிரகாசித்து, எக்காளம் தொனிக்கும் போது, கிறிஸ்துவின் சரீரம் விரைவில் ஒன்று சேர்க்கப்பட்டு, நொடிப் பொழுதில் மறுரூபமடைந்து, ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படும். ஆம், அத்தகைய ஒரு சம்பவம் நிகழ வேண்டும். வேத கல்லூரிகள் இதனைக் குறித்த அறிவைப் பெற்றிருக்கலாம். ஆனால் அவைகளால் அதனை உற்பத்தி செய்ய முடியாது. அவர்கள் அறிவுபூர்வமாக சரியாகவே இருக்கின்றனர். ஆனால், நீங்கள் அந்த ஒளியைச் சந்திக்க வேண்டும்! அந்த ஒன்றை நீங்கள் கண்டடைந்தாக வேண்டும். 22ஆகவே இங்கே மோசே தன்னுடைய மகத்தான அழைப்பை தேவனுடைய வார்த்தையின் மேல் ஆதாரமாகக் கொண்டிருந்தான். அது மகத்துவமான ஒன்றாயிருந்தது. ஒரு நாள் அவன் அந்த ஒளியைச் சந்தித்தான். அந்த அதே வார்த்தையானது அவனுடன் திரும்பப் பேசினது. அப்பொழுது அவன் அபிஷேகத்தைப் பெற்றான். தனக்குள்ளே எதை அவன் கொண்டிருந்தானோ அதை அது அபிஷேகித்தது, உள்ளே இருந்த அதை - அந்த - அந்த அறிவாளிகள் விசுவாசித்த அது, அந்த விசுவாசமானது தேவனிடம் அவன் கொண்டிருந்த நம்பிக்கையின் மேல் அஸ்திபாரப்படுத்தப்பட்டிருந்தது, அது அவனை தன்னுடைய தாயாரிடமிருந்து வேறு பிரித்தது. அந்த ஒளியின் பிரசன்னத்தில் அவன் கலந்த போது, அவன் விசுவாசித்ததை அது அபிஷேகித்தது. பாருங்கள்? என்னே ஓர் அபிஷேகம்! ஆகவே, அந்த அபிஷேகத்துடன் அவன் கட்டளையும் பெற்றான். இப்பொழுது அவனுடைய தாயார் இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்தும், அவர்கள் மீட்பைக் குறித்தும் அவனிடம் கூறியிருந்தார்கள். எனவே, என்ன நிகழப் போகின்றது என்பதை அவன் சுய அறிவினால் அறிந்திருந்தான். இஸ்ரவேல் ஜனங்கள் மீட்கப்பட வேண்டிய நாளில் அவன் வாழ்ந்து வந்தான் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனால் இங்கே தான் ஒரு தோல்வியுரும் நபர் என்பதை அவன் கண்டு கொண்டான், ஆதலால் அவனுடைய... அவனுடைய விசுவாசம் சற்று பின்னோக்கி சறுக்கிகுன்றியிருக்கலாம். ஆனால் அவன் முட்செடியின் அருகில் வந்த போது, கர்த்தர் அவனிடம், “என் ஜனங்களின் கூக்குரலை நான் கேட்டு, அவர்கள் பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இவர்களுடன் நான் செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்து இறங்கி வந்தேன்'' என்றார். ''நான்'' என்று அவர் கூறுவதைக் கவனிக்கவும். இதோ, தனிப்பட்ட மறுபெயர் (personal pronoun) ''அவர்களை விடுவிக்க நான் இறங்கி வந்தேன்.'' 23ஆகவே இப்பொழுது, இதனை நான் கூற விரும்புகின்றேன்... அது தேவ தூஷணமாக தென்பட்டால் தேவனே என்னை மன்னியும். மனிதனின் மூலமேயன்றி, நான் வேறு எவ்விதத்திலும் பூமியில் கிரியை செய்வது கிடையாது. நான் - நான் - நான் திராட்சை செடி, நீங்கள் கொடிகள். ஒரு மனிதனை நான் கண்டு பிடித்து, அவன் மூலமாகவே என்னை வெளிப்படுத்துவேன். ஆகவே, நான் உன்னைத் தெரிந்து கொண்டேன். அவர்களை வெளியே கொண்டு வர உன்னை அனுப்புகிறேன் பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள். ''உன் வாயுடன் நான் இருப்பேன். இந்த கோலை எடுத்துக் கொண்டு போ“ என்றார். அதற்கு மோசே, ''நீர் என்னை அபிஷேகம் செய்து அனுப்பி இந்த செயல்களைப் புரிவீர் என்பதற்கு நான் அத்தாட்சியை காணலாமா?'' என்று கேட்டான். ''உன் கையிலிருக்கிறது என்ன?'' என்றார். அவன், “ஒரு கோல்'' என்று விடையளித்தான். ''அதை கீழே போடு“ என்றார். அது சர்ப்பமாக மாறினது. மோசே விலகி ஓடினான். அவர், ''அதை கையிலெடு'' என்றார். அது கோலாக மாறினது. ''உன் கையை உன் மடியிலே போடு'' என்றார். அவன் அதை வெளியே எடுத்தபோது, குஷ்டரோகம் பிடித்திருந்தது. அதை மறுபடியும் மடியிலே போட்டபோது குணமடைந்தது. 24அவன் தேவனுடைய மகிமையை கண்டான். அதன் பின்பு மோசே அவரிடம் கேள்வி எதுவும் கேட்கவில்லை. மறுபடியும் அவன் வனாந்திரத்துக்கு ஓடிச் செல்லவில்லை என்பதை கவனித்தீர்களா? அவன் தான் அபிஷேகம் பண்ணப்பட்டதை அறிந்திருந்தான். தன்னுடைய இருதயத்தில் இருந்த இந்த எல்லா காரியங்களையும் இந்த மகத்தான, அருமையான தன்மைகளும்.... இப்பொழுது அபிஷேகிக்கப்பட்டதை அவன் அறிந்திருந்தான். அவன், அவன் தயாராக இருக்கின்றான். செல்லத்தக்கதாக அவன் தயாராக இருக்கின்றான். ஆதலால், அவன் எகிப்தை நோக்கி செல்கின்றான். ''நான் உன்னோடு கூட இருப்பேன்“ என்று தேவன் அவனிடம் கூறியிருந்தார். அத்துடன் அது நிறைவு பெற்றுவிட்டது. அவனுடைய இருதயத்தில் இந்த மகத்தான அழைப்பிற்கு, ''நான் உன்னோடு கூட இருப்பேன்” என்பதை மாத்திரமே மோசே அறிந்திருக்க வேண்டியதாயிருந்தது. ஆகவே இப்பொழுது தேவன், ''நான் உன்னோடு கூட இருப்பேன்“ என்று சொன்னார். ''நான் கர்த்தரை, சந்தித்தேன்' இருக்கிறேன்' என்பவர் என்னை அனுப்பினார் என்பதை உங்களிடம் அவர் கூற சொன்னார்'' என்ற மோசேயினுடைய கூற்றை தேவனும் உறுதிப்படுத்தியிருந்தார். பாருங்கள்? இப்பொழுது அவர்கள், “இதோ ஒரு மனிதன், இன்னுமொரு யூதன் வந்திருக்கிறான். நம்மை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க காலாகாலங்களில் எத்தனையோ மூட பக்தி கொண்டவர்கள் தாங்கள் வகுதத்த திட்டங்களுடன் தோன்றினார்கள் அல்லவா? இவனும் அவர்களில் ஒருவனாக இருக்கலாம்'' என்று கூறினார்கள். மக்கள் அடிமைகளாகவும் அல்லது எதாவது ஒன்றிற்கு அடிமைத்தனத்தில் இருக்கும் போதும் எப்படியிருப்பார்களென்று உங்களுக்கு தெரிந்திருக்கும், ஏனென்றால் இப்படிப்பட்ட வித்தைகள் திட்டங்கள் அடிக்கடி அவர்கள் மத்தியில் வந்து கொண்டிருக்கும் என்று நீங்கள் அறிவீர்கள். ஆதலால் மோசே, தேவன் மோசேயிடம் ''நான் உன்னோடு கூட இருப்பேன். நான் உனக்குள் இருப்பேன். என்னுடைய வார்த்தைகள் உன் வார்த்தைகளாயிருக்கும். என் வார்த்தைகளை நீ பேசு. நான் கூறுவதை மாத்திரம் நீ கூறு'' என்று வாக்கருளியிருந்தார். 25பிறகு மோசே சென்று மக்களுக்கு இந்த அழைப்பை விடுத்து பார்வோனுக்கு முன்பாக நின்று என் ஜனங்களை போகவிடு என்று எபிரேயர்களின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார்'' என்று கூறினபோது, பார்வோன் அவர்களைப் போகவிடவில்லை. இப்பொழுது மோசே மூப்பர்களுக்கு முன்பாகவும் பார்வோனுக்கு முன்பாகவும் தேவன் செய்த அடையாளங்களை செய்து காண்பித்தான். ''நாளை இந்நேரம் சூரியன் இருளடைந்து, எகிப்து முழுவதிலும் இருள் சூழும்“ என்று மோசே கூறினான். அவன் கூறியவாறே சம்பவித்தது. அதன் பின்பு மோசே, ''வண்டுகள் நிலத்தின் மேல் வரக்கடவது'' என்று சொல்லி, தன் கோலை நீட்டி வண்டுகளை வரவழைத்தான். வண்டுகள் நிலத்தின் மேல் பரம்பின. அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான். அவன் தீர்க்கதரிசனம் உரைத்தயாவும் சரியாக அதே விதமாகவே நடந்தேறியது. அது தேவன் ஆகும். பாருங்கள்? 26தேவன் அவனை தன் பிறப்பிலிருந்து அழைத்து, மகத்தான விசுவாசத்தைக் கொண்ட தன்மைகளை அவனுக்குள் வைத்து, பிறகு தம்முடைய சமுகத்தோடு கீழே இறங்கி வந்து அவனுக்குள் இருந்த அந்த மகத்தான காரியத்தை அபிஷேகித்து, தம்முடைய வார்த்தையுடன் அவனை அனுப்பிவைத்தார். ஆகவே அவன் விளம்பின காரியங்கள் சரியாக உறுதிப்பட்டது. எத்தனை போலிகள் தோன்றினாலும் பரவாயில்லை. எத்தனை எத்தனை காரியங்கள் சம்பவித்தாலும் பரவாயில்லை, தேவன் அதைப்பேசி... மோசே அடையாளங் கண்டு கொள்ளப்பட்டான். மோசே, மோசே என்ன கூறினானோ அதை தேவன் கனப்படுத்தினார், ஏனெனில் தேவனுடைய வார்த்தை மோசேக்குள் இருந்தது. “நான் உன்வாயுடன் இருப்பேன். நீ சரியானவைகளைப் பேசக்கடவாய்.” இப்பொழுது தேவன் என்ன கூறுகின்றார், தேவன் என்ன கூறுகின்றார், அவர் அதை மோசேயின் மூலமாக பேசினார். ஆகவே, அவன் விளம்பினவைகளை அது ஊர்ஜிதப்படுத்தி உறுதிப்படுத்தினது. 27அவனுடைய வினோதமான பிறப்பை குறித்தும், விடுதலையின் மணி நேரமானது எப்படி நெருங்கி வந்திருக்கிறதென்று என்பதைக் குறித்தும் அவனுடைய தாய் ஏற்கெனவே அவனிடம் கூறியிருந்தாள். லேவியின் வழிவந்த அம்ராம், யோகெபேத் தம்பதிகள் ஒரு இரட்சகனை அனுப்பத்தக்கதாக தேவனை நோக்கி ஜெபம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆம், தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறும் நேரம் நெருங்கும் போது, அது ஜனங்களை தேவன் பேரில் பசிதாகம் கொள்ளச் செய்து, அவர்களை ஜெபிக்கத் தூண்டும். மோசேயின் தாயாகிய யோகெபேத், அநேகமுறை மோசேயிடம் அவன் பிறந்த நோக்கம் என்னவென்பதை அறிவுறுத்திக் கொண்டிருந்தாள். அவனுடைய தாய், நாம் அந்தக் கதையை அறிந்துள்ளபடி. அவள் அவனுடைய ஆசிரியையும் கூட. ஆகவே அவள், தான் எவ்விதம் ஜெபித்தாள் என்றும், “மோசே இஸ்ரவேல் ஜனங்களை விடுவிப்பதற்கெனவே நீ பிறந்திருக்கின்றாய். மகனே, மற்றவரைக் காட்டிலும் நீ வித்தியாசமானவன். நீ, பிறந்த போது இயற்கைக்கு மேம்பட்ட காரியங்கள் சம்பவித்தன” என்றும் அவனிடம் எத்தனையோ முறை கூறினாள். சில நாட்கள் முன்பு மோசேயின் வரலாற்றைக் குறித்து நான் நாடக பாணியில் சிறுவர்களுக்குக் கொடுத்தேன். அதில் நான், அம்ராம் அந்த அறையில் ஜெபம் செய்துக் கொண்டிருந்த போது ஒரு தூதன் தன் பட்டயத்தை உருவி வடதிசையை நோக்கிக் காண்பித்து, “உனக்கு ஒரு குழந்தை பிறக்கும். அவன் இஸ்ரவேல் ஜனங்களை வடதிசையிலுள்ள வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குக் கொண்டு செல்வான்'' என்று கூறினதை, அவன் கண்டான், என்று நான் கூறினேன். சிறுவர் இதைப்புரிந்து கொள்ள வேண்டுமென்று கருதி நான் இங்ஙனம் நாடக பாணியில் விவரித்தேன்.ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தும் காரியங்களை நீங்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு, சிறுவர்கள் கிரகித்துக் கொள்ள முடியாது. 28மோசேயின் தாய் இவையனைத்தையும் அவனிடம் கூறியிருந்ததும், இவையெல்லாவற்றையும் அவன் அறிந்திருந்தான், ஆனால் இன்னுமாக, வேறொரு அனுபவம் அவனுக்குத் தேவையாயிருந்தது. அந்த அந்த போதனையெல்லாம் அருமையாகத்தான் இருந்தது, ஆனால் ஒரு தனிப்பட்ட தொடர்பு ஒன்று அவனுக்குத் தேவையாயிருந்தது. இன்றைக்கு உலகத்திற்கு அதுதான் தேவையாயுள்ளது. இன்றைக்கு சபைக்கும் அதுதான் தேவைப்படுகின்றது. தேவனுடைய குமாரரும், குமாரத்திகளாகிய ஒவ்வொருவருக்கும் அது தேவையாயிருக்கின்றது. அவ்வாறு இருக்க வேண்டுமென்றால், உங்களுக்குத் தனிப்பட்ட ஒரு தொடர்பு தேவையாயிருக்கின்றது, பாருங்கள் ஏதோ ஒன்று. வார்த்தை உண்மையென்றும், அது சரியானதென்றும் நீங்கள் அறிந்திருந்தாலும் கூட, அப்பொழுது அது தொடர்பு கொள்ளும் போது காரியம் நடைபெறுவதை நீ காண்பாய், பிறகு நீ சரியான பாதையில் இருக்கின்றாய் என்பதை அறிந்துக் கொள்வாய். பாருங்கள்? கவனியுங்கள். அது எப்பொழுதுமே வேத பூர்வமானதாய் இருக்கும். வார்த்தையுடன் சரியாக நிற்கும். ஏனெனில், இங்கு அது நின்றது. அம்ராமின் ஜெபமும் சரியாக வேத வாக்கியங்களுடன் ஒத்ததாக அமைந்திருந்தது. தேவனுடைய வாக்குத்தத்தத்தை ஒட்டியே அவர்களுடைய ஜெபங்களும் ஏறெடுக்கப்பட்டன. அவர்களுடைய, காலத்தில் தேவன் தாம் அளித்திருந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதாக கூறியிருந்தார். அவர்கள் அதற்காக ஜெபம் செய்தனர், ஆகவே இங்கே ஒரு சரியான குழந்தை பிறந்தது. ஆகவே அவர்கள்..... 29கவனியுங்கள். இது எனக்குமிகவும் விருப்பமானது. பாருங்கள், எபிரெய குழந்தைகளைக் கொல்ல பார்வோன் உத்தரவிட்டான். அவர்கள் குழந்தைகளைக் கத்தியால் குத்தி கொலை செய் தனர். அக்குழந்தைகளின்சடலங்கள் முதலைகளுக்கு இரையாயின. அதனால் முதலைகள் கொழுத்தன. ஆனால் மோசேயின் பெற்றோர் பார்வோனின் கட்டளைக்கு அஞ்சவில்லை'' என்று வேதம் கூறுகின்றது. ஏனெனில் அவர்கள் குழந்தை ஒரு நோக்கத்துக்காகப் பிறந்துள்ளது என்பதை அறிந்திருந்தனர். அவர்களுடைய ஜெபங்களுக்கு தேவன் பதிலளிக்கும் வகையில் அவன் பிறந்தான், என்பதை அவர்கள் உறுதியாக நம்பினர். ஆகவே இப்பொழுது, மோசேயின் பின்னணியாக இவை இருந்தன. ஆகவே இஸ்ரவேல் புத்திரரை மீட்க வேண்டும் என்ற அதே நோக்கத்திற்காகத் தான் அவன் அனுப்பப்பட்டிருக்கின்றான் என்பதை மோசே அறிந்திருந்தான். சூழ்நிலை அனைத்தும் ஒருங்கேசேர்வதைக் கவனியுங்கள். “இந்தக் காரியம் நிறைவேறும் என்று வேதம் உரைக்கின்றது. அது அப்படியே நிறைவேறுகின்றது. ''இன்னின்ன காலத்தில் அது நிறைவேறும் என்று வேதம் கூறுகின்றது. அவ்வாறே, குறிக்கப்பட்ட காலத்தில் அது பிழையின்றி நிறைவேறுகின்றது. பிறகு அவையெல்லாம் ஒன்றாக இணைந்து, நமக்கு ஒரு காட்சியை வரைந்து காண்பிக்கின்றன. 30இந்த கூடாரத்தில் கூடிவந்துள்ள நாம்... இந்த மணி நேரத்தின் மக்களாகிய நாம்...... சகோதரன் நெவில், நாம் முதிர்வயது அடைந்து, தலைமயிர் நரைத்து, தோள்கள் சரிந்து போவதைக் காண்கிறோம். உலகமும் நிலைதவறி தடுமாறிக் கொண்டிருப்பதையும் நாம் கண்டுவிடுகிறோம். அதே சமயத்தில், தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறும் தருணம் நெருங்கி வருவதையும் நாம் அறிகிறோம். அது... அது... நான் அநேக சமயங்களில் நினைப்பதுண்டு. யாராவது ஒருவர் அதற்குள் பலவந்தமாய்ப் பிர வேசிக்கக் கூடுமானால் அவர்கள் அதைப் புரிந்து கொள்ளமாட்டார்கள், இல்லை அவர்கள் அதைப் புரிந்து கொண்டு உடனே அதற்குள் வரும் போது எடுத்து கொள்ளப்படும் காரியத்துடன் அது அவர்களை ஏறக்குறைய நித்தியத்திற்கே அனுப்பிவிடும்! எடுத்து கொள்ளப்படும் காரியத்துடன் அந்த மனிதனோ ஸ்திரீயோ, பையனோ பெண்ணோ, இப்பொழுது காண்பவைகளின் முக்கியத்துவத்தையும் அர்த்தத்தையும் அறிந்திருந்தால், எடுத்து கொள்ளப்பட வேண்டிய நேரம் அருகாமையில் வந்துள்ளது என்பதை உணர்ந்து எல்லோரும் ஒரே நேரத்தில் குதித்தெழுந்து தங்கள் கரங்களை உயர்த்தி கர்த்தராகிய இயேசுவே, போகலாம்'' என்று கூறுவார்கள் நீங்கள் பாருங்கள், ஓ, அத்தருணம் மிக அருகாமையில் உள்ளது. 31மோசே, தான் பிறந்த நோக்கத்தை அறிந்தவனாய் எபிரெய பிள்ளைகள் அடிமைகளாக உழைப்பதை, ஜன்னல் வழியாக காண்கிறான். அவன் உடனே வேதாகமத்தைத் திறந்து, “அவர்கள் நானூறு ஆண்டுகள் பரதேசிகளாய் இருப்பார்கள்; அதன் பின்பு அவர்களைப் பலத்த கரத்தினால் வெளியே கொண்டு வருவேன்'' என்று எழுதப்பட்டுள்ளதைப் படிக்கிறான். பற்றியெரியும் முட்செடியின் அருகில் அவன் கர்த்தரிடமிருந்து கட்டளைப் பெற்று அபிஷேகம் பண்ணப்பட்டவுடன், அவனுடைய விசுவாசமானது கண்டது, விசுவாசத்தினாலே அந்த மக்களைப் பார்த்து அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் என்பதை அறிந்து கொண்டான். ஏனெனில் உலகமானது... வார்த்தை அவ்விதம் கூறியிருந்தது. அவர்கள் இவ்வுலகைச் சார்ந்தவரல்ல, மற்றவர்களைப் போலவும் அவர்கள் இல்லாதிருந்தனர். அவர்கள் வித்தியாசமானவர்களாய் இருந்தனர். அவர்கள் வித்தியாசமானவர்கள். எகிப்தின் ஆடம்பரத்தின் மத்தியில் அவர்கள் பைத்தியக்காரர் போலவும் தீவிர மதவெறி பிடித்தவர்கள் போலவும் காணப்பட்டனர். மோசேயோ, பார்வோனின் குமாரனாக இருந்தான். அவன் பார்வோனுக்கு அடுத்தபடியாக அரசாட்சி செய்ய வேண்டியவனாய் இருந்தான். அவனுக்குள் உண்மையான விசுவாசம் புதைந்துகிடந்திருந்த காரணத்தால், அவன் சுதந்தரிக்க வேண்டிய எகிப்தின் ஆடம்பரங்களையும், அந்த காரியங்களையும் அவன் நோக்கிப் பார்க்கவில்லை. அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் கண்டு, அது நிறைவேறும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை அறிந்திருந்தான். ஆகவே, அந்த மனிதன் என்னவெல்லாம் நினைத்துப் பார்த்திருப்பான். 32என்றாவது ஒரு நாளிலே நான் மறுகரையில் அவனை சந்திக்கும் போது, அவனிடம் அதைக் குறித்து பேச விரும்புகிறேன். ''சகோதரனே, அது மூடத்தனம் என்று நீங்கள் ஒருகால் கூறலாம். இல்லை, தேவ கிருபையினால் நான் அவனைச் சந்திக்கத் தான் போகிறேன். மோசேயாகிய அவனையே. ஆம், ஐயா அப்பொழுது நான் இதைக் குறித்து அவனுடன் உரையாடுவேன். அவன் தன் ஆயத்தத்தைக் கண்டபோது, அது எவ்விதம் என்று நான் அவனைக் கேட்க எவ்வளவாய் விரும்புகிறேன்! சாத்தான் அவனை அணுகி, “ஆ, ஜனங்கள் உன்னை நம்பமாட்டார்கள், ஊ ஊம் - அதெல்லாம் ஒன்றுமில்லை'' என்று சொல்லி அவனை சோர்வுறச் செய்திருப்பான். 33ஆனால் அவனுக்குள் புதைந்திருந்த வித்தின் மேல் ஒளிபட்டவுடன் அது உயிர்பெற்றது, ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகின்றது என்று அவன் அறிந்து கொண்டான். அவன், கடிகாரத்தை பார்த்தவுடன் தேவன் அளித்திருந்த வாக்குத்தத்தம் நிறைவேறும் சமயம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தான். அப்பொழுது, இந்த மகத்தான காரியங்களை அவன் கண்டபோது.... இவையனைத்தையும் அவன் ஒருங்கே இணைத்துப் பார்த்தான். வேதம் கூறியுள்ள நேரம், அவனுடைய தாயும், தந்தையும் செய்த ஜெபம். ஆகவே, ஒரு வினோதமான பிறப்பை உடையவனாக இருந்தான். ஒரு வித்தியாசமான குழந்தை. ஆகவே, காலமெல்லாம் ஏதோ ஒன்று அவனுக்குள் இருந்துக் கொண்டிருந்தது. ஆகவே, இப்பொழுது அவன் மெள்ள நழுவிச் சென்று, தன்னுடைய பள்ளியில் இராணுவப் பயிற்சி பெற்று, இஸ்ரவேல் ஜனங்களை மீட்க எண்ணினான். ஆனால் அவன் முயற்சியோ தோல்வியுற்றது பின்னர் அவன் வனாந்திரத்துக்குச் சென்று, ஓர் அழகான எத்தியோப்பியா பெண்ணை விவாகம் செய்தான். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு கெர்சோம் என்று பெயரிட்டனர். ஒரு நாள் அவன், ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சமயத்தில், மலையின் உச்சியிலுள்ள புதர் திடீரென்று பற்றியெரிகிறதைக் கண்டான். ஆகவே உடனே அவன் மேலே சென்றான். அது அவன் மனதில் எழுந்த கற்பனையல்ல அல்லது மாயமான தோற்றமல்ல. அவனுக்குள்... அங்கு ஆபிரகாமின் தேவன் அக்கினி ஸ்தம்ப ஒளியில் புதரில் இருப்பதைக் கண்டான். அது அக்கினி அலைகள் செல்வது போல் காணப்பட்டது. ஆனால், அது புதரை எரிக்கவில்லை. அங்கிருந்து வேதத்தின் சத்தம் - தேவனுடைய சத்தம் - அவனுடன் பேசி, ''நான் உன்னை தெரிந்து கொண்டேன். நான் தெரிந்து கொண்ட மனிதன் நீயே. இந்த நோக்கி கத்திற்கென உன்னை நான் எழுப்பிருந்தேன். அதை அடையாளங்களால் உனக்கு இங்கேயே நிரூபிக்கிறேன். நீ இறங்கி சென்று இஸ்ரவேலரை விடுவிக்கப் போகிறாய். ஏனெனில், என் வார்த்தை நிறைவேற வேண்டும்'' என்றார். (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்கபீடத்தை ஒருமுறை தட்டுகிறார் - ஆசி.) ஓ! அவ்வாறே இந்நாளுக்கென்று அவர் உரைத் துள்ளவார்த்தையும் நிறைவேற வேண்டும். அது நிறைவேறும் நேரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யார் என்ன கூறினாலும் பரவாயில்லை; அந்த வார்த்தை நிறைவேறித் தான் ஆக வேண்டும். ''வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் அவர் வார்த்தையோ ஒழிந்து போவதில்லை.'' 34இப்பொழுது மோசே இவையனைத்தையும் ஒருங்கே இணைத்து, எல்லா பக்கங்களிலும் நோக்கின போது. அவன் விசுவாசத்தை அது அபிஷேகித்தது. ஆமென்! ஓ என்னே! வேதவாக்கியம் அது என்ன என்பதை சுட்டிக்காட்டி கொண்டிருந்தாலும், தேவன் பேசி கொண்டிருந்ததையும், அங்கே அதனுடைய சாட்சியத்தையும் அவன் தானே அதைக் காண்கையில், அவன் கிரியைச் செய்யும்படியாய், அவனுக்குள் என்ன விசுவாசத்தைக் கொண்டிருந்தானோ அதை அது அபிஷேகித்தது. அது நமக்கு என்ன செய்ய வேண்டும்? நமக்கு மனந்திரும்புதல் அவசியம். நமக்கு எழுப்புதல் அவசியம். எனக்கும் அதை கூறிக் கொள்கிறேன். பாருங்கள்? எனக்கு குலுக்கப்படுதல் தேவையாயிருக்கின்றது. எனக்கு ஒன்று அவசியமாயிருக்கிறது. நான் இந்த காலையில் எனக்கே நான் கூறிக் கொள்கிறேன். என்னைக் குறித்தே பேசிக் கொள்கிறேன். எனக்கு - எனக்கு - எனக்கு ஒரு - ஒரு விழிப்பு தேவையாயிருக்கின்றது. அந்த மகத்தான அத்தாட்சியைக் குறித்து நான் எண்ணுகையில், எல்லாக் காரியங்களும் சரியாக, பரிபூரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்தது. அது மோசேயினுடைய விசுவாசத்தை அபிஷேகித்தது. அப்பொழுது, அவன் ஒன்று மற்றவன் என்பதை உணர்ந்தான். 35இங்கே அவன் எகிப்தை விட்டு ஓடிப் போகின்றான் உண்மையில் அவன் எகிப்தில் கலவரம் அல்லது புரட்சியை உண்டாக்கியிருக்க முடியும். ஆயிரமாயிரம் படைவீரர் அவன் பக்கம் இருந்தனர். அவன் படையைத் திரட்டி, எகிப்துக்கு விரோதமாக படையெடுத்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக, அதைச் செய்வதற்கும் கூட அவன் பயந்து நடுங்கினான், சேனைகள் அவன் பக்கம் இருந்த போதிலும்..... ஆனால், இப்பொழுது இங்கே நாற்பது ஆண்டுகள் கழித்து, எண்பது வயதுடையவனாய், ஒரு கோலை மாத்திரம் கையில் ஏந்தி அவன் திரும்பி வருகிறான். ஏன்? அவன் இருதயத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது தத்ரூபமான நிலையடைந்து விட்டது. அவன் அபிஷேகத்தையும் அப்பொழுது பெற்றுக் கொண்டான். கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை அவன் கொண்டிருந்தான் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். இப்பொழுது அவனை ஏதும் தடுத்து நிறுத்த முடியாது. அவனுக்கு இராணுவம் தேவையில்லை. தேவன் அவனோடு கூட இருந்தார். அது மாத்திரமே அவனுக்கு அவசியமாயிருந்தது; தேவன் அவனோடு கூட இருப்பது. ஏதோ ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக தேவன் உங்களை அனுப்புகிறார் என்பதை நீங்கள் அறிந்திருந்து, அது நிறைவேறும் சமயம் வரும் போது, வேறொன்றும் அந்த ஸ்தானத்தைப் பறித்து கொள்ள முடியாது. அது அவ்வளவே. 36சில சமயங்களில், கர்த்தர் என்னிடம் ஒரு குறிப்பிட்ட காரியம் நடைபெறுவதைக் குறித்து என்னிடம் கூறி, பிறகு நான் சென்று அது அங்கே இருப்பதை நான் காண்கையில், எப்பேற்பட்ட... ஓ, எப்படிப்பட்ட ஒரு உணர்வு! அதை நான் நினைத்துப் பார்ப்பேன். சூழ்நிலை ஏற்கெனவே கட்டுக்குள் உள்ளது, அவ்வளவு தான், ஏனெனில் தேவன் அவ்வாறு கூறியுள்ளார். ஃபின்லாந்தில் வாகன விபத்தில் கொல்லப்பட்ட ஒரு சிறுவன் உயிரோடெழுப்பப்பட்டதைக் குறித்து உங்களில்அநேகர் நினைவில் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். ஆகவே அங்கே நான் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தேன். பிறகு அந்த குழந்தை இருந்த இடத்திலிருந்து அப்பாலே நடந்து செல்ல ஆரம்பித்தேன், பிறகு திரும்பி நோக்கிப் பார்த்தேன். ஏதோ ஒன்று என் தோள்களின் மீது தன் கரத்தை வைத்தது. சகோ. மூர் ஆக இருக்கும் என்று எண்ணி திரும்பிப் பார்த்தேன். ஆனால் யாரும் அருகில் இல்லை. பிறகு, நான் திரும்பி மேல் நோக்கி மலையைப் பார்த்தேன், “நல்லது, இந்த மலையை நான் எங்கோ பார்த்திருக்கிறேனே, நாங்கள் இவ்வழியாக வரவில்லையே, வேறு வழியாகத் தானே வந்தோம். அந்த மலை எங்கே'' என்று யோசித்தேன். ஆகவே உடைந்து கிடந்த மோட்டார் காரை நான் கண்டேன். அந்த சிறுவனின் மயிர் கத்தரிக்கப்பட்டிருந்தது. சகோ. வே (Bro. Way) அன்று விழுந்த போது, அவர் கண்கள் எவ்விதம் இருந்ததோ, அதுபோன்றே அவன் கண்களும் பின்புறமாகத் திரும்பியிருந்தன. கால்களில் காலுரைகளை (Socks) அவன் அணிந்திருந்தான். அவன் கால்கள் முறிந்து போயிருந்தன. இரத்தம் அவன் கண்கள், மூக்கு காதுகளின் வழியாக வெளிவந்து கொண்டிருந்தது. அவன் அரைகால் சட்டை அணிந்திருந்தான். அவன் இடுப்பில் அது பொத்தான்கள் மூலம் இறுகப் பிடித்திருந்தது. அநேக ஆண்டுகளுக்கு முன்பு, நாம் நீண்ட காலுரைகளை அணி வது வழக்கமல்லவா? அது போன்ற காலுரைகளை அவன் அணிந்திருந்தான். 37ஆகவே நான் சுற்றிலும் பார்த்தேன், அங்கே இரண்டு வருடங்களுக்கு முன்பு பரிசுத்த ஆவியானவர் என்னிடம் என்ன கூறியிருந்தாரோ, அவையெல்லாம் சரியாக அவ்வாறே கூறின விதமாகவே இருந்தது. அது நடந்தேறும் என்று தேசம் முழுவதிலும் நீங்கள் எல்லோரும் இதை குறித்து உங்கள் வேதாகமத்தின் பின்பாகத்தில் எழுதி வைத்தீர்கள். அந்த சூழ்நிலை அங்கு உருவானவுடன், அவன் எத்தகைய மரணம் எய்திருந்தாலும் யார் என்ன கூறினாலும், கவலையில்லை. அது, முடிந்துபோன ஒன்றாய் இருக்கின்றது. அவன் உயிரோடெழத்தான் வேண்டும். அப்பொழுது நான், ''இச்சிறுவன் உயிரோடெழாவிடில் கள்ள தீர்க்கதரிசியாகவும் நான் தேவனுக்கு பொய் பிரதிநிதித்துவம் செய்கிறவனாக இருக்கிறேன்'' என்றும் கருதுங்கள். ''ஏனெனில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இவ்விதம் சம்பவிக்கும் என்று அவர் என்னிடம் உரைத்தார்'' என்றேன். இந்த ஊழியக்காரர்களும், மற்ற எல்லோரும் உங்கள் வேதாகமத்தின் பின்னால் உள்ள தாளில் (Fly leaf) எழுதிவைத்திருக்கிறீர்கள் அது சரியாக அவ்விதமே இருந்தது. அதை மறுபடியும் படித்து பாருங்கள். அது மலைப்பாங்கான தேசமாயிருக்கும் என்றும், அந்த சிறுவன் விபத்தில் மரணமடைந்து, சாலையின் வலது பக்கத்தில் கிடப்பான் என்றெல்லாம் நீங்கள் எழுதிவைத்திருக்கின்றீர்கள். அந்த சூழ்நிலை உருவானவுடன் நான், ''இதோ அது எதுவுமே இதை நிறுத்த முடியாது“ என்று கூறினேன். சூழ்நிலை ஏற்கெனவே கட்டுக்குள் வந்துவிட்டது. அப்பொழுது என் இருதயத்தில் புதைந்து கிடந்த விசுவாசம் அபிஷேகம் பெற்றது. ஓ, என்னால் அதை சரிவர விவரிக்கக் கூடுமானால் எவ்வளவு நலமாயிருக்கும்! தேவன் பேரில் நான் கொண்டிருந்த விசுவாசம், அவர் வாக்குமாறாதவர் என்று உரைத்தது. என்னிடம், “சூழ்நிலை கட்டுக்குள் வந்துவிட்டது. இரண்டு ஆண்டுகட்கு முன்பு இதைதான் நான் உனக்குக் காண்பித்தேன். அது இங்கே சரியாக அமைந்திருக்கின்றது. நீ செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் என்னவென்றால் வார்த்தையை பேசுவதாகும்'' என்றார். ஆகவே மரித்துப்போன அந்த சிறுவன் உயிரோடெழுந்தான். பாருங்கள்? 38நான் அமர்ந்து கொண்டு, அங்கே அமர்ந்திருக்கும், சகோ. ஃபிரட் சாத்மன் அவர்களையும், சகோ. பேங்க்ஸ் உட் அவர்களையும் நோக்கி கொண்டிருந்தேன். அவ்வாறே அலாஸ்கா நெடுஞ்சாலையிலும் சம்பவித்தது. நான் இந்த சபையில் நின்று கொண்டு மானைப் போன்றுள்ள மிருகத்தை குறித்தும், உரோமத்தின் முனையில் வெள்ளி நிறம் கொண்ட கரடியைக் குறித்தும் உங்களிடம் கூறினேன் அல்லவா? மானைப் போன்ற அந்த மிருகத்தின் கொம்பு நாற்பத்தி ரெண்டு அங்குலம் இருக்கும் என்றும், நான் இவ்விரண்டு மிருங்களையும் வேட்டையாடிக் கொல்லுவேன் என்றும், அச்சமயம், எத்தனை பேர் என்னுடன் இருப்பார்கள் என்றும், அவர்கள் எவ்விதம் உடை அணிந்திருப்பார்கள் என்றும் நான் இது நிகழும் அநேக வாரங்கள் முன்பே அறிவித்தேன் அல்லவா? அது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அது நிறைவேற விருக்கின்றது என்பதைச் சிறிதேனும் அறியாதவனாய் நான் அங்கு சென்றபோது, அந்த மிருகம் அங்கு படுத்து கொண்டிருப்பதைக் கண்டேன். ஆகவே நான் சென்ற போது, அது - அது... அது நடக்க முடியாத ஒரு காரியம். இந்த செய்தியை அல்லது இச்செய்தியை ஒலிநாடாவின் மூலம் கேட்கும் வேட்டைக்காரன் யாராகிலும் இருந்தால், ஒரு மிருகத்தை அணுகி ஒருவன் சென்றால், அது குதித்து ஓடிவிடும் என்பதை அறிவான். ஆனால் அந்த மிருகமோ அவ்விதம் செய்யவில்லை. 39அது இப்போது என் குகை அறையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வாறே உரோம முனையில் வெள்ளி நிறம் கொண்ட கரடியும் தொங்கிக் கொண்டிருக்கிறது. கொம்பு சரியாக நாற்பத்தி ரெண்டு அங்குலம் நீளம் உண்டு என்பதைக் காண்பிக்க, ஒரு அங்குல நாடா அதனுடன் பொருத்தியிருக்கிறது. சாதாரணமாக, வேட்டையாடின பின்பு கொம்பு உலரும் போது சற்று சுருங்கும். ஆனால் இந்த கொம்போ இப்பொழுதும் சரியாக நாற்பத்திரண்டு அங்குல நீளம் உள்ளது. பாருங்கள்? அந்த கரடியும் அவர் கூறியவாறே ஏழு அடி நீளம் உள்ளது. கரடியும் அவர் கூறின மற்றெல்லாமுமே அவ்விதமே நிறைவேறியது. நான் வேட்டையாடச் சென்றபோது, என்னுடன் இருந்த பச்சை சட்டை அணிந்திருந்த மனிதன், இப்பொழுது பாருங்கள். ''சகோ. பிரான்ஹாமே, நீர் கூறின இந்த மிருகத்தை (மானைப் போன்ற மிருகத்தை) வேட்டையாடிவிட்டோம். மலையின் தாழ்வாரத்துக்கு செல்லும் முன்பு, உரோம முனையில் வெள்ளி நிறம் கொண்ட கரடியை வேட்டையாடுவோம் என்று கூறினீரே“ என்று கேட்டார். நான் அவரிடம், ''அது கர்த்தர் உரைக்கிறதாவது.'' தேவன் அவ்விதம் கூறினார் என்றேன். அவரோ, “ஆனால் சகோ. பிரான்ஹாம் இங்கிருந்து மைல் கணக்கில் என்னால் காண முடிகிறது, ஆனால் ஒன்றுமே தென்படவில்லை. அது எங்கிருந்து வரப்போகின்றது? என்று கேட்டார். 40அதற்கு நான், “எந்த கேள்வியும் கேட்க எனக்கு உரிமையில்லை. தேவன் அவ்விதம் கூறினார். அவர் யேகோவாயீரே. அவரால் ஒரு கரடியை இங்கு கொண்டுவர முடியும். அங்கு ஒன்றை அவரால் வைக்க முடியும்'' என்று விடையளித்தேன். அவர் அவ்விதமே செய்தார். அது அங்கே இருக்கின்றது. அது, சூழ்நிலை கட்டுக்குள் வருவதாகும். இஸ்ரவேலரை விடுவிக்கவே அவன் எழுப்பப்பட்டான் என்று மோசே கண்டவுடன், அந்த அழைப்பை விடுத்த அந்த மகத்தான தேவனை அவன் முகமுகமாய் தரிசித்தான். அவர் அவனை இதற்கென்று அபிஷேகம் செய்து, தெரிந்து கொண்டு, “மோசே, இது உன் அழைப்பு, நான் உன்னை அனுப்புகிறேன். என் மகிமையை உனக்குக் காண்பிக்க போகின்றேன். இதோ, நான் முட்செடியில் எரிந்து கொண்டிருக்கிறேன். நீ இறங்கி, அங்கு செல்வாயாக. நான் உன்னுடன் இருப்பேன்” என்றார். அவனுக்கு ஒரு கோல் கூட அவசியமில்லை. ஏனெனில் அவன் வார்த்தையை உடையவனாக இருந்தான். உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தை. ஆகவே அவன் அங்கு சென்றான். அவனுக்குள் இருந்த விசுவாசத்தை அச்சம்பவம் அபிஷேகித்தது. கடைசி நாட்களில் வாழும் நாம் தேவன் புரியும் அடையாளங்களைக் காணும் போது, அது நம்மையும் அபிஷேகம் செய்கின்றது. வானத்திலிருந்து அரசியல் ஆதிக்கம் வரை கடைசி நாட்களில் இவையாவும் நிகழும் என்று வேதம் உரைக்கின்றது. இந்நாட்களில் ஜனங்களின் இயல்பு எவ்வாறு இருக்குமென்றும், உலகம் நெறி தவறுமென்றும், ஆண்களும், பெண்களும் என்ன செய்வார்களென்றும் சபைகள் என்ன செய்யுமென்றும் நாடுகள் என்ன செய்யுமென்றும், தேவன் எவ்விதம் கிரியை செய்வாரென்றும் எழுதப்பட்டுள்ளது. ஆகவே அவையனைத்தும் நம் கண் முன்னால் நிறைவேறுவதை நாம் காண்கிறோம். ஓ, அது நம் விசுவாசத்தை அபிஷேகம் செய்கின்றது. அது மகத்தான காலச் சக்கரங்களில் நம்மை சூழச் செய்கின்றது. பாருங்கள்? உலகத்தின் மற்ற காரியங்களிலிருந்து அது நம்மை வேறு பிரிக்கின்றது. பாருங்கள்? நாம் எவ்வளவு எளியவராயிருந்தாலும், அல்லது சிறுபான்மையோராயிருப்பினும், மற்றவருடைய கேலிக்கு ஆளானாலும் கவலையில்லை. அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்காது. அது அவ்வளவே நாம் அதைக் காண்கிறோம். நமக்குள் ஏதோ ஒன்று புதைந்து கிடக்கின்றது. இந்த நாளைக் காண நாம் முன் குறிக்கப்பட்டிருக்கின்றோம். ஆகவே, அவைகளைக் காண கூடாதவாறு எதுவும் நம்மை தடை செய்ய முடியாது. ஆமென். இங்கே தேவன் அதை உரைத்திருக்கின்றார். அது, ஏற்கென வேசம்பவித்து விட்டது. அவைகளை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அதற்காக நாம் தேவனை துதிக்க எவ்வளவாக கடமைப்பட்டிருக்கிறோம்! ஓ, இவை நிகழ்வதை நாம் காணும் போது, அது நம் விசுவாசத்தை ஊக்குவிக்கின்றது. 41இப்பொழுது, எகிப்தின் பொக்கிஷங்களைக் காட்டிலும் இயேசுவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று மோசே கருதினான் என்று நாம் மறுபடியும் வாசிக்கின்றோம். இப்பொழுது, கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று கருதினான். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். ''கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தை,'' என்பதைக் கவனிக்கவும். பாருங்கள். கிறிஸ்துவை சேவிப்பதனால் நிந்தை உண்டாகும். இவ்வவுலகில் நீங்கள் புகழ்வாய்ந்தவராக இருந்தால், நீங்கள் கிறிஸ்துவைச் சேவிக்க முடியாது, சேவிக்கவில்லை என்று அர்த்தமாகின்றது. இல்லை, உங்களால் முடியாது. ஏனெனில், நீங்கள் பாருங்கள், அதனுடன் கூட நிந்தையும் சேர்ந்திருக்கின்றது. உலகம் எப்போதுமே நிந்தை மாத்திரமே அளிக்கும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னரே, அதனுடன் நிந்தை இணைந்திருந்தது. ஆகவே மோசே பார்வோனாக வேண்டியவனாயிருந்தான். அவன், அடுத்தபடியாக பார்வோனாக ஆக வேண்டியவன் பார்வோனின் குமாரன், ஆகவே அவன் அடுத்த பார்வோனாக வரவேண்டியவனாய் இருந்தான். அப்படியானால், அவன் ஜனங்களின் செல்வாக்கைப் பெற்றிருந்திருப்பான். இருந்த போதிலும், அவன் மதித்தான்.... பாக்கியம் (Esteem) எண்பதற்கு மரியாதை (regards) என்று பொருள்படும். ஆனால் எகிப்து தனக்கு தரக்கூடிய எல்லாவற்றைக் காட்டிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அவன் சிறந்ததாக மதித்தான். எகிப்து அவன் கைக்குள் இருந்தது. கிறிஸ்துவின் பாதையில் சென்றால் நிந்தை வருமென்று அறிந்தும், எகிப்தின் ஆடம்பரம் அனைத்தையும் அவன் நிராகரித்து, கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை ஏற்றுக்கொள்ள அவனுக்குள் ஏதோ ஒன்றுண்டு என்பதை அறிந்து கொண்டதில் அவன் மகிழ்ச்சியடைந்தான். புறம்பான சுதந்திரம் அவனுக்கு அளித்ததைக் காட்டிலும் அதைவிட மிக மகத்தான ஒரு சுதந்திரம் அவனுக்குள்ளாக அவன் கொண்டிருந்தான். 42நமக்குள் இருக்கும் விசுவாசத்தை பரிசுத்த ஆவியானவர் அபிஷேகம் செய்ய அனுமதித்து, கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்ட தேவ பக்தியுள்ள வாழ்க்கையை நாம் கைபிடித்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! இப்பொழுது, இவ்விதமான விசுவாசத்தை அவன் பெற்றிருந்தான் என்பதை கவனித்தான். ஆகவே, அந்த நிந்தையை அவன் கனமானதாக மதித்தான். யாராவது உங்களிடம், ''நீங்கள் அக்குழுவைச் சார்ந்தவர்களா?“ என்று கேட்டால், ''அஹ், உஹ், நல்லது, அஹ்'' நீங்கள் அதைக் குறித்து சற்று வெட்கமடைகின்றீர்கள். ஆனால், மோசேயோ எல்லா உலக்தைக் காட்டிலும் அதை சிறந்த பொக்கிஷமாகக் கருதினான். ஏனெனில் அவனுக்குள் இருந்த ஏதோ ஒன்று, ''நான் அதற்கு மதிப்பு கொடுக்கிறேன். அது மிகவும் கனம் பொருந்தியது. அவர்களில் ஒருவனாக நான் இருப்பதில் மகிழ்ச்சியுறுகிறேன். ஆம், நான் எகிப்தியன் என்று கூறுவதைக் காட்டிலும் எபிரெயரில் ஒருவனாகக் கருதப்படுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி'' என்று கூற முடிந்தது. பாருங்கள்? 43இன்றுள்ள கிறிஸ்தவர்களும், இன்றைக்கு இதே காரியத்தை கூற வேண்டும். ''உலகத்தின் காரியங்களையும் முறைமைகளையும் நான் கடைபிடிக்காமல், கிறிஸ்தவனாக இருப்பதில் மகிழ்ச்சியுறுகிறேன். ஒரு ஸ்தாபனத்தின் அங்கத்தினனாயிராமல், மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக, வேதம் உரைத்துள்ளபடி வாழ்க்கை நடத்துவதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறவேண்டும். ஸ்தாபனங்களைச் சேர்ந்த அங்கத்தினர்கள் என்னை, ''மூட வைராக்கியமுள்ளவன்'' என்று அழைத்தாலும், நான்-நான்-நான் இந்நாட்டின் மிக்க புகழ் வாய்ந்தவனாய் இருப்பதைக் காட்டிலும் இதையே ஒரு பெரிய சிலாக்கியமாகக் கருதுகிறேன். அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருப்பதைக் காட்டிலும், மூட வைராக்கியமுள்ளவனாய் இருப்பதையே பெரிய சிலாக்கியமாகக் கருதுகிறேன். இவ்வுலகத்தின் ராஜாவாக இருப்பதைக் காட்டிலும், இதனையே பெரிய பாக்கியமாக கருதுகிறேன். ஏனெனில், தேவன் தமது கிருபையினால் உலகத்தோற்றத்துக்கு முன்பே ஒரு வித்தை எனக்குள் வைத்து, உலகின் எல்லா காரியங்களுக்கும் மேலாக என் விசுவாசம் உயர செய்தார். அவர், இப்பொழுது என்னை அழைத்திருக்கிறார். அவர் எனக்கு அளித்துள்ள பதவியை நான் மதிக்கிறேன். 44பவுலும் கூறினான், அவன் தன்னுடைய உத்தியோகத்தை மிக உயர்வாக மதித்தான். பாருங்கள், ஆகவே, ஓ, மதித்தான். கமாலியேலை போன்று புகழ் வாய்ந்த ஒரு ஆசிரியனாவதற்குப் பதிலாக, தேவன் அவனை இம்மேலான உத்தியோகத்துக்கு அழைத்தார். கிறிஸ்துவுக்கு தியாகபலியாக ஆகவே, பவுல் அழைக்கப்பட்டான். பாருங்கள்? இப்பொழுதும் இதே காரியம் தான். கவனியுங்கள், மோசே அத்தகைய விசுவாசத்தைக் கொண்டவனாயிருந்தபடியால், அவன் கண்கள் காணும் காட்சிகளில் அவன் சார்ந்திருக்கவில்லை. இப்பொழுது அங்கு மண் பிசையும் ஒரு கூட்டம் ஜனங்களை மாத்திரம் கண்டான். அவர்கள் சிறைபட்டு அடிமைகளாயிருந்தனர். ஒவ்வொரு நாளும் அவர்களில் சிலர் கொலை செய்யப்பட்டனர்; வாரினால் அடிக்கப்பட்டு பரிகாசம் செய்யப்பட்டனர். மார்க்க சம்பந்தமான அவர்கள் நம்பிக்கை பக்தி வைராக்கியம் பொருந்தியதாயிருந்தது. “மூடத்தனமான பத்தி வைராக்கியம் கொண்டவர்கள் எனப்பட்டனர். சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த பார்வோன் அவர்கள் கடைபிடித்த மார்க்கத்தை அறியாதவனாயிருந்தான். அவன் அதை சற்றேனும் மதிக்கவில்லை. அதைக் குறித்து அவனுக்கு ஒன்றும் தெரியாது. அவன் ஒரு அஞ்ஞானி மாத்திரமே, அவன் ஒரு... இன்றுள்ள நிலையை அது எவ்வளவு அழகாக சித்தரித்துக் காண்பிக்கிறது ஒரு வித்தியாசம்மான மார்க்கமாய் உள்ளது. மோசே, அந்த ஜனாதிபதி அல்லது மிகப் பெரியவனும், வயது சென்றவனுமான பார்வோனின் சிம்மாசனத்தில் அவனுடைய மரணத்திற்கு அடுத்தபடியாக அமர வேண்டியவனாயிருந்தான். ஆயினும் அவனுக்கு விடுவிக்கப்பட்ட அழைப்பை அவன் சிறந்ததாகக் கருதினான். பார்வோன் வெளி நோக்கிய அதே ஜன்னலின் வழியாக மோசேவும் நோக்கினான். ஏனெனில் அவன் பார்வோனின் அரண்மனையில் தங்கியிருந்தான். இஸ்ரவேலர் கைகளையுயர்த்தி, தேவனிடத்தில் ஜெபம் செய்வதைப் பார்வோன் ஜன்னல் வழியாகக் கண்டால், மரிக்கும் வரை அவர்களைச் சவுக்கால் அடிக்கும்படிக்கு உத்தரவிடுவான். அவர்கள் கீழ்ப்படியாமல் போனால், அவர்களைப் பட்டயத்தால் குத்தி கொலை செய்வார்கள். அவர்களுடைய வயோதிப சரீரங்கள் மடிந்து போகும் வரை, அவர்களுக்கு கடினமாக வேலையளித்தனர். அவர்களுக்கு அரைவயிறு ஆகாரமே அளிக்கப்பட்டது. அவர்கள் பக்தி வைராக்கியமுள்ள ஒரு கூட்டமாக இருந்தனர்; ''நல்லது, அவர்கள் மனிதர்களே அல்ல, அவர்கள் வெறும் ஒரு பயித்தியக்கார கூட்டமே.“ 45ஆயினும், மோசேயினுள் இருந்த விசுவாசம், “அவர்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனங்கள்'' என்கின்ற விதமாய் நோக்கிப் பார்த்தது என்று விளம்பினது. ஆமென். அது எனக்கு மிக விருப்பமானது. அந்த விசுவாசத்தால் மோசேயின் கண்கள் எகிப்தின் ஆடம்பரத்தின் மேல் விழவில்லை. அவை, தேவனுடைய வாக்குத்தத்தத்தின் பேரில் விழுந்தன. அவனுடைய விசுவாசத்தின் கண்களான கழுகு கண்கள் எகிப்தின் ஆடம்பரத்துக்கு அப்பால் நோக்கின. அவன் இப்பொழுது, தான் ஒரு கழுகாகிக் கொண்டிருந்தான் என்பதை ஞாபகங் கொண்டான். அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். அவன் கழுகு கண்கள் எல்லாவற்றைக் காட்டிலும் உயரமாக நோக்கின. ஓ! அதை நான் எவ்வளவாக நேசிக்கின்றேன்! ஊ, ஹீம் என்னே ஆனால் இன்றைய கிறிஸ்தவர்களோ தங்கள் விசுவாசத்தின் பேரில் சார்வதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் புலன்கள் பேரிலும் காணக்கூடியவைகளின் பேரிலும், புரிந்து கொள்ளுதலின் பேரில்லும், பகட்டின் பேரிலும் சார்ந்திருக்கின்றனர். பெண்களே , நீங்கள் கூந்தலை நீளமாக வளர்க்க வேண்டும். உங்கள் முகங்களை அலங்காரம் செய்யக் கூடாது என்று நான் அடிக்கடி உங்களை எச்சரித்திருக்கிறேன். நீங்கள் உயர்குலப் பெண்மணிகளாகவும் கிறிஸ்தவர்களாகவும் இருக்க வேண்டும். பெண்கள் ஒழுக்கம் கெட்ட ஆடைகளை அணிந்து வீதிகளில் செல்வதை நீங்கள் காணும் போது, ''அவளும் கிறிஸ்தவ ஸ்தாபனத்தை சேர்ந்த ஒருவள் தானே, நான் ஏன் இத்தகைய ஆடைகளை அணியக்கூடாது? அவள் கூந்தல் கத்தரித்துக் கொண்டிருக்கிறாளே. நான் ஏன் அவ்விதம் செய்யக் கூடாது? அது அவளுக்கு அழகை ஊட்டுகின்றது அல்லவா? அவள் புத்திசாலியைப் போன்றும் காணப்படுகின்றாள். அவளைப் போன்ற தேக அமைப்பு எனக்கில்லை. நானும் அவள் மாதிரி செய்ய வேண்டும்'' என்று எண்ண வகையுண்டு. ஆனால் நீங்கள் அவ்வாறு செய்வீர்களானால் அது உங்கள் விசுவாசத்தைக் குலைத்து விடும். பாருங்கள்? உங்கள் விசுவாசம் வளர்வதற்கு நீங்கள் தருணம் அளிக்கத் தவறுகின்றீர்கள். நான் உங்களுக்குக் கூறினபடி இப்பொழுது முதல் அதை வளரவிடுங்கள். 46ஒருவர் என்னிடம், ''சகோ. பிரான்ஹாமே, நம் நாட்டு மக்கள் உங்களை தீர்க்கதரிசியாகக் கருதுகின்றனர். நீங்கள் பெண்களின் செயல்களையும் ஆண்களின் நடத்தையும் கண்டித்துப் பேசக்கூடாது. தீர்க்கதரிசனம் உரைக்க என்ன செய்ய வேண்டுமென்றும், வரங்கள் எவ்விதம் பெற்றுகொள்ளலாம் என்றும் அவர்களுக்குப் போதிக்க வேண்டும்'' என்றார். அப்பொழுது நான், மொழியில் முதல் எழுத்துக்களே (ABC) அவர்களுக்கு தெரியாதிருக்கும் பட்சத்தில் எப்படி நான், அவர்களுக்கு அல்ஜீப்ரா கணிதம் சொல்லித் தர முடியும்?“ என்றேன். நீங்கள் இப்பொழுதே தொடங்குங்கள். உங்கள் வெளிப்புறத் தோற்றத்தை சுத்தம் செய்யுங்கள். அப்பொழுது வீதிகளில் நடக்கும் போது, கிறிஸ்தர்களைப் போல் காட்சியளிப்பீர்கள். பின்பு கிறிஸ்தவர்களைப் போல் நடந்து கொள்ளுங்கள். பாருங்கள்? உங்கள் சுயமுயற்சியினால் அவ்விதம் செய்ய முடியாது. கிறிஸ்து உங்களுக்குள் வர வேண்டும். அந்த வித்து உங்களில் புதைந்து கிடக்குமானால், வெளிச்சம் அதன் மேல் விழும் போது, அது உயிர்பெறும். அது உயிர் பெறவில்லை என்றால், உயிர் பெறுவதற்கு அங்கு ஒன்றுமில்லை என்று அர்த்தம். ஏனெனில், அது உயிர் பெறுமென்று மற்றவர்களுடைய வாழ்க்கையின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பாருங்கள், ஒளி அதன் மேல் விழுந்த மாத்திரத்திலேயே அது உயிர் பெறுகின்றது. 47இச்செய்தி, ஒலிப்பதிவு செய்யபட்ட ஒலிநாடாவைக் கேட்கும் பெண்கள் அல்லது கேட்கவிருக்கும் அனைவருக்கும், இது ஒரு கடிந்து கொள்ளுதலாக அமையும். சகோதரியே, இது உனக்கு ஒரு கடிந்து கொள்ளுதல். அது, அவ்விதமாகவே இருக்க வேண்டும். உங்கள் வாழ்நாள் பூராவும் நீங்கள் பக்தியுள்ளவர்களாக இருந்திருக்கலாம். உங்கள் வாழ்நாளெல்லாம். நீங்கள் சபையில் கழித்திருக்கலாம். உங்கள் தகப்பன் அல்லது கணவர் சபை ஊழியக்காரராக இருந்திருக்கலாம். ஆயினும், நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமலிருக்கும் வரை, அங்கே ஜீவன் இல்லை என்பதைக் காண்பிக்கிறது. காரியம் வெளியரங்கமாவதையும், பரிசுத்த ஆவியாகிய ஜீவன் மற்றவர்கள் மேல் விழுவதையும் நீங்கள் காணும் போது அது எதை விளைவிக்கின்றது என்பதைக் கவனியுங்கள். அது, அவர்கள் மேல் அதைக் கொண்டு வரும்போது, அவர்கள் என்ன செய்கின்றனர் என்று பாருங்கள். ஏனென்று, ஆச்சரியப்படுவதற்கில்லை... இயேசு, பரிசேயரின் அந்தரங்க சிந்தனைகளை அறிந்து அவைகளை வெளிப்படையாய் உரைத்த போது, அவரைப் பெயல்செபூல்'' என்று அவர்கள் அழைத்தனர். அது அவர்களுக்கு எவ்வித கடிந்து கொள்ளுதலாயிருக்கிறது... ஆனால் அந்த நெறி தவறிய பெண், “என்ன, இவர்தான் மேசியா. இவர், இவைகளைச் செய்வார் என்று வேதம் உரைக்கின்றது'' என்றாள். பாருங்கள், முன்குறிக்கப்பட்ட வித்து அவளுக்குள் புதைந்து கிடந்திருந்தது. ஒளி அதன் மேல் பட்டவுடன் அது உயிர் பெற்றது. அந்த ஜீவனை நீங்கள் மறைக்கவே முடியாது. நீங்கள் புல்லின் மேல் கான்க்ரீட்டைப் போட்டு, குளிர் காலத்தில் அதை மடியச் செய்யலாம். ஆனால், அடுத்த வசந்த காலத்தில், அந்த புல் கான்க்ரீட்டின் ஓரங்களில் வளர்ந்து வருவதை நீங்கள் காணலாம். ஏனெனில், கான்க்ரீட் கல்லின் கீழ் ஜீவனுள்ள வித்து புதைந்து கிடந்திருந்தது. சூரியன் பிரகாசிக்கத் தொடங்கும் போது, அது வளருவதை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது. அது, எப்படியாவது வளரத் தொடங்கி, அதனடியில் ஊடுருவி வெளியே வந்து கற்களின் ஓரங்களில் தேவனுடைய மகிமைக்கு தன் தலையை நீட்டும். பாருங்கள். நீங்கள் ஜீவனை ஒருக்காலும் மறைத்து வைக்கவே முடியாது. சூரியன், தாவர ஜீவன் மேல் விழும்போது, அது ஜீவிக்க வேண்டும். 48அதுபோன்று, மனிதனுக்குள் இருக்கும் வேதப் பிரகாரமான ஜீவன் மேல் பரிசுத்த ஆவி விழும்போது, அப்பொழுதே அது, கனி கொடுக்க ஆரம்பிக்கின்றது. (சகோ. பிரான்ஹாம் தன் விரலைச் சொடுக்குகிறார் - ஆசி) பாருங்கள்? எனவே, நீங்கள் எவ்வளவு உண்மையும், நேர்மையுமான வர்களாயிருந்தாலும், நீங்கள் அப்படியல்ல என்று கூறினாலும், பேசினாலும் - ஒழுக்கங்கெட்ட முறையில் உடைகளை உடுத்தி வீதிகளில் செல்லும் பெண்கள் தெருவில் பொதுவான ஆடை அவிழ்ப்பு நடனத்திற்கு செல்பவர்கள், நீங்கள் நெறி தவறினவர்கள் என்பதை உணருவதில்லை. உங்களுக்குள் அவ்வித உணர்ச்சி எழுவதும் கூட கூடாத காரியம். “விபச்சாரம் என்னும் குற்றத்தை நான் செய்யவில்லையே'' என்று நீங்கள் நிரூபிக்க முற்படலாம். ஆனால் நீங்கள் விபச்சாரம் செய்ததாக தேவனுடைய புஸ்தகத்தில் ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டது. ”ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே ஏற்கெனவே விபச்சாரஞ் செய்தாயிற்று.'' (மத். 5:28) என்று இயேசு கூறியுள்ளார். மற்றவர் உங்களை இச்சையோடு பார்க்கும் அளவிற்கு நீங்கள் காட்சி தந்தீர்கள். பாருங்கள். உங்களுக்குள்ளே ஜீவன் புதைந்திராவிடில், உங்களால் அதை புரிந்து கொள்ள இயலாது. நீங்கள் யாரையாவது கண்டு, எனக்கு சகோதரி. ஜோன்ஸ் அவர்களைத் தெரியும், சகோ. ஜோன்ஸ் ஒரு ஊழியக்காரர். அவருடைய மனைவி இதை, அதைச் செய்கிறார்கள்“ என்று சொல்லலாம். ஆனால், அதைக் குறித்து எனக்கு கவலை இல்லை, இதுதான் வார்த்தை. “தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக” (ரோமர் 3:4) இயேசு கூறினார். இதுவே வேதம். அந்த வெளிச்சம் உண்மையாக அதன்மேல் விழும்போது, அது உயிர்பெற வேண்டும். அது ஜீவனை பெறத்தான் வேண்டும். 49இப்பொழுது, மோசேயின் கழுகு கண்கள் எகிப்தின் ஆடம்பரத்திற்கு அப்பால் நோக்கின. இன்றுள்ள உண்மையான கிறிஸ்தவ விசுவாசி ஒவ்வொருவனும், சபை என்ன கூறினும், அந்த ஒளி விழும்போது, தேவனுடைய அடையாளங்களை அவன் காணும் போது வேத வாக்கியங்களின் நிறைவேறுதலாக அக்கினி ஸ்தம்பம் நிற்பதையும், அநேக அடையாளங்கள் அற்புதங்கள் நிகழ்வதையும் அவன் காணும் போது, அது உயிர் பெறுகின்றது. அது எவ்வளவு சிறிய கூட்டமாயிருந்த போதிலும் அவனுக்குக் கவலையில்லை. எக்காலத்திலும் தேவனுடைய பிள்ளைகள் சிறு கூட்டமாகவே இருந்து வந்துள்ளனர். பாருங்கள்? ''பயப்படாதே சிறு மந்தையே உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்“ என்றெல்லவா இயேசு கூறியுள்ளார். பாருங்கள்? உடனே அவர்கள் அதை கிரகித்து கொள்கின்றனர். ஒவ்வொரு ஸ்தாபனத்திலுமுள்ள நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டவர்கள் கண்டு கொள்ள அதை அனுப்ப வேண்டியது தேவனுடைய கடமையாகும். 50நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்ட சிமியோன் என்னும் வயோதிபனைக் கவனியுங்கள். குழந்தையின் வடிவிலிருந்த மேசியா, அவருடைய தாயார் அவரைக் கைகளில் ஏந்திக் கொண்டு ஆலயத்திற்குச் சென்ற போது சிமியோன், ஏதோ ஒரு அறையில் படித்து கொண்டிருந்தான். அவன் மேசியாவின் வருகைக்காக காத்திருந்தான். மேசியா, அங்கு வந்திருப்பதை பரிசுத்த ஆவியானவர் அவனுக்கு உணர்த்தினார். அந்த ஜீவன் அவனுக்குள் இருந்தது. அவன், “கர்த்தருடைய கிறிஸ்துவைக் காணும் முன்பு நான் மரிக்கமாட்டேன்'' என்று திட்டவட்டமாகக் கூறினான். அந்த கர்த்தருடைய கிறிஸ்து ஆலயத்திற்குள் வந்திருந்தார். பணியில் அப்பொழுது ஈடுபட்டிருந்த சிமியோனை பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவினிடத்தில் வழி நடத்தினார். அவன் குழந்தையைக் கையிலெடுத்து, ''உம்முடைய அடியேனை இப்பொழுது சமாதானத்துடன் போகவிடும். உமது இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான். அதுபோன்று, அன்னாள் என்னும் வயோதிப, கண் பார்வை இழந்த ஸ்திரீ ஒரு மூலையில் இரவும் பகலும் கர்த்தரை ஆராதித்துக் கொண்டிருந்தாள். அவளும், “மேசியா வரப் போகின்றார், அவர் வருகையை, நான் காண்கிறேன்'' என்று முன்னறிவித்திருந்தாள். அவள் கண் பார்வையற்றவளாய் இருந்தாள். அதே நேரத்தில் மேசியா ஆலயத்தை அடைந்த போது, அவர், ''அவர் அங்கிருப்பார், அங்கிருப்பார், அவர் அங்கிருப்பார்,'' என்று வருகையை முன்னறிவித்த அவளுக்குள் இருந்த ஜீவன், ”முறை தவறிப் பிறந்த குழந்தை'' என்று கருதப்பட்ட அக்குழந்தை துணிகளினால் சுற்றப்பட்டு, ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட போது பரிசுத்த ஆவியானவர் கண் பார்வையற்ற அந்த வயோதிப ஸ்திரீயை உணர்த்தினார். அவள் பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்பட்டு, கூட்டத்தினுள் புகுந்து, குழந்தையின் அருகே வந்து, குழந்தையையும் அதன் தாயையும் ஆசீர்வதித்து, அக்குழந்தையின் எதிர்காலம் என்னவாயிருக்கும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தாள் பாருங்கள். நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டவர்கள். பாருங்கள்? அக்காலத்தில் இத்தகையோர் பன்னிரண்டு பேர்கூட இல்லை என்பதைப் பாருங்கள். நோவாவின் காலத்தில் ஏராளமானோர் இருந்தபோதிலும், எட்டு பேர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டனர். ஆனால், ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டவர் அனைவரும் அவரவர் காலத்தில் ஒன்று சேர்க்கப்படுகின்றனர். பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு காலத்திலும் எவ்வாறு கிரியை நடப்பித்து, ஜனங்களைக் கவர்ந்து விடுகிறார் என்பதைக் கவனியுங்கள். 51மோசே கொண்டிருந்த விசுவாசம், இனி நிகழப்போவதைக் கவனிக்க அவனை வழி நடத்தினதேயன்றி, முன்பு நடந்ததையல்ல. இன்றைக்கு பதிலாக நாளையை நோக்கிப்பார்; அந்த ஆடம்பரத்தை நோக்குவதற்கு பதிலாக வாக்குத்தத்தை நோக்கிப் பார். ஸ்தாபனத்திற்கு பதிலாக ஜனங்களை நோக்கிப் பார். பாருங்கள்? தேவன் அதைச் செய்தார். சோதோமிலுள்ள செழிப்பை லோத்து கண்டான். அங்கு நிறைய செல்வம் உண்டு என்று அவன் அறிந்து, ஆபிரகாமின் உடன் பிறந்தார் மகனுமாகிய எபிரெயனுமாகிய அவன், செல்வந்தனும் மேதையுமாக வேண்டும் என்னும் எண்ணம் கொண்டு, சோதோமைத் தெரிந்து கொண்டான். லோத்தினுடைய அறிவு செல்வச் செழிப்பை காண அவனை வழி நடத்தியது. லோத்தினுடைய ஞானம் பகட்டினால் வரும் நிறைவைக் காண அவனை ஏவியது. ஆனால், அது அவனுடைய விசுவாசத்தை மிகவுமாக சீர்குலைய செய்தது. அந்த விதமான வாழ்க்கையை அக்கினி அழிக்கப் போகின்றது என்பதை அவன் காணவில்லை. இன்றுள்ள ஜனங்களும் அதே நிலையில் உள்ளனர். ஒரு பெரிய ஸ்தாபனத்தில் அங்கத்தினராயிருக்கின்ற ஒரு வாய்ப்பை பார்க்கின்றனர். நகரத்தில் உள்ள ஜனங்களோடு ஒரு சமூக அந்தஸ்தை கொண்டவர்களாக இருக்கும் ஒரு வாய்ப்பை அவர்கள் பார்க்கின்றனர். ஆனால் அவர்கள்... அதனால், தங்களுடைய விசுவாசம் சீர்குலைந்து போயிருப்பதை அவர்கள் காணத் தவறுகின்றனர். இதை நான் மறுபடியும் வலியுறுத்த விரும்புகிறேன். என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாமலிருக்க அது உதவிபுரியும். இன்றுள்ள பெண்கள், சினிமா நட்சத்திரங்களைப் போல் காணப்பட நடந்துக்கொள்ள விரும்புகின்றனர். அவ்வாறே ஆண்களும், டெலிவிஷனில் (தொலைக்காட்சி) வரும் கோமாளிகளைப் போல் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். 52இன்றைய போதகர்கள் தங்கள் சபைகளை அங்கத்தினரை மாத்திரம் சேர்க்கும் ஒரு நவீன விடுதியாக்க விரும்புகின்றனர். ஸ்தாபனங்களுடன் இணங்கி போவதன் மூலம் பேராயராகவோ, அல்லது மேல் கண்காணியாகவோ ஆக வாய்ப்புண்டு என்று அவர்கள் கருதுகின்றனர். தேவனுடைய வல்லமையினாலும், ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையானது ஜனங்களுக்குள் வாசம் செய்து, வேத வாக்கியங்களை தெளிவாக உறுதிப்படுத்தி, அவர்களுக்கு தேவ வாக்கியங்கள் நிரூபிக்கப்பட்டு, அதனுள் முன்பாக வைக்கப்பட்டிருந்தும், அவர்கள் அதை நிராகரிக்கின்றனர்; இருந்த போதிலும் அவர்கள் அதை விரும்புவதில்லை. இதுபோன்ற காரியங்களில் கலந்து கொள்ள எங்களுக்கு விருப்பமில்லை'' என்கின்றனர். ஏனெனில், அவ்வாறு செய்தால், அவர்கள் ஐக்கிய சீட்டு ரத்து செய்யப்படும். அவர்கள் ஸ்தாபன ஒழுங்கே ரத்தாகும். ஆனால், இன்னுமாக உத்தமமுள்ள லோத்து சோதோமில் வாழ்வது பாவம் என்பதை உணர்ந்த போதும், அங்கு வாழ்ந்ததற்கு இது ஒப்பாயுள்ளது. பாருங்கள்?பாருங்கள்? அதன் விளைவால், அவர்களுக்குள் குடி கொண்டுள்ள சிறு விசுவாசமும் கிரியை செய்ய முடியாமல் குலைந்து போய்விடுகின்றது. 53இப்பொழுது, மோசே அதற்கு பணிந்தான், இன்னுமாக அவன். அவனுடைய விசுவாசம், உலகத்தின் டாம்பீகத்தை சீர்குலைத்து விட்டது. ஒன்று, உங்கள் விசுவாசம் ஆடம்பரத்தை சீர்குலைக்கும், அல்லது ஆடம்பரமானது உங்கள் விசுவாசத்தை சீர்குலைத்துப் போடும். இவையிரண்டில், ஏதாவது ஒன்றையே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வேத புஸ்தகம் ஒருபோதும் மாறாது என்பதை நீங்கள் காணுங்கள். தேவன் மாறாதவராயிருக்கிறார். அவர் என்றென்றும் மாறாத தேவன். ஆகவே, இப்பொழுது இன்று, இந்நாளின் ஜனங்கள் பெரிய காரியங்களையே, பெரிய ஸ்தாபனங்களையே நோக்கிப் பார்க்கின்றனர் என்பதை நாம் பார்த்தோம். பாருங்கள். ''நான் இன்னின்ன ஸ்தாபனத்தில் அங்கத்தினனாயிருக்கிறேன்'' என்று அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர். பாருங்கள்? அவர்கள் விசுவாசிகளை ஏளனம் செய்து, அவர்களுக்கும் தெருவில் காணப்படும் எளியவர்க்கும் இடையே எவ்வித வித்தியாசமுமில்லை என்கின்றனர். அவர்கள், உலக ஞானத்தைப் பெற்றிருக்கின்றனர். தெய்வீக சுகமளித்தல், அக்கினி ஸ்தம்பம், தேவனுடைய ஒளி ஆகிய இவைகளைப் பற்றி நீங்கள் பேசினால் அவையனைத்தும், “மனோத்தத்துவ முறை'' என்கின்றனர். 54கர்த்தருடைய தூதனின் புகைப்படத்தை ஒரு பாப்டிஸ்ட் போதகர் கண்டு எள்ளி நகைத்தார். பாருங்கள், அது தேவதூஷணமாகும். பாருங்கள்? அதற்கு மன்னிப்பே கிடையாது. அதைத்தான், இயேசுவும் கூறினார், பாருங்கள். கிறிஸ்து செய்த கிரியைகள் இப்பொழுது நடைபெறுவதைக் கண்டு நகைத்தால், அது தேவ தூஷணமாகும். ஆகவே, அவர் கூறினார், அவர்கள் கிறிஸ்து செய்த கிரியைகளை கண்டபோது அவரே செலுத்தப்பட வேண்டிய பலியாக இருந்தார். அவரைப், “பெயல் செபூல், ஒரு பிசாசு” என்றனர், ஏனெனில் அவர் அதைச் செய்ததால். ஆகவே, இப்பொழுதும் அவர்கள் கூறுகின்றனர். அவரோ, “இதற்கு நான் உங்களை மன்னிக்கிறேன். ஆனால் எனக்குப் பிறகு பரிசுத்த ஆவியானவர் தோன்றி, இதே கிரியைகளையே செய்வார். அதற்கு விரோதமாக நீங்கள் ஒரு வார்த்தைகூட பேசினால், அது இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாது என்று கூறினார். பாருங்கள்? அதற்கு விரோதமாய் நீங்கள் ஒரு வார்த்தை கூறினால் மாத்திரம் போதும் பாருங்கள்? அதன்பின்... ஆனால் நீங்கள் நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்ட வராயிருந்தால், அதை நீங்கள் காணும் போது, அந்த ஜீவன் வெடித்து வெளிவரும். அப்பொழுது, கிணற்றடியிலிருந்த சமாரிய ஸ்திரீயைப் போலவும், மற்றவர்களைப் போலவும், நீங்கள் அதை அடையாளம் கண்டு கொள்வீர்கள். ஆனால், அது அங்கு இராவிட்டால், அது ஜீவனைப் பெற முடியாது. ஏனெனில் ஜீவனைப் பெறுவதற்கு அங்கு ஒன்றுமில்லை. ''சிவப்பு முள்ளங்கியில் இரத்தம் கிடையாது'' என்று என் தாயார் கூறுவது வழக்கம். ஏனெனில் அதில் முதலாவதாக இரத்தமே இல்லை. அது போன்றது தான் இது. 55நீங்கள் பெற்றுள்ள சிறு விசுவாசத்தையும் அது கெடுத்து விடுகின்றது. லோத்து, சோதோமின் பகட்டைக் கண்டான். ஆனால் அந்த பகட்டை அழிக்கப் போகும் அக்கினியைக் காண்பதற்கு அவனிடம் போதிய விசுவாசம் இல்லாமலிருந்தது. இன்றைக்கு நமக்கும் போதிய விசுவாசம் இருக்கின்றதா என்று நான் வியப்புறுகிறேன். சபையில் உள்ள மற்றவர்களைப் போன்று இருக்க விரும்பும் பெண்கள், மற்றவர்களைப் போன்று தாங்களும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்கள், அவர்கள், வர்ணம் தீட்டிக் கொண்டால் மிகவும் அழகாகக் காணப்படும் வாய்ப்புகளை அவர்கள் எதிர் பார்க்கின்றனர். தங்கள் மயிரைக் கத்தரித்து கொண்டால், ஒரு சினிமா நட்சத்திரத்தைப் போன்றோ, அல்லது மற்ற ஏதோ ஒன்றைப் போலவோ, இளமையான தோற்றத்தையுடைய ஒரு பெண்ணைப் போன்று காணப்பட விரும்புகின்றனர். ''ஒரு ஆணிற்குரிய உடையை பெண் அணிவது தேவனுடைய பார்வையில் அருவருப்பானதாகும் தளற்கால் சட்டைகள் (slacks) இன்னும் மற்றவை, குறுங்காற் சட்டை (shorts) போன்றவற்றை அவர்கள் அணிகின்றனர். அவ்விதம் செய்யும் ஸ்திரீ கனவீனமானவள் என்று வேதம் கூறுவதை அறிந்து கொள்ளாத அளவிற்கு அவர்கள் விசுவாசம் குலைந்துள்ளது. அதை தினந்தோறும் வழக்கமாக மக்கள் செய்யும் அளவிற்கு அவர்கள் இருதயம் கடினப்பட்டுள்ளது. சபைக்கு செல்ல வேண்டும் என்று உனக்கிருக்கின்ற அந்த சிறிய விசுவாசத்தைக்கூட இக்காரியங்கள் சீர்குலைக்காமல் இருக்குமோ என்று அதிசயிக்கின்றேன், நீங்கள் பாருங்கள். அது, அதைத்தான் செய்கிறது. 56லோத்து அதைச் செய்தான், ஆகவே, அது அவன் விசுவாசத்தையும் அவனுடன் கூட இருந்தவர்களின் விசுவாசத்தையும் குலைத்தன. அதன் விளைவால், இனிமேல் நிகழவிருப்பதை அவர்களால் காண முடியவில்லை. ஆனால், அவன் பெரிய தகப்பனாகிய ஆபிரகாம் உறுதிப்படுத்தப்பட்ட விசுவாசத்தை கொண்டவனாயிருந்தான். அவன் பகட்டை நோக்கவில்லை. அவன் வனாந்திரத்திலும், கட்டாந்தரையிலும், தன் ஜீவனத்திற்கென்று கடினமாக உழைக்க வேண்டிய நிலைமை இருந்த போதிலும், அவன் பகட்டுடன் எவ்வித தொடர்பும் கொள்ள விரும்பவில்லை. அது கடினமானதும், வறண்ட நிலமாயிருந்த போதிலும், சாராள் அந்த வனாந்திரத்திலே தான் வாழ்ந்தாள். ஆனால், அவர்கள் ஆடம்பரத்தையோ அல்லது, புகழ்வாய்ந்தவர்களாக ஆகக்கூடிய வாய்ப்புகளையோ அவர்கள் பார்க்கவில்லை. சாராள் உலகிலே தலை சிறந்த அழகி என்று வேதம் கூறுகின்றது. மற்றெல்லா பெண்களை விட அவள் அழகில் சிறந்து விளங்கினாள். அவள், கணவனுடன் கூட வாழ்க்கை நடத்தி, அவனுக்குக் கீழ்ப்படிந்து வந்தாள். அவள், அவனை, “ஆண்டவன்'' என்று அழைத்தாள். நீங்கள் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்தால், சாராளின் குமாரத்திகளாக கருதப்படுவீர்கள்'' என்று புதிய ஏற்பாடு கூறுகின்றது. பாருங்கள், அவள் தன் புருஷனை ''ஆண்டவனே'' என்று அழைத்தாள். கர்த்தருடைய தூதன் அவர்களுடைய ஆலயத்திற்கு... அல்லது அங்கேயிருந்த அவர்களுடைய சிறு கூடாரத்துக்கு வருகை தந்தான். தங்குவதற்கு அவர்களுக்கு ஒரு வீடு கூட இல்லை, விளைச்சல் இல்லாத கட்டாந்தரையில் அவர்கள் வாழ்ந்து வந்தனர். இந்த நாள், அந்த நாளுக்குச் சரியாக ஒப்பாய் மறுபடியும் ஒப்பனையாக்கப்பட்டுள்ளது என்பதை உங்களால் காண முடிகிறதா? 57இப்பொழுது, மோசே தான் கொண்டிருந்த மகத்தான விசுவாசத்தின் விளைவால், இவ்வுலகிலுள்ள வைகளை ஏற்க மறுத்து, நீதியானதைத் தெரிந்து கொண்டான். தேவனுடைய பிள்ளைகளுடன் துன்பம் அனுபவிப்பதையே அவன் தெரிந்து கொண்டு, அவர்களுடன் செல்ல விரும்பினான். ஏன்? அவன் கொண்டிருந்த விசுவாசமே! அவன் வாக்குத்தத்தத்தைக் கண்டான். முடிவு காலத்தை அவன் விசுவாசக் கண்களால் கண்டான். நாளை என்ன நடக்கவிருக்கிறது என்பதை அவன் அறிந்து, அவன் விசுவாசத்தை அவிழ்த்து விட்டான். அவன் மாமிசக் கண்கள், தான் ஒரு பார்வோன் என்பதையும், ஒரு பார்வோனாக ஆகப் போகிறோம் என்பதையும் அவனுக்கு காண்பித்த போதிலும் அவன் அதைப் பொருட்படுத்தவேயில்லை. நாளை நடக்கவிருப்பதையே அவன் உற்று நோக்கினான். ஓ, ஜனங்கள் மாத்திரம் மோசே செய்ததையே செய்தால் இன்றைய உலகை பார்த்தால் அதையே தெரிந்து கொள்ளுவீர்கள். உங்கள் கண்களை அதனின்று மறைத்துக் கொள்ளுங்கள். நாளைக்குள்ளதான தேவனுடைய வாக்குத்தத்தத்தை உற்று நோக்குங்கள். அவன் தன் விசுவாசத்தினாலே அதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. மோசே, பார்வோனின் குமாரன் என்று அழைக்கப்படுவதை வெறுத்து, ஆபிரகாமின் குமாரன் என்று அழைக்கப்படுவதையே தெரிந்து கொண்டான். இராஜ்யம் முழுவதும்... அவனால் எப்படி முடிந்தது. எகிப்து முழு உலகையுமே தன் ஆதிக்கத்தில் கொண்டிருந்தது. அவன் உலகம் முழுவதற்கும் அரசனாக ஆகியிருக்கலாம். நாற்பது வயது வாலிபனான அவன், சிம்மாசனத்தில் அமர ஆயத்தமாயிருந்தான். ஆனால் அவனோ, ஒருபோதும் அதில் கவனம் செலுத்தவில்லை. 58அவனைச் சுற்றிலும் அழகான பெண்கள் ஒவ்வொருநாளும் இருந்திருப்பார்கள் என்று சற்று ஊகித்துப் பாருங்கள். அந்த வசீகரத்தை சற்று உற்று நோக்குங்கள். ஆடைகளைக் கழற்றி அவன் முன் நடனமாடும் அழகிகள், விசிறியினால் காற்று வீசும் அழகிகள். உலகெங்கிலுமிருந்து வந்து அங்கு குழுமியிருந்த பெண்கள்.... நகைகளும், பொக்கிஷங்களும் அவனுடைய இராணுவமும் அங்கிருந்தன. அவன் தன்னுடைய சுவையான உணவை அருந்தி, ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்து கொண்டு, ''நம் இராணுவத்தை அந்த நாட்டிற்கு அனுப்பி அதை கைப்பற்றுங்கள் எனக்கு அது தேவையாயிருக்கிறது என்று நான் நம்புகிறேன்,'' என்ற கட்டளையிட்டால் மாத்திரம் போதுமானதாயிருந்தது. அது மாத்திரமே அவன் செய்ய வேண்டியதாயிருந்தது. அவன் இங்கிருந்து கொண்டு, அழகிகள் அவனுக்கு விசிறியினால் காற்று வீசி அவர்கள் தங்கள் ஆடைகளைக் களைந்து, மதுபானம் அவன் வாயில் ஊற்றி, அவனைத் தங்கள் கரங்களால் வளைத்து உணவு ஊட்டினது சற்று கற்பனை செய்து பாருங்கள். உலகத்தில் இருந்த மிக அழகான எல்லா பெண்களும் உலகத்தின் எல்லா வசீகரமும் அங்கே அவன் பக்கத்தில் இருந்தது. அவனுக்கு முன்பாக இத்தனை வசீகரம் இருந்தும் கூட அவன் என்ன செய்தான்? அவனுடைய பார்வையை அதனின்று விலக்கிக்கொண்டான். அக்கினி அதற்கு தயாராக இருப்பதை அவன் அறிந்திருந்தான். மரணம் அவ்வழியில் காத்து கொண்டிருப்பதை அவன் அறிந்திருந்தான். பாருங்கள்? அது, அப்படித்தான் என்பது அவனுக்குத் தெரியும். ஆகவே அவன் புறக்கணிக்கப்பட்டு, இகழப்பட்ட ஒரு கூட்டம் ஜனங்களுடன் இணைத்துக் கொண்டு கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை விசுவாசத்தினால் தெரிந்து கொண்டு, தன்னை, “ஆபிரகாமின் குமாரன் என்று அழைத்துக் கொண்டான். ''நான் இந்த பார்வோனின் குமாரன் அல்ல. என்னை நீங்கள் பேராயராக அல்லது, தலைமை பேராயராக அல்லது, போப் பாண்டவராகவும் கூட நியமிக்கலாம். ஆனால், நான் இந்த காரியத்தின் குமாரன் இல்லை. நான் ஆபிரகாமின் குமாரன். நான் உலகின் காரியங்களின்று என்னை வேறு பிரித்து கொண்டவன். ஆமென், ஆமென், ஆமென் விசுவாசத்தினால், அவன் அதைச் செய்தான். 59அவன், வசீகரத்தை விலக்கினான். அவன், அடுத்த பேராயராக வரும் சாத்தியக் கூற்றை, அடுத்த தலைமைப் பேராயராக வரும் சாத்தியக் கூற்றை அல்லது அடுத்த தேர்தலில் கண்காணிகளுக்குத் தலைவராக ஆக இருக்கும் வாய்ப்புகளை அல்லது வேறெதுவாயிருந்தாலும், அவைகளை அவன்அப்புறமாக விலக்கி விட்டான். அவன், அதைப் பார்க்க மறுத்துவிட்டான். இப்பொழுது, நான் ஒரு பேராயராக ஆனால், நான் உள்ளே நுழையும் போதே ஜனங்கள் எழுந்து நின்று, மரியாதை செலுத்தி, “பரிசுத்த பிதா, அல்லது, அல்லது டாக்டர் இன்னார்-இன்னார், அல்லது-அல்லது-அல்லது மூப்பர் இன்னார்-இன்னார் வருகிறார்'' என்றும், அங்குள்ள ஊழியர் யாவரும் ஒன்றுகூடி, என் முதுகின் மீது தட்டிக்கொடுத்து, அவர் ''திறன் படைத்தவர்'' என்றும், ஓ, உஹ்-ஹ், உஷ், சத்தம் போடாதீர்கள். பேராயர் வருகிறார்” என்றெல்லாம் கூறுவார்கள். நான் சொல்வது தான் அப்பொழுது சட்டமாயிருக்கும். இதோ இன்னார் வருகிறார், உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து ஜனங்கள் பறந்து வந்து, போப் பாண்டவரைக் கண்டு, அவர் பாதங்களையும், மோதிரத்தையும் முத்தமிடுவார்கள். கத்தோலிக்கர்ளுக்கும், பிராடஸ்டண்டுகளுக்கும் தங்கள் தங்கள் ஸ்தாபனங்களில் பெரிய மனிதராக ஆவதற்கு எவ்வளவு வாய்ப்புண்டு! ஆனால், விசுவாச கண்களோ, இதற்கும் உயரமாக பார்க்கின்றன. நீங்கள் பாருங்கள்? தேவன், அந்த முழு காரியமும் அழிக்கப்படும் என்று கூறியிருக்கும் அதன் முடிவை உங்களால் காணமுடியும். விசுவாசம், அந்த கழுகு கண்ணானது, உங்களை உயரத்திற்கு உயர்த்தி, உங்களை நாளைய தினத்தை பார்க்க வைக்கும், இன்றையதையல்ல, ஆகவே ஆபிரகாமின் குமாரன் என்று அழைக்கப்படுவதைக் தெரிந்து கொள்வீர்கள். 60பார்வோன் விசுவாசமற்றவனாய், தேவனுடைய பிள்ளைகள், ''மூட பக்திவைராக்கியம் கொண்டவர்கள்'' எனக் கண்டான். விசுவாசமென்பதே இல்லை. ஏனெனில் அவன் கூறினதைக் குறித்து எவ்வித பயமும் அவனுக்கு இல்லாமலிருந்ததால் அவன், அவர்களை அடிமைகளாக்கின தேவனைக் குறித்த பயம் அவனுக்கு இருக்கவில்லை. தான் ஒரு தேவன் எனக் கருதினான். அவன் தன்னுடைய தேவர்களை நினைத்தான், தான் ஒரு பேராயர், தலைமை கண்காணி என்று எண்ணிக் கொண்டான். தன்னுடைய தேவர்கள் அதைச் செய்தனர் என்று எண்ணினான். ''இங்கேயிருக்கின்ற இந்த காரியம் ஒன்றுமற்றது என்றெண்ணினான். ஆகவே, அவன் அவர்களை அடிமைகளாக்கினான். இன்றைக்கு ஜனங்கள் செய்வதைப் போலவே, அவர்களை கேலி பரியாசம் செய்து நகைத்தான், சரியாக அதே காரியம் தான். ஆனால் மோசேயின் விசுவாசமோ அவர்கள் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட ஜனங்கள் என்பதை அறிந்து கொண்டு, அவர்கள் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தில் குடியிருப்பதை முன்கூட்டியே கண்டது. வாக்குத்தத்த்திற்கு அவர்களை கொண்டு செல்வதென்பது ஒரு கடினமான போராட்டத்திற்குரியதாக இருக்கலாம். ஆனால் மோசேயோ, அவர்களுடன் செல்வதையே தெரிந்து கொண்டான். இதைக் குறித்து எவ்வளவாக என்னால் பேச முடியும், ஆனால், நேரம் கடந்து கொண்டேயிருக்கின்றது. பாருங்கள்? 61கவனியுங்கள், அந்த ஜனங்களை வழிக்குக் கொண்டு வருவது மிகவும் கடினமான செயலாயிருக்கலாம். அவர்களுடன் நீ வாழ்ந்து, அவர்களில் ஒருவராக இருக்க வேண்டும். அவர்கள் ஏற்கெனவே அறிவுத்திறன் படைத்திருப்பதால், அவர்களை அசைப்பது மிகக்கடினம். பாருங்கள், ஆனால் ஏதோ ஒன்று அங்கு நிகழ வேண்டும். இயற்கைக்கு மேம்பட்ட செயல்கள் அவர்களுக்கு முன்பாக செய்து காண்பிக்கப்பட வேண்டும். அது மிகவும் கடினமான காரியம். ஸ்தாபனங்கள் உன்னை புறக்கணிக்கும். நீ செய்ய வேண்டியது கடினமான செயல்தான். ''உன் தீர்மானம் என்னவென்று நீ இப்பொழுதே நிர்ணயிக்க வேண்டும்.'' ''அவர்களில் நான் ஒருவன்'' என்றான் மோசே. ஆம், அவன் விசுவாசம் அதைச் செய்தது. அவனுடைய விசுவாசம் அங்கு சுடர்விட்டு பிரகாசித்தது. ஆம், ஐயா! அவன் அதைக் கண்டான். அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குத்தத்தத்தை அவர்கள் உணரச் செய்வது, கடினமான ஒரு செயல் தான் ஆயினும், அவர்களில் ஒருவனாக இருக்க மோசே தீர்மானம் செய்தான். அவனுக்கு அவர்கள் என்ன செய்ய நேர்ந்தாலும் அவனை அவர்கள் புறக்கணிக்க நேர்ந்தாலும், அவர்களுடன் செல்ல அவன் உறுதி கொண்டான். நான் கூறுவதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அதுசரி. எப்படியாயினும் அவர்களுடன் செல்லுங்கள். அவர்களில் ஒருவராக இருங்கள். அது சரி. ஏனெனில் அது உங்கள் கடமையாயிருக்கிறது. அது ஒரு கடினமான போராட்டமாக இருக்கலாம். நீங்கள் அதிக பிரயாசங்களை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால் எப்படியாயினும் நீங்கள் செல்லுங்கள். 62ஆனால், மோசேயின் விசுவாசம் தேவனுடைய வார்த்தையை தெரிந்து கொண்டது, ஆடம்பரத்தையல்ல. மோசே வார்த்தையை எடுத்து கொன்டான். மோசேயின் விசுவாசம் அதைதான் செய்தது. ஆனால், விசுவாசம் மிகவும் மோசமான நிலையிலுள்ள தேவனுடைய காரியங்களை... நினைவில் கொள்ளுங்கள். இங்கே இப்பொழுது ஆடம்பரம், உலகம், உலகத்தின் உயர்ந்த நிலையிலான ராஜா இருக்கின்றது. தேவனுடைய வாக்குத்தத்தம் எங்கேயிருந்தது? மண் குழியில், மண் பிசைபவர்கள். ஆனால் விசுவாசம் மிக மோசமான நிலையிலுள்ள தேவனுடைய காரியங்களை நோக்கும் போது, உலகம் அளிக்கும் மிகச் சிறந்தவைகளைக் காட்டிலும், அக்காரியங்களையே அதிக மேன்மையாக கருதுகின்றது. ஆம் ஐயா, விசுவாசமானது அதை நோக்கு போது, விசுவாசமானது அதைக் காணமுடியும் பொழுது, தேவனுடைய வார்த்தையின் பேரிலுள்ள விசுவாசம், அந்த வார்த்தை வெளிப்படுவதைக் காணும் போது, இவ்வுலகின் பகட்டு, தலைமை பேராயர் பதவி போன்ற எல்லாவற்றைக் காட்டிலும், அதை அதிமேன்மையாகக் கருதுகின்றது. விசுவாசமே அதைச் செய்கின்றது. பாருங்கள்? நீங்கள் மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ளோரை, புறக்கணிக்கப்பட்டோரைக் காணலாம். அவர்கள் மிகவும் சீர்கேடான நிலையில் இருக்கலாம். ஆயினும் விசுவாசம் என்னப்படுவது, உலகம் அளிக்கும் மிகச் சிறந்தவைகளைக் காட்டிலும், இவைகளையே லட்சக்கணக்கான மடங்கு அதிக உயர்வாக எண்ணுகின்றது. ஆமென்! எனவேதான், ''நாம் புறக்கணிக்கப்பட்ட தேவனுடைய சிலர் செல்லும் வழியில் நான் செல்வேன்'' என்னும் பாட்டைப் பாடுகின்றோம். பாருங்கள் ஓ, என்னே! 63தேவன் எதை செய்ய வேண்டுமென்று விரும்புகின்றாரோ, அதை விசுவாசம் உடனே அடையாளம் கண்டு கொள்கின்றது. நீங்கள் பாருங்கள்? உங்கள் மனதில் இது பதிந்துவிட்டது என்று நினைக்கிறேன். விசுவாசம் என்பது இங்கே இதைப் போன்றதை காண்பதில்லை. தேவன் எதை விரும்புகின்றாரோ எது செய்யப்பட வேண்டும் என்று விரும்புகின்றாரோ, அதையே விசுவாசம் கண்டு கொண்டு, அதற்கேற்ப கிரியை செய்கின்றது. விசுவாசம் என்பது ஓர் தொலைதூரப் பார்வையாகும். அதுதன் பார்வையை தாழ்த்திக் கொள்வதிலலை. அது இலக்கை (target) குறி வைக்கின்றது. ஆமென். துப்பாக்கி சுடுவதில் சிறந்தவர்கள் இதை அறிவார்கள். பாருங்கள்? இலக்கு தூரத்தில் இருக்கின்றது. துப்பாக்கியுடன் தொலை தூரத்திலுள்ளவைகளைக் காட்டும் கருவி (telescope) இணைந்துள்ளது. அருகிலுள்ளவைகளைக் காண நீங்கள் இருகண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ள தொலைநோக்குங் கருவி (Binoculor) உபயோகிப்பதில்லை. தூரத்திலுள்ள பொருட்களைக் காணவே அதை உபயோக்கின்றீர்கள். விசுவாசம் அதைத்தான் செய்கின்றது. விசுவாசம், புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு என்னும் இரு கண்ணாடிகள் பொருத்தப்பட்ட பைனாகுலரை தொலைநோக்குங் கருவியை எடுத்து, தேவன் அளித்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் அதன் வழியாகப் பார்க்கின்றது. விசுவாசம் தொலை தூரத்திலுள்ளவைகளைக் காண்கிறது. நிகழ்காலம் எப்படியிருந்தாலும், அதை பொருட்படுத்தாமல், முடிவையே அது காண்கிறது. சுடுபவன் கீழ் நோக்கிப் பார்க்கமாட்டான். அவன் தூரத்திலுள்ளதை மாத்திரமே காண்கிறான், துப்பாக்கியில் இணைக்கப்பட்ட டெலஸ்கோப்பிலுள்ள குறுக்கு கம்பிகளின் (Cross hairs) நடு மையத்தில், அவன் வார்த்தையைக் குறிவைக்கிறான். விசுவாசம் - ஒரு மனிதன் கொண்டுள்ள விசுவாசம் - இதைதான் செய்கின்றது. 64கவனியுங்கள், பார்வோன், மகத்தானவைகளாய் எண்ணியிருந்தவைகளை தேவன் அருவருப்பாக எண்ணினார். பார்வோன், மோசேயிடம், “மோசே, நீ அடுத்த பார்வோனாக வரவேண்டியவன். நான் சென்ற பின்பு, செங்கோல் உன் கையில் வரும். அப்பொழுது அது உன்னுடையதாகும் சரியா? இப்பொழுது இது மகத்தானது. நீ ஒரு மகத்தான மனிதனாக ஆகப்போகின்றாய். மோசே, நீ பேராயராக போகின்றாய், அல்லது இன்னின்ன பதவி வகிக்கப் போகின்றாய்'' என்று கூறியிருப்பான். பாருங்கள், பார்வோன் அதை பெரிதாய்க் கருதினான். ஆனால் தேவனுடைய பார்வைக்கு அது அருவருப்பானது. இப்பொழுது பெண்களே, ஒருநிமிடம் யோசனை செய்து பாருங்கள் - ஆண்களும் கூட. உலகம் மகத்தானதாய் கருதுபவைகளைக் தேவன், ''அசுத்தம்'' என்று அழைக்கின்றார். ஆண்களுடைய உடைகளைப் பெண்கள் அணிவது அருவருப்பானது என்று வேதம் கூறவில்லையா? ஆனால் அதையே நீங்கள் செய்து, உங்களை புத்திசாலிகள் என்று எண்ணுகின்றீர்கள். பாருங்கள்? உங்கள் பெண் மாம்சத்தை நீங்கள் பிசாசுக்குக் காண்பிக்கின்றீர்கள். அவ்வளவே. ஆகையால், அதைச் செய்யாதீர்கள். உலக காரியங்களின்படி வாழ்க்கை நடத்தும் மனிதனே, ஒரு மனைவியை சுபாவப்படி அனுபவிக்கத் துணிகரமில்லாத மனிதனே, அவைகளை விட்டுவிடும். தேவனுடைய குமாரன் என்று உங்களை அழைத்து கொள்வது உங்களுக்கு அவமானமாய் தோன்றவில்லையா? நீங்கள், எனக்கு சோதோமியர் போன்று காணப்படும்கின்றீர்கள். பாருங்கள்? உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டுமென்று இவைகளை நான் கூறவில்லை. உங்களிடம், சத்தியத்தையே எடுத்துரைக்கின்றேன். தப்பிதங்களை சரிபடுத்துவதே அன்பு. அது எப்பொழுதும் அவ்விதமாகவே உள்ளது. தன் பிள்ளையை அடித்து, தவறுகளைச் சரிபடுத்தி, அவனைப் பேணிக் காப்பாற்றாதவள் தாயல்ல. அது உண்மை. 65இப்பொழுது, என்ன நடக்கிறது என்பதை சற்று கவனியுங்கள். மோசே, தன்னுடைய தரிசனத்தின் மூலம் இதைக் கண்டான். பார்வோன், “இது மகத்தானது'' என்றான். தேவன், “அது அருவருப்பானது'' என்று கூறினார். ஆகவே தேவன்... மோசே தேவன் கூறினதையே தெரிந்து கொண்டான். இப்பொழுது, கவனியுங்கள், நீ எதைக் காண வேண்டுமென்று தேவன் விரும்புகின்றாரோ அதையே விசுவாசமும் காண்கிறது. பாருங்கள்? தேவன் எதைக் காண்கின்றாரோ அதையே விசுவாசமும் காண்கின்றது. ''ஆனால் மனிதனுடைய விவேகமும், புலன்களும், நீ காண வேண்டுமென்று உலகம் விரும்புவதையே காண்கின்றன. கவனியுங்கள், விவேகம் என்ன? அது மனித புலன் மாத்திரமே. அதன் ஒரே - ஒரே காரணம் என்னவெனில் இந்த... நல்லது, இது நல்லதான ஒன்றல்லவா?'' பாருங்கள்? அது சரியானது, தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ள அந்த புலன்களை நீ உபயோகிக்கும் போது, அதையே நீ காண வேண்டுமென்று உலகம் விழைகின்றது. ஆனால், விசுவாசம் அதை காணப்பதில்லை. தேவன் கூறினவைகளையே விசுவாசம் காண்கின்றது. பாருங்கள்? நீங்கள் அறிவீர்கள், விவேகத்தை தூக்கி எறியுங்கள். 66உலகம் நீங்கள் எதை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறதோ, அதை காரணகாரிய புலன் (Reasoning sense) உங்களை பார்க்கும்படி செய்யும் - பெரிய ஸ்தாபனங்கள். ''நீ கிறிஸ்தவனா?'' “ஓ, நான் பிரஸ்பிடேரியனை, மெதோடிஸ்டு, லூதரன், பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தை சேர்ந்தவன். நான் ஆதி சபையைச் சேர்ந்தவன், கத்தோலிக்கன். மனிதனுடைய விவேகமும், புலன்களும் நீ காண வேண்டுமென்று உலகம் விரும்புவதையே காண்கின்றன. பிரம்மாண்டமான ஸ்தாபனங்கள். நான் இது, அது, மற்றது'' என்கிறீர்கள். பாருங்கள். நீங்கள் அவ்வாறு கூறுகின்றீர்கள். இவையாவும் புலன்களின் மூலம் உண்டாகும் செயல்கள். ஸ்தாபனங்கள் பெரியவைகளாயிருப்பதால், நீ அதில் அங்கத்தினன் என்று கூறுவதில் பெருமையடைகின்றாய். ''உலகின் மற்றெல்லா ஸ்தாபனங்களையும் விட எங்கள் ஸ்தாபனத்தில் தான் அதிக நபர்கள் இருக்கின்றனர் எங்களிடம்...'' ஆனால் உண்மையான சபை ஒன்றே ஒன்றுதான். நீ அதில் சேருவதில்லை. அதற்குள் நீ பிறக்கின்றாய். பாருங்கள்? அவ்வாறு நீ அதற்குள் பிறக்கும் போது ஜீவனுள்ள தேவன் உன் மூலம் கிரியை செய்து, தம்மை வெளிப்படுத்துகின்றார். பாருங்கள்? தேவன் தமது சபையில் வாசம் செய்கின்றார். தேவன் தமது சபைக்கு தினமும் செல்கிறார். தேவன் தமது சபையில் குடி கொண்டிருக்கிறார். அவர் உனக்குள் வாசம் செய்கிறார். நீ தான் அவருடைய சபை. நீ தேவன் வாசம் செய்யும் கூடாரம். நீயே ஜீவனுள்ள தேவனுடைய சபை. ஜீவனுள்ள தேவன் அவருடைய வாசஸ்தலமாகிய ஜீவனுள்ள உனக்குள் வாசம் செய்யும் போது, உன் கிரியைகள் தேவனால் உண்டாயிருக்கின்றன. அங்ஙனம் இல்லையென்றால் தேவன் உனக்குள் வாசம் செய்யவில்லை என்று அர்த்தமாகின்றது. தேவனுடைய வரைபடமாகிய வேத புஸ்தகத்தில், ''செய்ய வேண்டாம்'' என்று தேவன் ஒன்றைக் கூறிவிட்டு, அதை நீ செய்ய அவர் அனுமதிக்கமாட்டார். பாருங்கள், அது தவறாகும். நீ, தேவனுடைய வார்த்தையை மறுதலித்தால், அவருடைய ஜீவன் உனக்குள் இல்லை என்பதை அது காண்பிக்கின்றது. பாருங்கள்? அது உண்மை. 67விசுவாசம் மோசேயைக் கீழ்ப்படிதலின் பாதைக்கு வழி நடத்தினது. கவனியுங்கள்... இளைஞனான பார்வோனாக ஒரு புறம்; இளைஞனான மோசே மற்றொரு புறம், இருவருக்கும் தருணமிருந்தது. அவன், மோசே தேவனுடைய ஜனங்கள் படும் நிந்தையைக் கண்டு, எகிப்திலுள்ள பொக்கிஷங்கள் அனைத்திலும் அதையே மேன்மையாக பாவித்தான். வேதம் கூறினதையே அவன் விசுவாசம் பின்பற்றினது. அதுவே, அவனை கீழ்ப்படிதலின் பாதையில் வழி நடத்தி முடிவில் மகிமைக்கு - என்றென்றும் மரிக்காத நிலைக்கு தேவனுடைய சமூகத்திற்கு அவனைக் கொண்டு சென்றது. ஆனால், பார்வோனின் புலன்களும், பார்வையும், ஆடம்பரமும் அவனை மரணத்துக்கும் அழிவுக்கும் வழி நடத்தின. அழிந்து போன அவன் தேசம் திரும்பவும் உயிர் பெறவில்லை. 68இங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். இதைப் பார்த்தால் நீங்கள் மரிப்பீர்கள். அதைப் பார்த்தால் பிழைப்பீர்கள். இப்பொழுது, நீங்கள் உங்கள் தெரிந்து கொள்ளுதலைச் செய்யுங்கள். அதையே தான் கர்த்தர் ஏதேன் தோட்டத்தில் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் முன்பாக வைத்தார். பாருங்கள்? விசுவாசத்தின் மூலம் நீங்கள் உங்கள் தீர்மானத்தை செய்ய வேண்டும்.இப்பொழுது, கவனியுங்கள். பார்வோனுடைய பார்வை அவனுடைய மரணத்துக்கும், அவனுடைய தேசத்தின் அழிவுக்கு வழிவகுத்தது. ஆனால், மோசேயோ, விசுவாசம் கொண்டவனாய் பார்வோனுக்கு சற்றேனும் அஞ்சவில்லை. பாருங்கள்? பார்வோன், என்ன கூறினாலும் அவனுக்குக் கவலையில்லை. அவனுடைய தாயும், தந்தையும் தங்களுக்கு விடப்பட்ட மிரட்டல்களுக்கு அவர்கள் பயப்படாதிருந்தது போல் பார்வோனை அவன் பொருட்படுத்தவேயில்லை. இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுவிக்க மோசே அனுப்பப்பட்டான் என்னும் உண்மை மோசேயின் தகப்பனுக்கு ஊர்ஜிதமான பின்பு, பார்வோன் என்ன கூறினாலும் அவன் கவலை கொள்ளவில்லை. அவன் பார்வோனுக்கு பயப்படவில்லை. ஆமென், ஆமென், ஆமென்! நான் கூறுவதன் அர்த்தம் உங்களுக்குப் புலபடுகின்றதா? (சபையோர் ''ஆமென்“ என்கின்றனர் - ஆசி). விசுவாசத்திற்குப் பயம் என்பதே கிடையாது. என்ன நடக்கப் போகின்றது என்பது விசுவாசத்துக்குத் தெரியும். விசுவாசம் பெரிய தசைகளையும் நெஞ்சில் மயிரும் கொண்டது என்று நான் உங்களிடம் அடிக்கடி கூறியிருக்கிறேன். அதாவது விசுவாசம் அவ்வளவு பெலம் கொண்டது, “வாயை மூடு'' என்று விசுவாசம் கட்டளையிட்டால், எல்லாரும் வாயை மூட வேண்டும். அவ்வளவுதான். ”நான் நிலையில் இருக்கிறேன்'' என்பது எனக்கு நன்றாக தெரியும். மற்றவர், “ஒருகால் அவன் இதை செய்யலாம் என்று கூறலாம். ஆனால், நீங்களோ எழுந்து நின்று உங்கள் பெலத்தைக் காண்பிக்க வேண்டும். அவ்வளவுதான். விசுவாசம் அதையே செய்கின்றது. 69கவனியுங்கள், தேவன் மோசேயின் அழைப்பை உறுதிப்படுத்தின பின்பு, அவன் பார்வோனுக்கு அஞ்சவேயில்லை. இஸ்ரவேலரை எகிப்திலிருந்து மீட்க அழைக்கப்பட்டான் என்று மோசேக்குத் தெரியும். தேவனும், அது உண்மை என்பதை ஊர்ஜிதப்படுத்தினார். மோசே புறப்பட்டுச் சென்று, பார்வோனின் முன்னிலையிலும் அவன் அதற்காக அழைக்கப்பட்டான் என்பதை நிரூபித்துக் காண்பித்தான். மோசே பார்வோனுக்குப் பயப்படவேயில்லை. கவனியுங்கள், பார்வோன் மோசேயிடம் அவனுடைய புத்தி சாதுரியத்தை உபயோகித்தான். கவனியுங்கள். ''அவன் மோசேயிடம், உன்னிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறேன்'' அதாவது வாதைகள் அவனை வாதித்த பின்பு, ''நீங்கள் ஆராதனைகென்று மூன்று நாட்கள் சென்று வாருங்கள். சற்று தூரம் மாத்திரம் சென்று வாருங்கள். அதற்கு மேல் போக வேண்டாம்'' என்றான். பார்வோனின் மனித ஞானம் அவனை அவ்விதம் கூறத்தூண்டியது. பாருங்கள். ''நீங்கள் இந்த இடம் வரை செல்லுங்கள், அதற்கு மேலே நீங்கள் போக வேண்டாம்'' இன்றும், அத்தகையோர் நம்மிடையே இல்லையா? ''நீங்கள் மாத்திரம் சபையை சேர்ந்து கொண்டால், அதுவே எல்லாம் சரியானதாகும்,'' என்கின்றனர். 70ஆனால், மோசே கொண்டிருந்த விசுவாசம் சற்றுதூர மார்க்கத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை. அவன் பார்வோனிடம், ''நாங்கள் எல்லோரும் போக வேண்டும். நாங்கள் முழுதூரமும் சென்று வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தை அடைய வேண்டும். அது உண்மை. நாங்கள் சற்று தூரம் சென்று ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டு, அங்கேயே நின்றுவிட முடியாது. நாங்கள் சென்று கொண்டேயிருக்க வேண்டும்'' என்றான். ஆமென். ''நான் வாக்களிக்கப்பட்டுள்ள தேசத்திற்கு சென்று கொண்டிருக்கின்றேன். தேவன் அதை எங்களுக்கு வாக்களித்துள்ளார்'' பிரசங்க பீடத்தில் நிற்கும் எத்தனை பார்வோன்கள் - ஸ்தாபனங்களின் தலைவர்கள் - இன்று நம்மிடையே உண்டு? ''நீங்கள் இதை செய்தால் போதும், அதை செய்தால் போதும். அதுவரை சென்றால் மாத்திரம் போதும்'' என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் மோசே, ''ஓ, முடியாது! இல்லை, முடியாது! முடியவே முடியாது!'' என்று ஆணித்தரமாகக் கூறினான். பாருங்கள்? பார்வோன், ''ஏன் முடியாது? அத்தகைய மார்க்கத்தைக் கடைபிடிப்பதில் தவறென்ன? நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று கற்பித்துத் தருகிறேன். நீயும் பெரியோர்களும் மாத்திரம் சென்று ஆராதனை செய்யுங்கள், பாருங்கள். நீயும் மூப்பர்களும் மாத்திரம் சென்று ஆராதியுங்கள். நீங்கள் வேண்டுமானால் உங்கள் மார்க்கத்தைக் கடைபிடியுங்கள். ஆனால், அதை ஜனங்களிடையே பரப்ப வேண்டாம்'' என்றான். 71அதற்கு மோசேயளித்த விடையென்ன தெரியுமா? “கால் நடை பிராணிகளிலும் ஒன்றுகூட இங்கு விடப்படாது. நாங்கள் முழுதூரமும் செல்ல வேண்டும். நாங்கள் எல்லோரும் போகின்றோம்! அவர்கள் போகாமல் நான் போகமாட்டேன். நான் இங்குள்ளவரை, உன் ஆதிக்கத்தில் இருக்கின்றேன். ஆமென். ''அவர்களும் கூட செல்கின்ற வரையிலும் நானும் செல்ல மாட்டேன்.'' என்னே ஒரு வீரமுள்ள ஊழியக்காரன்! ஆமென். “நான் அவர்களை என்னுடன் கொண்டு செல்ல விரும்புகின்றேன். நான் எல்லாம் பெற்றிருப்பதனால், அதெல்லாம் சரியென்று கூறமாட்டேன். ஜனங்களும், அதை என்னுடன் சேர்ந்து அனுபவிக்க வேண்டும். ஆகவே, அவர்கள் ஒவ்வொருவரும் செல்ல வேண்டும்,'' ஆமென். அவன், ''எங்கள் ஆடு, மாடுகளில் ஒன்றையும் கூட நாங்கள் விட்டு விட்டுப் போக மாட்டோம். ஒரு குளம்பும் பின் வைக்கப்படுவதில்லை, அனைவரும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்கிறோம்.'' ஆமென்? நாங்கள் எல்லோரும், ஒவ்வொருவரும் - வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ள தேசத்துக்குச் செல்ல போகின்றோம். குடும்பப் பெண்ணாயிருந்தாலும் சரி, அல்லது சிறிய உதவிப் பெண்ணாயிருந்தாலும் சரி, அல்லது வயோதிபப் பெண்ணாகவோ அல்லது வாலிபனாகவோ அல்லது வயோதிபனாகவோ அல்லது யாராயிருந்தாலும் சரி. நம்மில் ஒருவராவது பின்தங்கிவிடப் போவதில்லை.'' ஆமென். ''நாம் ஒவ்வொருவரும் போகப் போகின்றோம். எதுவும் எங்களை நிறுத்த முடியாது. அது முற்றிலும் சரி. என்னே! மார்க்கங்களைக் குறித்து அங்கு விவாதம் நடந்து கொண்டிருந்தது, அப்படித்தானே? ஓ, என்னே! இல்லை, இந்த ''சற்று - தூர'' மார்க்கத்தில் மோசேக்கு விசுவாசம் இருக்கவில்லை. இல்லை அவன் அதை விசுவாசிக்கவில்லை. ஊம் - ஊம்! ஆம் ஐயா. ஓ, என்னே! அதைக் குறித்து நாள் முழுவதும் பேசி கொண்டேயிருக்கலாம். ஆனால் சற்று கழிந்து, நான் பொருளுக்கு வரவேண்டும். பிரசங்கிக்க வேண்டும். 72இதை கவனியுங்கள். எவ்வளவு அழகாயிருக்கின்றது! ஓ, இது எனக்கு மிகவும் விருப்பமானது. முடிவில் பார்வோன், வெளியேறுங்கள்'' என்றான். மோசேயின் சத்தத்தின் மூலம் தேவன் அவனை வாதித்தார். அவர் அங்கிருந்த எல்லாவற்றையும் அடித்தார். செய்ய வேண்டிய அனைத்தையும் அவர் அங்கு செய்தார். நடுப்பகலில் அவர் சூரியனை அந்தகாரப்படுத்தினார். அவர் எல்லா கரியங்களையும் செய்தார். அவர் தவளைகளையும், வண்டுகளையும், பேன்களையும், அக்கினியையும், புகையையும், குடும்பங்களில் மரணத்தையும் எல்லாக் காரியங்களையும் வருவித்தார். இதன் பயனாக, ''உங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்'' என்று பார்வோன் முடிவில் கூற வேண்டிய நிர்பந்தம் உண்டானது. ஓ என்னே, கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஒரு மனிதன் தேவனை முற்றிலும் சேவிக்கும் போது, அவனை என்ன செய்வதென்றே பிசாசுக்குத் தெரிவதில்லை. இதைக் குறித்து நான் மகிழ்ச்சியுறுகிறேன். அது உண்மை. மோசே தேவனுக்கு முற்றிலுமாக கீழ்ப்படிந்தான். முடிவில் பிசாசு, ''என் இடத்தை விட்டு போய்விடு. நான் மறுபடியும் அதைக் கேட்க விரும்பவில்லை'' என்று விரட்டியடிக்கின்றான். அது உண்மை. நீங்கள் முற்றிலுமாக தேவனுக்குக் கீழ்ப்படிய முடியும். 73இப்பொழுது கவனியுங்கள், தேவன் மோசேயின் சார்பில் இருந்திராவிடில், அவன் எல்லோருடைய பரியாசத்துக்கும் ஆளாயிருப்பான். ஆனால், தேவன் சரியாக அங்கிருந்து உறுதிபடுத்திக் கொண்டிருந்தார். அவன் கூறின எல்லா காரியமும் நிறைவேறின. ஆகவே பார்வோன் ஒரு பேராயர் என்னும் காரணத்தால், தன் பதவியில் நிலைகொள்ள வேண்டியதாயிருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா, ஆதலால் அவன் - அவன் அதில் நிலை கொள்ள வேண்டியதாயிருந்தது. அங்கு நிகழ்ந்த சம்பவங்களை அவனால் மறுக்க முடியவில்லை. அவனால் அதை மறுக்க முடியவில்லை. அங்கு சம்பவங்கள் ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருந்த படியால், அவனால் ''இல்லையே என்று கூற முடியவில்லை. பாருங்கள்? அது ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருந்தபடியால், அவனும் அதை மறுதலிக்க முடியவில்லை. எனவே முடிவில் அவன், “ஓ, என் இடத்தை விட்டு ஓடிவிடு, நீ கூறுவதை நான் இனிமேலும் கேட்க விரும்பவில்லை. இங்கிருந்து போய்விடு. உனக்குள்ள யாவையும் எடுத்துக் கொண்டு போய்விடு'' என்று கூறினான். ஓ, என்னே! 74நாம் இங்கு மோசேயை காண்பது... தேவன் மோசேயுடன் கூட இருந்து, அவனுக்காக அநேக செயல்கள் புரிந்து, அநேக அடையாளங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்தினார். இப்பொழுது, அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு இதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். கூர்ந்து கவனியுங்கள்; மோசே இந்த கட்டத்திற்கு வருகிறான்... கர்த்தர் மோசேயுடன், ''நான் உன்னுடன் இருக்கின்றேன். உன்னுடைய வார்த்தைகள் என்னுடைய வார்த்தையாகும். நான் அதை உனக்கு நிரூபித்துள்ளேன் மோசே. அது வண்டுகள் காலம் அல்லாததால் தேசத்தில் வண்டுகளே இல்லை. வண்டுகள் வரக்கடவது என்று நீ கட்டளையிட்ட மாத்திரத்தில் வண்டுகள் தோன்றின'' என்றார். அது சிருஷ்டிப்பாகும். தேவனேயன்றி யார் இவ்வுலகில் இருளை வரவழைக்க முடியும்? “இருள் உண்டாகக்கடவது என்று நீ கட்டளையிட்டாய்; இருள் தோன்றினது. தவளைகள் உண்டாகக்கடவது என்று நீ கூறினாய், அந்த தவளைகள் பார்வோனுடைய வீட்டிலும், படுக்கைகளிலும் கூட இருந்தன, அவர்கள் தவளைகளை பெரிய குவியல்களாக குவித்தனர். சிருஷ்டிகர் (Creator) ஆகவே நான் உன் மூலமாக பேசினேனே, மோசே, ஆகவே - ஆகவே, உன்னுடைய உதடுகளின் மூலமாக என்னுடைய வார்த்தையானது சிருஷ்டிக்கச் செய்ய வைத்தேனே. கூறப்போனால் பார்வோனுக்கு முன்பாக உன்னை ஒரு தேவனாக (a god) நான் வைத்தேனே'' ஆம் ஐயா. ”இவை அனைத்தையும் நானே செய்தேன்'' என்றார். ஆகவே இங்கே அவர்கள் ஒரு கட்டத்திற்கு வந்தனர், ஒரு சிறிய சோதனை நேர்ந்தது. ஆகவே ''நான் என்ன செய்வது? என்று மோசே முறையிட தொடங்கினான். 75நீங்கள் இதை கவனிக்க விரும்புகிறேன். இப்பொழுது, இங்கே ஒரு மகத்தான பாடமாகும். பாருங்கள். கவனியுங்கள், மோசே, நாம் இங்கே படித்தோமானால், அவன் கடமை என்னும் பாதையில் இருந்தபோது, பார்வோன் துரத்தி வருவதை இஸ்ரவேலர் கண்டு மிகவும் பயந்தனர் என்பதை அறியலாம். தேவன், எல்லாவற்றையும் பிழையின்றி செய்து முடித்தார். அவர் இஸ்ரவேலர் தங்கள் இப்பொழுது பிரயாணத்தை மேற்கொள்ள செய்தார். அவர் சபையை ஒன்று கூட்டினார். அவர்கள் வெளியே அழைக்கப்பட்டனர். அவர்கள் எல்லா ஸ்தாபனங்களினின்றும் வெளிவந்து ஒன்று சேர்ந்தனர். மோசே, “கர்த்தாவே, நான் என்ன செய்ய வேண்டும்?'' என்கிறான். அவர், ''நல்லது சென்று இதைச்செய்.'' அது சரி, முன்னே செல். இப்பொழுது மோசே, இதை செய்வதற்காகவே நான் உன்னை அழைத்திருக்கின்றேன் என்பதை நீ அறிவாய்.'' என்பார். “ஆம், கர்த்தாவே.'' “சரி, நீ சென்று இதைப்பேசு அது நிறைவேறும்,'' இங்கே வண்டுகள் வந்தன. ''இதற்காக பேசு, இதோ அது வந்தது. இதை செய், அது நிறைவேறினது.'' எல்லாக் காரியங்களும் கர்த்தர் உரைக்கிறதாவது, கர்த்தர் உரைக்கிறதாவது என்ற விதமாய் இருந்தது. இப்பொழுது, அவன் ஒரு சிக்கலில் அகப்பட்டு கொள்ளுகிறான். 76ஆகவே தேவன், “அவர்கள் பிரயாணத்தை நான் தொடங்கியிருக்கிறேன். அவர்கள் எல்லோரும் வெளியே அழைக்கப்பட்டு விட்டார்கள். சபை ஒன்று சேர்ந்துவிட்டது. அவர்கள் பிரயாணம் மேற்கொள்ள நான் செய்திருக்கின்றேன். மோசே, அவர்களை வழி நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள். நான் உனக்கு கூறியுள்ளேன். நான் சற்று கீழே உட்கார்ந்து இளைப்பாறப் போகின்றேன்'' என்றார். அப்பொழுது மோசே, ''ஓ, கர்த்தாவே இங்கே வருகின்றதை பாரும், அவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனரே! இதோ பார்வோன் வருகின்றான். நான் என்ன செய்ய வேண்டும்? நான் என்ன செய்ய வேண்டும்?'' என்றான். பாருங்கள். அது மனிதத் தன்மை அல்லவா? ஆம், ஐயா. ''நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அவன் முறையிட ஆரம்பித்தான். மோசே தன் மனித இயல்பை முற்றிலும் வெளிப்படுத்துவதை நாம் காணலாம். எப்பொழுது தேவன் உனக்கு பின்னாலிருந்து கொண்டு உன்னை தள்ளிக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தல். நமக்கும் கூட அது இக்காலத்தில் பொருந்தும். நீங்கள் அற்புதங்களைக் கண்ட பின்பும், தேவன் உங்களை உந்தித்தள்ளி, ஒரு செயலைப் புரிய செய்ய வேண்டுமென்று நீங்கள் நினைக்கின்றீர்கள். பாருங்கள்? எகிப்தில் அவனுக்கிருந்த கடினமான ஊழியத்துக்குப் பின்பு, மோசே அப்பொழுது ஓய்வு எடுத்து கொண்டிருந்தான். அவன், “தேவனே, நான் உம்மிடம் கேட்கப்போகின்றேன். நீர் என்ன பதிலுரைக்க போகின்றீர் என்பதைக் காணட்டும். ஆம், ஆம், நீர் அதைச் சொல்லும். நல்லது, அது சரி. நானும் அதையே சொல்லுவேன்“ என்றான். பாருங்கள்? ஆனால், இங்கே தேவன் அந்த பணிக்காக அவனை முன் குறித்து தாம் அவனோடு இருப்பதை நிரூபித்துமிருந்தார். ஆனால் இங்கே அவனோ, சூழ்நிலைகள் வருகின்றன, அப்பொழுது அவன், ''நான் என்ன செய்வது?கர்த்தாவே நான் என்ன செய்வேன்?'' என்று கதறுகின்றான். 77இப்பொழுது நீங்கள் நினைவு கூறுங்கள். மோசே ஏற்கெனவே, ''நீங்கள் இன்று காணும் எகிப்தியரை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள்“ என்று தீர்க்கதரிசனம் உரைத்திருந்தான். ஆயினும் உடனே, ”தேவனே நாங்கள் என்ன செய்வோம்?'' என்று முறையிடுகிறான். பாருங்கள்? அவன் இந்த தீர்க்கதரிசனம் உரைக்கும் நற்பணியை ஏற்றான். என்ன நேரிடுமென்று அவன் முன்னறிவித்தான். தேவனுடைய வார்த்தை அவனுக்குள் இருக்குமானால், அது அவனுக்குள் இருந்தது. ஆகவே அவன் அதைக் கூறிக் கொண்டிருந்த காரியம், அப்படியே நிறைவேறினது. அவன் கூறின காரியம் நிறைவேற போகின்றது, ஆனால் இங்கே அவன், ''நான் என்ன செய்யப் போகின்றேன்?'' என்று பயப்படுகின்றான். அது, மனிதத் தன்மை அல்லாமல் வேறென்ன? அது நானாக அல்லாமல் வேறென்ன? அது நானாக அல்லாமல் வேறென்ன? பாருங்கள்? ''நீ என்ன கூறுகின்றாயோ அது சம்பவிக்கும், நான் உன்னுடனே இருக்கிறேன்'' என்று அவர் ஏற்கெனவே நிரூபித்திருந்தார். ஆகவே, இங்கே க்ஷணப்பொழுதில் ஒரு சூழ்நிலை உருவாக்கியது. ''நான் என்ன செய்ய வேண்டும்? நான் என்ன செய்ய வேண்டும், கர்த்தாவே? ஹே, (Hey) கர்த்தாவே நீர் எங்கே இருக்கின்றீர்? ஹே, உமக்கு கேட்கின்றதா? நான் என்ன செய்ய வேண்டும்?'' ஆகவே ஏற்கெனவே அவனை முன்குறித்திருந்தார். அவனை உறுதிப்படுத்தி, நிரூபித்து ஒவ்வொன்றையும் அவன் மூலமாகவே செய்தார். ஆகவே, இங்கே “தேவனே?'' என்கிறான். ஓ, என்னே! மனிதன் ஓய்வெடுத்து கொண்டு தேவன் தன்னை உந்தித்தள்ளிக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புவதை முழுவதுமாக வெளிப்படுத்துதல். 78ஆகவே, இன்னுமாக தேவன் இந்த பணிக்காக, இதைச் செய்வதற்காக தன்னை அபிஷேகித்திருக்கின்றார் என்பதை அவன் அறிந்திருந்தான். அவனுடைய எல்லா கூற்றுகளையும் தேவன் தெளிவாக உறுதிப்படுத்தியிருந்தார். ஜனங்கள் விடுவிக்கப்படும் நேரமாய் அது இருந்தது. தேவன், தம்முடைய அற்புதங்கள், அடையாளங்களின் மூலமாக அவர்களெல்லாரையும் ஒன்றாக ஒரு குழுவாக ஒன்று சேர்த்தார். நீங்கள் கவனிக்கிறீர்களா? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) எல்லோரையும் ஒன்று சேர்த்து - அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார். வேதம் அவ்வாறு கூறினது. இங்கே அடையாளம் இருந்தது, சாட்சி இருந்தது. அவர்கள் மத்தியில் அவன் ஒரு தீர்க்கதரிசியாக வந்து கொண்டிருந்தான். அவன் சொன்னதையெல்லாம் கர்த்தர் கனம் பண்ணினார். வண்டுகளை சிருஷ்டித்து அங்கு கொணர்ந்தார், இல்லாத இடத்தில் சிருஷ்டித்தார். அவனுக்கு வாக்குரைத்ததையெல்லாம் நிறைவேற்றினார். ஆனால் அவனோ, ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதன் பேரில் காத்திருக்க முற்பட்டான். பாருங்கள்? அவனுடைய அழைப்பின் உறுதிப்பாடே, ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பது தான் என்பதை அவன் அறிந்திருக்க வேண்டும். அவனுக்கு குறிக்கப்பட்டிருந்த பணி கர்த்தர் உரைக்கிறதாவது என்பதே. நான் சொல்வது உங்களுக்கு புரிகின்றதா? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி.) ஏன் அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதற்கு காத்திருக்க வேண்டும்? 79அவன், “கர்த்தாவே நான் என்ன செய்வேன்? இப்புத்திரர்களை இவ்வளவு தூரம் கூட்டி வந்துவிட்டேன். இதோ சூழ்நிலை, பார்வோன் வருகின்றானே. அவர்கள் எல்லோரும் மரிக்கப் போகிறார்களே, நான் என்ன செய்ய வேண்டும்? நான் என்ன செய்ய வேண்டும்?'' ஹும், ஹம். அவர்கள் என்ன செய்ய போகின்றார்கள் என்பதை அவன் ஏற்கெனவே முன்னுரைத்திருந்தான். என்ன செய்யப்பட வேண்டும் என்பதை ஏற்கெனவே சரியாக அவன் கூறியிருந்தான். தான் பிறந்து வளர்க்கப்பட்ட அந்த தேசத்தின் முடிவையே அவன் முன்னுரைத்திருந்தான். (சபையோர் “ஆமென்'' என்கின்றனர்- ஆசி) பாருங்கள்? ''நீங்கள் இனி அவர்களைக் காணமாட்டீர்கள். தேவன் அவர்களை அழிக்கப்போகின்றார். நீண்ட காலம் அவர்கள் உங்களை பரியாசம் செய்தனர். தேவன் அவர்களை அழித்துப் போடுவார் என்று மோசே ஏற்கெனவே கூறியிருந்தான். பிறகு, ”கர்த்தாவே நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்கின்றான். அங்கேயுள்ள மனிதத்தன்மையைப் பாருங்கள்? பாருங்கள்? ''நான் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதற்கு காத்திருக்கப் போகின்றேன்'' ஆம் ஐயா, “கர்த்தர் என்ன கூறுகிறார் என்று பார்த்து பிறகு நான் செய்கிறேன். ''ஊம்! யோசேப்பை அறியாத பார்வோன் அந்நேரத்தில் இருந்தான் என்று நினைவு கொள்ளுங்கள் உங்களுக்குத் தெரியுமா, அந்நேரத்தில் சரியாக அந்த நேரத்தில் பாருங்கள்? பாருங்கள்? மோசே அங்கு நின்று அந்த நேரத்தின் அழிவை முன்னுரைத்தான். 80அது எங்கு சம்பவிக்க வேண்டியிருந்ததோ, அந்த இடத்திற்கு அவன் சரியாக வந்திருந்தான். ஆனாலும், “நான் என்ன செய்ய வேண்டும் கர்த்தாவே? நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று முறையிடுகிறான். பாருங்கள்? அது மனிதர் அல்லவா? அது மனித சுபாவம் அல்லவா? “நான் என்ன செய்ய வேண்டும்?'' ஊம். அவன், ஏற்கெனவே தீர்க்கதரிசனம் உரைத்திருந்தான். அவன் கூறின எல்லாவற்றையும் தேவன் கனம் பண்ணினார். அப்பணிக்காக அவன் அழைக்கப்பட்டிருந்தான். பின் ஏன் அவன் ''நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கூற வேண்டும். அங்கே ஒரு தேவை இருந்தது; ஆகவே, அவனிடம் விடப்பட்ட காரியமானது அதற்காக பேசுவது மாத்திரமே (Speak For it) தாம் மோசேக்கு அளித்த விசுவாசம் என்னும் வரத்தை அவன் கிரியைக்கு கொண்டு வரவேண்டும் என்று தேவன் விரும்பினார். தேவன் அதை உறுதிப்படுத்தியிருந்தார். அதுதான் சத்தியமாயிருந்தது. ஆகவே தேவன் தாம் மோசேயோடு இருப்பதை ஜனங்கள் காண வேண்டும் என்று விரும்பினார். ஆகவே, அங்கே அவன் காத்து கொண்டிருந்தான், ”இப்பொழுது கர்த்தாவே நான் ஒரு குழந்தை. நீர் இப்பொழுது எனக்கு கூறுவீராக“ என்றான். ''ஆம், நான் போய் இதைச் செய்வேன். கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நான் கொண்டிருக்கிறேன்.'' சகோதரனே, அது கர்த்தர் உரைக்கிறதாவதா? ''ஆமாம், ஆமாம், சகோ. மோசே, அது கர்த்தர் உரைக்கிறதாவது. ''ஆம்'' ''அப்படியா, சரி நாம் அதைப்பெற்றுக் கொண்டோம், கர்த்தர் உரைக்கிறதாவது அது நடந்தது, ஒருமுறையும் கூட தவறவேயில்லை. ஆகவே, இங்கே கடினமான ஓர் சூழ்நிலை உண்டானது. அப்பொழுது அவர் அவனை யாத்திரையில் கொண்டு வந்தார். சபையானது ஏற்கெனவே வெளியே அழைக்கப்பட்டு பிராயாணத்தில் வைக்கப்பட்டு இருந்தது, அவர்கள் முன்னே சென்று கொண்டிருந்தனர். ஆனால், மோசே கதறத்துவங்கினான், ''கர்த்தாவே இது கர்த்தர் உரைக்கிறதாவது தானா? நான் என்ன செய்ய வேண்டும்'' என்று முறையிடுகிறான். அது உண்மை. 81தான் அவனுக்குள் வைத்து, தெளிவாக உறுதிப்படுத்தியிருந்த அந்த வரமாகிய விசுவாசத்தை மோசே கொண்டிருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். வார்த்தையினாலும், கூறப்பட்டு நிறைவேறின காரியங்கள் மூலம் அது தாம் தான் என்று மோசேக்கும் ஜனங்களுக்கும் தேவன் தெளிவாக நிரூபித்திருந்தார். அது தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது. இனிமேல் மோசே அதைக் குறித்து கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. பாருங்கள்? அது ஏற்கெனவே தெளிவாக்கப்பட்டு விட்டதாலே, அவன் இனிமேல் அதைக் குறித்து ஒன்றும் நினைக்க வேண்டியதும் இல்லை. அவன் ஏற்கெனவே இக்காரியங்களைச் செய்துள்ளான். அவன் பேசி, வண்டுகளையும், ஈக்களையும் சிருஷ்டித்ததினாலே, தேவனுடைய வார்த்தை அவனுக்குள்ளே இருந்தது என்பதை, அவன் ஏற்கெனவே நிரூபித்திருந்தான். ஆதலால் சூழ்நிலைகள் அவன்முன் இருந்த போது, இப்பொழுது கேட்க விழைகிறான். பாருங்கள்? ஓ, என்னே! இதில் நமக்கும் ஒன்று இருக்கிறதென்று நான் எதிர்பார்க்கிறேன், நாம் எங்கேயிருக்கின்றோம் என்பதை நாம் காணலாம். பாருங்கள்? அது உங்களை அவ்வளவு பெரியதாக உணர செய்கின்றதல்லவா? (சபையோர், ''ஆமென்“ என்கின்றனர் - ஆசி) தன்னுடைய குறைகளை மோசே கூறுவதைப் பற்றி சிந்திக்கையில், நம் நிலையையும் நாம் காணலாம். ஆம் பாருங்கள்? 82இங்கே அவன் நின்று கொண்டு, பாருங்கள், வேத வாக்கியங்கள் அதுதான் அந்த மணிநேரமென்றும், அது நடக்க வேண்டிய நாள், இதுவே என்றும் கூறியிருந்ததை அவன் அறிந்திருந்தான். தேவன் அவனை அக்கினிஸ்தம்பத்தில் சந்தித்தார் என்றும் அறிந்திருந்தான். அது ஜனங்கள் முன்சென்று உண்மையாகவே இந்த அற்புதங்களைக் செய்தது. அவன் கூறின எல்லாக் காரியமும் நிறைவேறினது, காரியங்களை சிருஷ்டிப்பிற்குள்ளாகக் கொண்டு வந்தது. தேவன் மாத்திரமே செய்யக்கூடிய காரியங்களைச் செய்து, அவனுடைய சத்தம் தேவனுடைய சத்தம் என்று காண்பித்தான். ஆகவே, அவன் இங்கே, தான் எழும்பி வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள்ளே கொண்டு செல்லும் அந்த ஜனங்களுடன் இருந்தபோது அந்த சூழ்நிலை வந்தபோது, அவன் நின்று கொண்டு, ''நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று முறையிடுகிறான். அதுதான், மனித சுபாவம் வெறும் சகோதரன். ராய் ஸ்லாட்டர். ஒருமுறை கூறியது போன்று. அவர் வெளியே அமர்ந்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். ஒருவர் எனக்கு செய்கின்ற ஒன்றைக் குறித்து அவர் அப்பொழுது என்னிடம் கூறினார். இதற்கு நான், ''நல்லது, நான் இதைக் செய்தேன். இப்பொழுது அது இருக்கின்றது,'' என்றேன். அவர், ''சகோதரன். பிரான்ஹாமே, அவர்கள் இன்று உம் தோளில் சாய்ந்திருக்கட்டும். நாளை அவர்களை மூட்டை முடிச்சுடன் அனுப்பிவிடுங்கள்'' என்றார். இன்று அவர்கள் உங்கள் தோளில் சாய்ந்திருக்கச் செய்து, நாளைக்கு அனுப்பிவிடும். இதுதான் மனிதன் என்பவனின் வழியாய் இருக்கின்றது. அதுதான். மோசேயும் அதையே செய்து கொண்டிருந்தான். தேவன் அவனை நியமித்து, அவன்தான் அதைச் செய்யும்படியாக நிரூபித்து காண்பித்து பிறகு அவர் அவனை அனுப்பிவிட வேண்டியதாய் இருந்தது. ஆகவே, அந்த ஜனங்கள் “மோசே வார்த்தையை பேசு. நீ அங்கே செய்ததை நான் கண்டிருக்கிறேன். அங்கே தேவன் உன்னை கனப்படுத்தினார், ஆகவே இன்றைக்கும் நீ அந்த நபராக இருக்கின்றாய் என்று கூறியிருக்க வேண்டியவர்களாய் இருந்தனர். ஆமென். பாருங்கள்? அதை செய்! ஆமென். அதை அவன் அறிந்திருக்க வேண்டும், ஆனால் அவன் அறியாமற் போனான். அது சரி. அப்பொழுது எப்படியிருந்ததோ அதேபோன்று இப்பொழுது உள்ளது. நாம் அதைக் கண்டு கொள்கிறோம். ஆகவே அவர் கூறினார்... 83அதைக் குறித்து தேவன் சலிப்படைந்தவராய் காணப்பட்டிருப்பார். தேவனுக்கு அதைக் குறித்து வெறுப்பு தோன்றியிருக்க வேண்டும். அவர், “என்னிடம் நீ முறையிடுகிதென்ன? நான் யாரென்பதை ஏற்கெனவே உனக்கு நிரூபித்துக் காண்பிக்கவில்லையா? இப்பணிக்காகவே நான் உன்னை அனுப்பியிருக்கிறேன் என்று நான் உன்னிடம் கூறவில்லையா? நீ சென்று இதைச் செய்ய வேண்டும் எனது நான் உனக்கும் கூறிவில்லையா? நான் இதைச் செய்வேன் என்றும், நான் உன் வாயுடன் இருந்து உன் மூலம் பேசுவேன். நான் இதைச் செய்வேன், நீ அற்புதங்களையும், அடையாளங்களையும் காண்பிப்பாய் என்றும் நான் வாக்களிக்கவில்லையா? நான் கூறினதை நிறைவேற்றி, உன்னைச் சுற்றிலுமிருந்த சத்துருக்களை நிர்மூலமாக்கவில்லையா? ஆகவே, இங்கே இப்பொழுது சிவந்த சமுத்திரத்தின் அருகில், சரியாக கடமை என்னும் வரிசையில் நின்று கொண்டிருக்கிறாய், நீ என்ன செய்ய வேண்டுமென்று நான் கூறினேன், ஆனால் இன்னுமாக என்னை நோக்கி கதறிக் கொண்டும் முறையிட்டுக் கொண்டும் இருக்கின்றாயே. என்னை நீ விசுவாசிக்கின்றாயா? இதை செய்ய நானே உன்னை அனுப்பினேன் என்பதை நீ காணவில்லையா?'' என்று கூறினார். ஓ, அது மனிதத் தன்மையல்லவா! என்னே!ஆதலால், அவருக்கு அக்காரியத்தின் மேல் மிகவும் வெறுப்பு தோன்றியிருக்க வேண்டும். 84“உனக்குத் தேவை உள்ளது என்பதை நீ அறிவாய். நீ இந்தப் பிள்ளைகளை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பிரதேசத்திற்குள்ளே கொண்டு செல்ல வேண்டும் என்பதை அறிவாய். அது சரியே. இங்கே ஒரு மூலையில் அடைப்பட்டிருக்கிறாய். இப்பொழுது உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே, உனக்கு தேவை ஒன்று உள்ளது. நீ எதைக் குறித்து என்னிடம் முறையிடுகிறாய், எதற்காக என்னை நோக்கிக் கூப்பிடுகிறாய்? நான் அதை ஜனங்களுக்கு நிரூபிக்கவில்லையா? நான் உனக்கு அதை நிரூபிக்கவில்லையா? நான் அழைக்கவில்லையா? அது வேத பூர்வமானதல்லவா? இந்த ஜனங்களை அந்த தேசத்திற்கு கொண்டு செல்வேன் என்று நான் வாக்குரைக்கவில்லையா? நான் உன்னை அழைத்து, நான் அதைச் செய்வேன் என்று உன்னிடம் கூறவில்லையா? நான் தான் உன்னை அனுப்பினேன் என்றும், அது நீ அல்ல, நானே என்று கூறும்படியாக நான் உன்னை அழைக்கவில்லையா? நான் உன்னுடன் வந்து, உன் உதடுகளில் இருந்து நீ என்ன கூறுகின்றாயோ அதை நிரூபித்து உறுதிப்படுத்துவேன் என்றதை நான் செய்யவில்லையா? என்றார். ''அப்படியானால், ஏதாவது ஒரு சிறிய காரியம் எழும்புமானால் ஏன் நீ ஒரு குழந்தையைப் போல நடந்து கொள்கிறாய்? நீ ஒரு மனிதனாக இருக்க வேண்டும். ஜனங்களிடம் சொல், பின்பு முன்னேறிச் செல்'' என்றார். ஆமென், ”முறையிடாதே, சொல்!'' ஆமென். ஓ, அது எனக்கு மிகவும் விருப்பமானது.'' எதைக் குறித்து நீ முறையிடுகின்றாய்? ஜனங்களிடம் பேசு. பிறகு உன் குறிக்கோளை நோக்கி முன்னே செல். அது என்னவாயிருந்தாலும் அது வியாதியாயிருந்தாலும், என்னவாயிருந்தாலும், மரித்தோரை எழுப்புவதாயிருந்தாலும், அல்லது எதுவாயிருந்தாலும் வார்த்தையைச் சொல் நான் அதை ஏற்கெனவே நிரூபித்திருக்கிறேன். ஜனங்களிடம் சொல். 85என்னே ஒரு பாடம்! என்னே ஒரு பாடம்! ஓ, என்னே பிரயாணத்தின் இக்கட்டத்தில் நாம் எங்கே நின்று கொண்டிருக்கின்றோம். இப்பொழுது நாம் எங்கேயிருக்கின்றோம் என்பதை கவனி, ஆம், ஐயா, மூன்றாம் இழுப்பில் சரியாக கர்த்தருடைய வருகையின் வாசற்படியில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். மோசே, தன் ஊழியத்திற்காக அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தும் அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதற்காக காத்திருந்தான். கர்த்தருக்கு இதனால் வெறுப்பு தோன்றியிருக்க வேண்டும். அவர், ''இனி ஒருபோதும் முறையிடாதே, சொல்! நான் உன்னை அனுப்பினேன்'' என்றார். ஓ, தேவனே! இந்த காலை வேளையிலே இந்த சபையானது எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும்! தேவனுடைய பரிபூரணமான உறுதிப்படுத்தலாலும், அக்கினி ஸ்தம்பம் அற்புதங்கள், அடையாளங்கள், சோதோமின் நாட்களில் இருந்தது போன்ற எல்லாக் காரியங்கள் போன்றவை. அது திரும்பவும் வரும் என்று கூறியுள்ளார். இங்கே உலகம் இந்த நிலையில் உள்ளது. அங்கே அந்த தேசமும் அதன் நிலையும். ஸ்திரீகளும் அவர்களின் நிலையில் உள்ளனர். அங்கே மனிதனும் அந்நிலையில் உள்ளான். அங்கே சபையும் அந்நிலையில் உள்ளது. எல்லாக் காரியங்களும் அங்கே உள்ளன. இயற்கை சூழல்கள், அடையாளங்கள், பறக்கும் தட்டுகள் (flying saucers) போன்ற மர்மமான அடையாளங்கள் வானத்தில் காணப்படுகின்றன. கடல்கள் கொந்தளிக்கின்றன. கடல் அலைகள் உயர எழும்புகின்றன. மனிதனின் இருதயம் சோர்ந்து போதல், பயம், சிக்கல்கள் நிறைந்த காலம், நாடுகள் மத்தியில் பீதி, பயம், சபை விழுந்து போய் கொண்டிருந்தன. 86கேட்டின் மகனாகிய பாவமனுஷன் எழும்பி, தன்னை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தி, தேவன் என்று அழைக்கப்படும் அவன்; ஓ தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல் வீற்றிருத்தல் ஓ, இவையனைத்தும் இந்நாட்டிற்கு வந்துள்ளன. சபையும் தன்னை ஸ்தாபித்துக் கொண்டுவிட்டது. ஸ்தாபனங்கள் எல்லாம் வேசியின் குமாரத்திகளாக ஒன்று கூடி, சரியாக வேசித்தன முறைகளில் ஈடுபடுகின்றன. வேசித்தனம் என்பது என்ன?ஸ்திரீகள் தங்கள் மயிரைக் கத்தரித்துக் கொள்ளலாம் என்றும், அரைக்கால் சட்டை அணிந்து கொள்ளலாம் என்றும் அனுமதித்தல், மனிதர்களும் அவர்கள் இதை செய்யலாம், அதை செய்யலாம்; பிரசங்கிகள் இதை செய்கின்றனர், சமுதாயப் பொதுவான சுவிசேஷம், மற்றும் பிற காரியங்கள். என்றும் கூறுதல். அவர்கள் உண்மையான வார்த்தையினின்று விலகி, ஆவிக்குரிய விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் என்பதை நீங்கள் காண்கிறீர்கள் அல்லவா? ஆகவே, தேவன் நமக்கு தம்முடைய உண்மையான வார்த்தையை அனுப்பியுள்ளார், எவ்வித ஸ்தாபன தொடர்பற்ற, அதனுடன் எதுவும் சேர்க்கப்படாத ஒன்று, முப்பத்து மூன்று வருடங்களாக நம்மிடையே உள்ள பரிசுத்த ஆவியானவரையும், அக்கினி ஸ்தம்பத்தையும் நமக்களித்தார். அவர் முன்னுரைத்து கூறின காரியங்கள் சரியாக அவர் கூறின விதமாகவே சரியாக நிறைவேறினது. 87புறப்பட்டுப் முன்னே போகலாம் என்று ஜனங்களுக்குச் சொல், ஆமென். நமக்கு ஒரு குறிக்கோள் உண்டு. அதுதான் மகிமை நாம் அதை நோக்கி செல்வோமாக! வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு நாம் சென்று கொண்டிருக்கின்றோம். ''விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்.'' ''ஜனங்களிடம் சொல். நான் உங்களுடன் கூட இருக்கிறேன் நான் அதை நிரூபிக்கவில்லையா? நான் உங்களோடு இருக்கிறேன் என்பதை நிரூபிக்க என்னுடைய புகைப்படத்தைக் கூட எடுக்க அனுமதித்தேனே, மற்றக் காரியங்கள், செய்யகூடிய எல்லாக் காரியங்களும் செய்யப்பட்டனவே? என்ன நிகழப் போகின்றது என்பதை நீ பிரசங்கப் பீடத்தில் நின்று மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே அதைப் பற்றி கூறினாயே, அதை சில வாரங்களுக்கு முன்பாக அந்த பத்திரிக்கைகள் அந்த கட்டுரையை பிரசுரித்தனவே, அதோ அது நடந்தேறி உறுதிப்படுத்தினதே? விஞ்ஞானத்திற்கே அதைப்பற்றி தெரியுமே. நான் இத்தனை செயல்கள் உங்கள் மத்தியில் புரிந்தும் கூட, நீ இன்னும் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறாய்? உங்கள் இலக்கை நோக்கி புறப்பட்டுச் செல்லுங்கள் என்று ஜனங்களிடம் சொல் ஆமென். நாத்தான் தீர்க்கதரிசி ஒருசமயம், தேவனால் அபிஷேகம் செய்யப்பட்ட தாவீது ராஜா கவலையுடன் உட்கார்ந்திருக்க கண்டு, அவனிடம், “உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும், தேவன் உம்மோடு இருக்கிறாரே என்று தாவீதிடம் கூறினான். ''உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும் தேவன் உம்மோடு இருக்கிறார்.'' 88தேசத்தை தேவனுக்காகவும் அவருடைய ஜனங்களுக்காகவும் கைப்பற்ற யோசுவா அபிஷேகம் பெற்றவனாயிருந்ததான். நாளானது குறுகினதாக இருந்தது. அபிஷேகிக்கப்பட்டு, செய்யத்தக்கதாக கொடுக்கப்பட்ட கட்டளையை பெற்ற அவனுக்கு அந்த பணியை செய்ய இன்னும் அதிகமான நேரம் தேவைப்பட்டது. அந்த மனிதன், யோசுவா, அவன் அபிஷேகிக்கப்பட்டிருந்தான். தேவன் அவனிடம், ''நான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்'' என்று கூறியிருந்தார். ஆமென். ''அந்த தேசத்தை நான் அவர்களுக்குக் கொடுக்கப் போகின்றேன். நீ அங்கு சென்று அமலேக்கியரையும், பெலிஸ்தரையும், பெர்சியரையும் மற்ற எல்லாரையும், மற்ற வித்தியாசமானவர்களையும் நீ துரத்திவிட வேண்டும். நான் உன்னுடன் இருக்கின்றேன். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. எந்த மனிதனும் உனக்கு தீங்கிழைக்க முடியாது. நீ போ'' என்றார். யோசுவா தன் பட்டயத்தை உருவினவனாய், “என்னைப் பின்பற்றுங்கள்'' என்று ஜனங்களிடம் கூறினான். அவன் அங்கு சென்று போர் புரிந்தான். என்ன நேர்ந்தது? சத்துருக்களின் மேல் அவன் வெற்றி சிறந்தான். சத்துருக்கள் இங்கு ஒரு சிறு கூட்டமும் அங்கு ஒரு கூட்டமாக இருந்தனர். இரவு நேரமானது வருகையில் அவர்கள் எல்லோரும் ஒரு பெரிய சைனியமாக ஒன்று திரண்டு, அவனுக்கு விரோதமாக திரண்டு வர இருந்தனர். சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கினது. சத்துருக்களை முறியடிக்க அவனுக்கு வெளிச்சம் அவசியமாயிருந்தது. சூரியன் மறையத் தொடங்கினது. அவன் முழங்கால் படியிட்டு, ''தேவனாகிய கர்த்தாவே, நான் என்ன செய்ய வேண்டும்? நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று முறையிடவில்லை அவன் பேசினான். அவனுக்கு ஒரு தேவை இருந்தது. ஆகவே அவன், ”சூரியனே, தரித்து நில்'' என்று கட்டளையிட்டான். அவன் தேவனுடைய சமுகத்தில் கதறவில்லை. அவன், ''சூரியனே, தரித்து நில் எனக்கு வெளிச்சம் அவசியமாயிருக்கிறது. நான் கர்த்தருடைய ஊழியக்காரன். இதற்காகவே நான் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கின்றேன். எனக்கு ஒரு தேவையுண்டு. தரித்து நில். நீ பிரகாசித்து கொண்டிரு... சந்திரனே, நீ எங்கு இருக்கின்றாயோ அகேயே தரித்து நில்“ என்று கட்டளையிட்டான். அவன் சத்துருக்களை முறியடித்து, யுத்தத்தை முடிக்கும் வரை ஆகவே, சூரியன் அவனுக்கு கீழ்ப்படிந்தது. 89அவன் முறையிடவில்லை. அவன் சூரியனை நோக்கி பேசினான், ''நீ அங்கேயே தரித்து நில். சூரியனே, அங்கேயே தொங்கி கொண்டிரு! சந்திரனே, நீ எங்கே இருக்கின்றாயோ அங்கேயே நில்.'' அவன், “கர்த்தாவே, இப்பொழுது நான் என்ன செய்வது? இன்னும் சிறிது சூரிய வெளிச்சத்தை எனக்கு தாரும்” என்று அவன் முறையிட்டு கதறவில்லை. அவனுக்கு சூரிய வெளிச்சம் தேவையாயிருந்தது, ஆகவே அவன் அதற்கு கட்டளை கொடுத்தான், சூரியன் அவனுக்கு கீழ்ப்படிந்தது. ஓ, என்னே! சூரியன் அசையாமலிருக்க அவன் கட்டளையிட்டான். சிம்சோன், அபிஷேகிக்கப்பட்டு, எழுப்பப்பட்டு, தேவனால் அபிஷேகிக்கப்பட்டு, வல்லமை என்னும் வரம் அளிக்கப்பட்டவனாய், பெலிஸ்தியரின் தேசத்தை பெலியஸ்திரை அழிக்க தேவனால் அபிஷேகிக்கக்பட்டு, பட்டயமும், ஈட்டியும் இல்லாத நேரத்தில். கவசம் அணிந்திருந்த அந்த ஆயிரம் பெலிஸ்தியர் ஒரே நேரத்தில் அவன் மேல் பாய்ந்தார்கள். அப்பொழுது அவன் முழங்காற்படியிட்டு, “ஓ, கர்த்தாவே, நான் தரிசனத்துக்காக காத்திருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குக் காண்பியும்'' என்ற முறையிட்டான்? ஒரு தேவையுண்டு என்று அவன் அறிந்திருந்தான். அப்பொழுது கழுதையின் தாடை எலும்பு ஒன்று அங்கிருப்பதை அவன் கண்டான். அதை கொண்டு அந்த ஆயிரம் பெலியஸ்தியரை அவன் முறியடித்தான். ஆமென்! அவன் தேவனிடம் முறையிடவில்லை. அவன் தன்னுடைய அபிஷேகிக்கப்பட்ட வரத்தை உபயோகித்தான். அந்த பணிகென்று அவன் அனுப்பப்பட்டான் என்பது அவனுக்குத் தெரியும் அதற்காகவே அவன் பிறந்திருக்கின்றான் என்பதும் அவனுக்குத் தெரியும். அபிஷேகத்தின் மூலம் அவன் ஒரு வரத்தைப் பெற்றிருந்தான் என்பதை உணர்ந்தவனாய், அந்த ஆயிரம் பெலிஸ்தரை முறியடித்தான். அவன் தேவனை நோக்கி முறையிடவில்லை. தேவன் அவனை அபிஷேகித்து, அவன் செய்திருந்த மற்றைய காரியங்களைக் கொண்டு அவனை உறுதிப்படுத்தியிருந்தார். பெலிஸ்தியரை அழிக்கத்தக்கதாக, தேவனால் அபிஷேகிக்கப்பட்டு, உறுதிப் படுத்தப்பட்டவனாக இருந்தான், அவன் அதை செய்தான். சூழ்நிலை என்னவாயிருந்த போதிலும், அவன் அதை செய்து முடித்தான். அவன் எதையும் கேட்கவில்லை. அது அவனுடைய பணியாக இருந்தது. அது தேவன் அவன் மூலமாக கிரியை செய்வதாகும். சாதாரண கழுதையின் தாடை எலும்பு ஒன்றை அவன் கையிலெடுத்து, பெலிஸ்தியரைத் தாக்கத் துவங்கினான். எப்படி அந்த… 90என்ன? பெலிஸ்திய போர் வீரர் அணிந்திருந்த பித்தளை தலைச்சீராவின் மேல் அந்த தாடை எலும்பு ஒரே தடவை மோதினாலே அது லட்சக்கணக்கான துண்டுகளாக, சுக்கு நூறாக உடைந்து போயிருக்கும். ஆனால், அவன் பெலிஸ்தியரில் ஆயிரம் பேரைக் கொன்ற பிறகும், அது உடையாமல் இருந்தது. அவன் எந்த கேள்விகளையும் கேட்கவில்லை. அவன் முறையிடவும் இல்லை. அவன் பேசினான். அவர்களை சங்கரித்தான். ஓ, என்னே! “கர்த்தாவே இந்த பெலிஸ்தியரை எதிர்கொள்ள முடியுமா? கர்த்தாவே, அதை செய்ய நீர் என்னை அனுப்பினீர் என்பதும் எனக்கு - எனக்கு தெரியும். ஆம் கர்த்தாவே, இந்த பெலிஸ்திய தேசத்தை அழிக்கவே நீர் என்னை அனுப்பினீர் என்பது எனக்கு தெரியும். இப்பொழுது, இங்கே அவர்களில் ஆயிரம் பேர் என்னை சுற்றி வளைத்துள்ளனர், என்னிடம் ஒன்றுமே இல்லையே? இப்பொழுது நான் என்ன செய்வது கர்த்தாவே?'' ஓ, ஒன்றுமே அவனை தொந்தரவுப்படுத்த போவதில்லை. அந்த பணிக்காகவே அவன் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கின்றான். அவனைச் சேதப்படுத்த ஒன்றுமேயில்லை. இல்லை, ஒரு காரியம் கூட இல்லை. அல்லேலூயா! கையில் கிடைத்த பொருளைக் கொண்டு அவன் அவர்களை முறியடித்தான். அது உண்மை. 91அவனுடைய விரோதிகள் அவனைச் சூழ்ந்து கொண்டு, ''நமது கைகளில் சிக்கிக்கொண்டான். அந்த ஸ்திரீயுடன் அவன் வீட்டினுள் இருக்கின்றான். கதவுகளும் எல்லா பக்கங்களிலும் அடைப்பட்டுள்ளன. அவன் தப்பமுடியாது. அவன் அகப்பட்டு கொண்டு விட்டான்'' என்று ஆரவாரம் செய்தனர். சிம்சோன் அப்பொழுது, “ஓ, கர்த்தாவே, இந்த ஸ்தாபனத்தினால் அவர்கள் என்னை வளைந்து கொண்டனர், ”ஊம்.. ஊ'' நான் என்ன செய்வேன்? நான் அதில் சேர்ந்து விட்டேனே! நான் என்ன செய்வேன்?'' என்று முறையிட்டானா? இல்லவே இல்லை. அவன் கதவுகளை உடைத்தெறிந்து, தன் தோள்களின் மேல் அதை சுமந்து கொண்டு வெளி நடந்தான். ஆமென். அந்த பணிக்கென்று அவன் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தான். அவன் தேவனால் அழைக்கப்பட்டவன். எனவே அவனை அடைத்து வைக்க முடியவில்லை. இல்லவே, இல்லை. அவன் கதவுகளைப் பெயர்த்து, அவனுடன் கொண்டு சென்றான். அதைக் குறித்து அவன் ஜெபம் செய்யவில்லை. இதை செய்யட்டுமா, வேண்டாமா என்று அவன் தேவனிடம் கேட்கவில்லை. கடமை என்னும் வரிசையில் சரியாக நிற்குதல். ஆமென்! ஆமென்! ஆமென்! அவன் பணியை அவன் செய்தான். ''என்னிடத்தில் முறையிடுகிறதென்ன? சொல்லிவிட்டு, முன்னேறு ஆமென். அவன் முறையிடுவதையும், விசும்புவதையும் விட்டுவிட்டான். பேசுவதற்கு அவன் போதிய வயதுடையவனாயிருந்தான். அது சரி! அவன் பெற்றிருந்த அபிஷேகத்தின் வல்லமை அவன் முன் நிற்கும் எந்த பெலிஸ்தியனையும் நிர்மூலமாக்கும் என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான். ஆமென். 92ஆனால் நாமோ, நாம் பெற்றுள்ள வல்லமையை உணராமல் இருக்கின்றோம். நாம் இன்னும் பால் புட்டியை வாயில் வைத்திருக்கும் குழந்தைகளை போன்று இருக்கின்றோம். அவன் அதை அறிந்திருந்தான், அந்த நோக்கத்திற்காகவே தேவன் அவனை எழுப்பியிருந்தார் என்பதையும் அவன் அறிந்திருந்தான். ஆகவே, அவனுடைய ஜீவிய காலம் முழுவதும் அவனுக்கு முன்பாக எதுவுமே நிற்க எதுவுமேயில்லை. மோசேயைப் போல் அவனும் ஒரு நோக்கத்திற்காக எழுப்பப்பட்டான் என்பதை சிம்சோன் அறிந்திருந்தான். எனவே, எதுவும் அவனை வழி மறக்க முடியாது. அமலேக்கியர் அல்லது யாரும் அவனைத் தடுத்து நிறுத்த முடியாது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தின் பாதையில் அவன் இருக்கின்றான். தான் பாதையில் இருப்பதை சிம்சோன் அறிந்திருந்தான். அவ்வாறே யோசுவாவும், அந்த தேசத்தைக் கைப்பற்றுவேன் என்னும் உறுதி கொண்டிருந்தான். தேவனுடைய வார்த்தை அவ்வாறு வாக்களித்திருந்தது. பரிசுத்த ஆவியானவரும் அதை உறுதிப்படுத்தி கொண்டு வந்தார். 93அவனுடைய வழியில் அவன் சென்று கொண்டிருந்தான். எதுவும் அவன் குறுக்கே நிற்க முடியாது. இல்லை, ஐயா! சரியாக கடமை என்னும் வரிசையில் அவன் தேவனுடன் சென்று கொண்டிருந்தான். சிம்சோனை எதுவும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவன் வாசல் கதவுகளைப் பெயர்த்து, தோள்களின் மேல் போட்டு கொண்டான். அவை நான்கு அல்லது ஐந்து டன் எடையிருக்கும். அவன் மலைகளின் மேல் ஏறிச்சென்று, அங்கு உட்கார்ந்து கொண்டான். எதுவும் அவன் வழியில் நிற்க முடியவில்லை. தேவனிடத்திலிருந்து அவன் அபிஷேகிக்கப்பட்ட வரத்தைப் பெற்றிருந்தான். “கர்த்தாவே, நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?'' என்று அவன் கதற வேண்டிய அவசியமில்லை. அதற்கென்று அவன் ஏற்கெனவே அபிஷேகம் செய்யப்பட்டிருந்தான். அது, ”கர்த்தர் உரைக்கிறதாவது“ என்பதாம். ”அவர்களை ஒழித்துவிடு'' அல்லேலூயா! (சகோ. பிரான்ஹாம் கரங்களை மூன்று தடவை தட்டுகிறார் - ஆசி) ''அவர்களை ஒழித்துவிடு! அந்த நோக்கத்திற்காகவே நான் உன்னை எழுப்பினேன்.'' ஆமென். “கர்த்தாவே, நான் என்ன செய்ய வேண்டும்? ஊ, சிவந்த சமுத்திரத்தின் அருகில் நான் என்ன செய்ய வேண்டும்?'' “ஒரு மலையை உங்களுக்கு நான் அடையாளமாகக் கொடுத்திருக்கிறேன் என்று உன்னுடன் நான் கூறவில்லையா? நீங்கள் இந்த மலைக்குத் திரும்ப வருவீர்கள். இஸ்ரவேல் புத்திரரை அந்த தேசத்துக்கு நீ கொண்டு செல்ல போகின்றாய். அந்த நோக்கத்திற்காகவே நான் உன்னை அழைத்தேன் அல்லவா? பின்னை ஏன் உன் வழியில் குறுக்கே இருக்கும் ஒன்றைக் கண்டு கவலை கொள்கின்றாய்? பேசு, முன்னே செல்'' என்றார் அவர். ஆமென்! ஆமென்! ''அந்த நோக்கதிற்கென்றே நான் உன்னை அழைத்திருக்கிறேன்.'' 94தாவீது, தான் அபிஷேகம் பெற்றிருப்பதை அறிந்திருந்தான். அவன் குறி தவறாதவன் என்பது உறுதி. மற்றவர்களும் அதை அறிந்திருந்தனர். தாவீது அபிஷேகம் பண்ணப்பட்டவனாக இருந்தான். அவன் அதை அறிந்திருந்தான். கோலியாத்தின் முன்னால் நின்றபோது, ''ஓ, இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?“ பொறும், நான் - நான்... நீர் முன்பு செய்ததை நான் அறிவேன். ஒரு கரடியையும், ஒரு சிங்கத்தையும் கொன்று போட எனக்கு வல்லமை தந்தீர். அப்படியானால், இங்கு நிற்கும் இந்த கோலியாத்தைக் குறித்து என்ன? ஊம், அவன் அவ்வாறு முறையிடவேயில்லை. அவன் வார்த்தையை உரைத்தான். அவன் என்ன சொன்னான்? ''நீயும் அவைகளில் ஒன்றைப் போல் நிர் மூலமாய் அவன் வார்த்தையை உரைத்து விட்டு முன் சென்றான். அவன் அச்சமயம் ஒரு ஜெபத்தை ஏறெடுக்கவில்லை. அவன் எந்த காணிக்கையும் செலுத்தவில்லை. அவன் அபிஷேகம் பெற்றுள்ளதை அறிந்திருந்தான். ஆமென். அவன் அபிஷேகிக்கப்பட்டிருந்தான். கவண் எறிந்த முறை அதை நிரூபித்தது. அவனுடைய அபிஷேகத்தின் பேரில் அவன் விசுவாசம் கொண்டிருந்தான். கவணிலுள்ள அந்த கல்லை தேவன் கோலியாத்தின் தலைச்சீராவின் நடுவிலுள்ள நெற்றியில் படும்படி திருப்புவார் என்னும் விசுவாசத்தை அவன் கொண்டிருந்தான். அந்த ஒரு இடம் மாத்திரமே மறைக்கப்படாமல் இருந்தது. அவன் அங்கே நின்று கொண்டிருந்தான். 95தான் குறி தவறாது அடிப்பவன் என்பதை அவன் அறிந்திருந்தான் (சகோதரன். பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை ஒரு தடவை தட்டுகிறார் - ஆசி). தேவன் அவனை அவ்வாறே செய்திருந்தார் என்பதையும் அவன் அறிந்திருந்தான் (சகோ. பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று முறை தட்டுகிறார்) ஆமென். தான் ஒரு சிங்கத்தை கொன்றான் என்பதை அவன் அறிந்திருந்தான், ஒரு கரடியையும் கொன்றான் என்பதை அவன் அறிந்திருந்தான், ஆனால், அது அவனுடைய பூமிக்குரிய தகப்பனின் காரியமாய் இருந்தது. இங்கே அவனுடைய பரலோகப் பிதாவின் காரியம் இருக்கின்றது. ஆமென் அவன் முழங்காற்படியிட்டு, ''கர்த்தாவே, நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்கவில்லை. ''அந்த சிங்கத்திற்கும் கரடிக்கும் நேர்ந்த கதியையே நீயும் அடைவாய். இதோ வருகிறேன்“ என்று அவன் பேசினான். தேவனுக்கு மகிமை! ஆம், ஐயா. ஓ. என்னே! அவன் வார்த்தையை உரைத்துவிட்டு, கோலியாத்தைச் சந்திக்க முன் சென்றான். கோலியாத்தின் பிரம்மாண்டமான உருவத்தைப் பற்றி அவன் கவலை கொள்ளவேயில்லை. தாவீது சிவந்த மேனியையுடைவனாயிருந்ததாக வேதம் கூறுகின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா? அவன் பெரிய உருவம் பெற்றிருக்கவில்லை. காண்பதற்கும், அவன் அழகாயில்லை. அவனுடைய சிறு உருவத்தையும், யுத்தம் செய்யும் திறன் இல்லாததைக் குறித்தும், அவன் பொருட்படுத்தவில்லை. பேராயர் அவனிடம், “இப்பொழுது இங்கே பார். அந்த மனிதன் வேத சாஸ்திரம் படித்தவன். அவன் போர்புரிவதில் சிறந்தவன். பிறப்பிலேயே அவன் ஒரு யுத்த வீரன். அவன் வாலிபப் பிராயம்முதற் கொண்டே அவன் போர் முறைகளில் சிறந்தவனாக விளங்குகின்றான். நீ யுத்தத்தில் அவனுக்கு ஈடாக முடியாது'' என்றான். அவனுடைய சகோதரரும், ''போக்கிரிப் பயலே, இதற்காகவா இங்கு வந்தாய்? வீட்டுக்கு ஓடிப்போ'' என்ற அவனைக் கடிந்து கொண்டனர். அது அவனை பாதிப்பிற்குள்ளாக்கவில்லை. ஏன்? தான் அபிஷேகம் பண்ணப்பட்டவன் என்பதை அவன் அறிந்திருந்தான். “என்னை சிங்கத்தினின்றும், கரடியின் கைகளினின்றும் தப்புவித்த தேவன் பெலிஸ்தியனிடமிருந்து விடுவிக்க வல்லவராயிருக்கிறார். இதோ வருகிறேன். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் நான் வருகிறேன்'' ஆமென். அவன் ஜெபம் செய்யவில்லை. அவனுக்காக ஏற்கெனவே ஜெபம் ஏறெடுக்கப்பட்டிருந்தது. உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே ஜெபத்தினூடாக தேவன் அவனை வழி நடத்தினார். அந்த பணிக்கென அவன் அபிஷேகம் பெற்றிருந்தான். அவன் பேசிய பிறகு முன்னே செல்ல வேண்டியதுதான். அதை மாத்திரமே அவன் செய்ய வேண்டியவனாக இருந்தான். பேசி பிறகு முன்னேறுவது மாத்திரமே. ஓ, அதற்காக செய்ய வேண்டியது இம்முறை மாத்திரமே. அவன்... 96சகோதரரும் பரியாசக்காரரும் அங்கேயும் நின்று கொண்டிருந்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா. ஓ, ஆமாம். அவர்கள் அங்கே நின்று கொண்டு பரியாசம் செய்து கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.... உங்களுக்குத் தெரியுமா, அவனுடைய சகோதரரும், “ஹா, ஹா, ஹா, உன்னால் முடியாது. நீ அடங்காப்பிடாரி'' என்றனர். அது அவனை சிறிதளவும் கூட அசைக்கவே இல்லை. ''நீ மற்றவரை காட்டிலும் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறாயா? உன்னை பெரியவனாகக் காண்பிக்க விரும்புகின்றாய் என்றெல்லாம் குற்றஞ் சாட்டினர். அவனோ எதற்கும் அசையவில்லை.'' அவன் பெரியவனாக தன்னைக் காண்பிக்க விரும்புகின்றான், என்னும் கருத்தை அவர்கள் மனதில் கொண்டிருந்ததால், அவர்களுடைய கண்களுக்கு அவ்வாறுதான் தென்படும். அவர்கள் மனித ஞானத்தை அடிப்படையில் அதை நோக்கினர். அபிஷேகத் தைலம் தன்மேல் தங்கியிருந்ததை தாவீது அறிந்திருந்தான். ஆமென். ஆகவே, அது அவனுக்கு எவ்வித வித்தியாசத்தையுமே உண்டு பண்ணவில்லை. அவன், “அந்த பெலிஸ்தியனுக்கு, கரடி மற்றும் சிங்கத்திற்கு ஆனது போலவே ஆவான், இதோ நான் வருகிறேன்'' என்றான். அது நடந்தேறுவதற்கு முன்பாகவே அதை அவன் முன்னறிவித்தான். அவன் என்ன செய்தான்? அவன் கரடியைக் கொன்றான். சிங்கத்தைக் கொன்று போட்டான். அவன் சிங்கத்தை... எதை கொண்டு வீழ்த்தினான்? ஒரு கவண் கல்லின் மூலம். பிறகு கத்தியை எடுத்தான், பிறகு ஒரு கரடியை கொன்றான். சிங்கம், அவன் சிங்கத்தை கத்தியால் கொன்று போட்டான். அதேவிதமாகத்தான் அவன் கோலியாத்திற்கும் செய்தான். ஒரு கல்லை கொண்டு அவனை வீழ்த்தி, தன் பட்டயத்தை உருவி, அங்கேயே அவன் தலையை வெட்டி போட்டான். அது நடப்பதற்கு முன்னே அவன் முன்னறிவித்தான்? ''அவைகளைப் போலவே நீயும் ஆவாய்'' என்றான். என்ன? அவன் வார்த்தையைப் பேசினான், பிறகு அதை நிறைவேற்றுவதற்கு அவன் முன்னே சென்றான். ஆமென். ஓ, சகோதரனே! அவன் பேசினான். அந்த நாளிலே அவன் சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தான். 97மனிதன் பேச வேண்டிய ஒரு காலகட்டம் இருந்திருக்குமானால், அது இப்பொழுதேயாகும். நான் இன்னும் சில நிமிடங்களில் முடிக்கப் போகின்றேன். சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். வேத வாக்கியங்கள் சிலவற்றை இங்கு எழுதி வைத்திருக்கிறேன். அலங்கார வாசலின் அருகே சுகமடைவதற்கு ஏற்ற விசுவாசத்தைப் பெற்றிருந்த முடவனைப் பேதுரு கண்டபோது, அவன் முறையிடவில்லை. அவன் முழு இரவு ஜெபமோ, அல்லது முழுநாள் ஜெபமோ, அல்லது நீண்ட ஜெபமோ செய்யவில்லை. ''கர்த்தாவே, இந்த ஏழை முடவனுக்கு உதவி செய்யுமாறு ஜெபிக்கிறேன். அவனுக்கு விசுவாசம் உண்டு என்று காண்கிறேன். அவன் ஒரு விசுவாசி என்பதை நான் அறிவேன். ஆகவே அவனிடத்தில் நான் கேட்டேன். அவன் - அவன்... நான் - நான் - நான்.... அவன் தனக்கு விசுவாசம் உண்டு, என்று அறிக்கையிடுகிறான். நான் கூறுபவை அனைத்தையும் அவன் அப்படியே விசுவாசிக்கிறான். நீர் செய்த யாவற்றையும் நான் அவனுக்கு எடுத்துரைத்தேன். ''கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை அவனுக்காக நீர் எனக்குத்தர வேண்டும்'' என்று நீண்ட ஜெபமா செய்தான்? இல்லை, அவன் அபிஷேகம் பெற்ற அப்போஸ்தலன் என்பதை அறிந்திருந்தான். இயேசு கிறிஸ்து, “வியாதியஸ்தர்களை சுகப்படுத்துங்கள், மரித்தோரை உயிரோடெழுப்புங்கள், குஷ்டரோகிகளை சுத்தமாகுங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள். இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்'' என்னும் கட்டளையை சீஷர்களுக்கு அளித்திருந்தார். ''பேதுருவே, இவைகளை நீ செய்ய வேண்டும்'' என்றார். ஆகவே, இந்த பணியைச் செய்ய அவன் நியமிக்கப்பட்டிருந்தபடியால், அவன் ஜெபம் எதுவும் செய்ய அவசியமில்லை. 98அவன் என்ன சொன்னான்? ''இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்..'' அவன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை உச்சரித்தான். அந்த மனிதன் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் கையைப் பேதுரு பிடித்து, “எழுந்து காலூன்றி நில்'' என்று அவன் கூறினான். அவனுடைய கணுக்கால் எலும்பு பெலனடையும் வரை அவன் கைகளைப் பேதுரு பிடித்து கொண்டேயிருந்தான். அந்த முடவன் நடக்க தொடங்கினான். அவன் ஒரு இரவு ஜெபம் செய்யவில்லை. அவன் தேவனிடம் முறையிடவில்லை. ஏன்? இந்த வேலைக்காகவே அவன் அபிஷேகம் பெற்றுள்ளான் என்று இயேசு வேதம் உதடுகளால் மொழிந்த வார்த்தைகளை அவன் உறுதியாக விசுவாசித்தான். ஆம், அவன் வார்த்தையை பேசி அந்த முடவனின் கையைப் பிடித்து தூக்கிவிட்டான். அந்த நோக்கத்திற்காகவே அபிஷேகிக்கப்பட்ட அப்போஸ்தலன் என்பதை அவன் அறிந்திருந்தான். பேதுருவின் நிழல் படும்படியாக கிடத்தப்பட்ட வியாதியஸ்தர், ''பேதுருவே, எங்களுக்காக முறையிட்டு, தேவனிடம் விசுவாச ஜெபத்தை ஏறெடுங்கள்'' என்று கூறவில்லை. இல்லவே இல்லை. அவன் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டு, அவரால் உறுதிப்படுத்தப்பட்ட அப்போஸ்தலன் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். எனவே அவர்கள், “பேதுருவின் நிழல் படும்படியாக எங்களை படுக்கவையுங்கள். அவர் ஒரு வார்த்தை கூட சொல்ல வேண்டுமெனும் அவசியமிராது என்பதை விசுவாசிக்கிறோம் என்றனர். அவர்களுக்குள் ஜீவன் இருந்தது. பேதுரு அவர்கள் எல்லோரிடமும் செல்ல முடியவில்லை. எனவே அவர்கள் தானாகவே முன்வந்து, சுகமாக்கும் செயலில் தங்கள் பாகத்தை வகித்தனர். 99மோசே, “செல்வது நான் அல்ல. நாம் எல்லோருமே செல்கின்றோம்” என்றான். நாம் எல்லோரும் ஏதோ ஒன்றை செய்தாக வேண்டும். நாம் எல்லோரும் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, அங்கே நின்று கொண்டிருந்த அந்த அப்போஸ்தலனைக் கண்டனர், வியாதியாயிருந்தவனை சுகப்படுத்தினதையும் மற்றக் காரியங்களைச் செய்ததையும் அவர்கள் கண்டனர். அவன் தங்களிடம் வர இயலாது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ''பேதுருவே இங்கே வந்து ஜெபம் செய்யும், கர்த்தர் உரைக்கிறதாவது என்பது வரும்வரை காத்திருந்து பிறகு என்னிடம் வந்து கூறும். கர்த்தர் என்ன கூறுகிறார் என்பதை பார்த்து வாரும்'' என்று அவர்கள் கூறவில்லை. அவர்கள், ''அவருடைய (பேதுருவுடைய - தமிழாக்கியோன்) நிழலில் நாங்கள் கிடத்தப்பட்டால் போதும், ஏனெனில் இயேசு கிறிஸ்துவுக்குள் இருந்த அதே தேவன் தான் இவருக்குள்ளும் இருக்கின்றார், ஆகவே அதே காரியங்கள் நடை பெறுவதை நாங்கள் காண்கின்றோம். ஆகவே, அந்த நிழலானது நம்மேல் பிரதிபலிக்குமானால் நாம் சொஸ்தமாவோம் என்றனர். ஆகவே, ஒவ்வொருவரும் சொஸ்தமானார்கள் என்று வேதம் கூறுகின்றது. “கர்த்தாவே, நான் சென்று இந்த அப்போஸ்தலனின் நிழல்களில் படுத்துக் கொள்ளுகிறேன்?'' என்று கூறி முழு இரவு ஜெபம் செய்யவில்லை. இல்லை. அவர்கள் அதை அறிந்திருந்தனர். ஒளி அவர்கள் மேல் பட்டது. அவர்கள் இருதயங்கள் நிரம்பியிருந்தது. அவர்கள் விசுவாசம் கட்டவிழ்க்கப்பட்டது. ஆமென். அவர்கள் அதை விசுவாசித்தனர். அதைக் கண்டிருந்தனர். பவுலின் உறுமால்கள், அதேவிதமாகத்தான். (இப்பொழுது, முடிக்க போகின்றேன்.) 100அடிக்கடி தீயில் விழும் சந்திரரோகியான அந்த பிசாசு பிடித்த பையனை இயேசுவினிடம் கொண்டு வந்தபோது, அவர் பிதாவே, நான் உம்முடைய குமாரன், இன்னின்னதைச் செய்ய நீர் என்னை உலகிற்கு அனுப்பினீர். இவனை நான் சுகப்படுத்தலாமா?'' என்று முறையிடவில்லை. அவர், ''சாத்தானே இவனை விட்டு வெளியே வா'' என்று அதட்டினார். அவர் கட்டளையிட்ட மாத்திரத்தில் அந்த பையன் சுகமடைந்தான். இரண்டாயிரம் பிசாசுகளை அவனுக்குள்ளே கொண்டிருந்த அவனை, லேகியோனை அவர் சந்தித்த போது, அங்கே இயேசு முறையிட்டுக் கொண்டிருக்கவில்லை. அங்கே பிசாசுகள் தான் முறையிட்டுக் கொண்டிருந்தன, ''நீர் எங்களை வெளியே துரத்தப் போகின்றீர் என்றால், அந்த பன்றிகளின் கூட்டத்திற்குள் நாங்கள் செல்லத்தக்கதாக நீர் எங்களுக்கு உத்தரவு கொடும்''. ஓ, என்னே! இயேசுவும், 'இப்பொழுது, பிதாவே, என்னால் இதைச் செய்யக்கூடுமா?'' என்று கூறவில்லை. அவர், “அவனை விட்டுவெளியே வா” என்று கூறினார், பிசாசுகளும் ஓடிப்போயின. நிச்சயமாக, அவரே மேசியா என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். 101மரித்து நான்கு நாட்கள் கழிந்தன. அவர்கள் இயேசுவிடம், ''ஆண்டவரே, நீர் இங்கிருந்தீரானால், அவன் மரித்திருக்க மாட்டான்'' என்றனர். அதற்கு அவர், ''நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறேன் மரித்தாலும் பிழைப்பான் என்றார்''. ஆமென். அவர் யாரென்பதை அறிந்திருந்தார். அவரே இம்மானுவேல் என்றும், அவரே உயிர்த்தெழுதலும், ஜீவனுமானவர் என்றும், அவருக்குள் தேவத்துவம் பரிபூரணமாய் வாசம் செய்தது என்றும் அவர் நன்கு அறிந்திருந்தார். அந்த ஜனங்களை அவர் கண்டதும், அவர் செய்ய வேண்டியது என்னவென்று தேவன் அவருக்குப் போதித்திருந்ததை நன்கு அறிந்தவராய் அவர் கிரியை செய்தார். அவர், “சற்று பொறுங்கள். நான் முழங்காற்படியிட்டு ஆண்டவரிடம் கேட்கப் போகின்றேன். நீங்களும் முழங்காற்படியிட்டு ஜெபம் செய்யுங்கள்” என்று அவர் கூறவேயில்லை. “நான் இதை செய்யக் கூடும் என்று விசுவாசிக்கின்றீர்களா?'' என்று அவர்களைப் பார்த்து கேட்டார். அவர் முறையிடவில்லை; அவர்கள் தான் முறையிட்டனர். “ஆம் ஆண்டவரே, நீர் இவ்வுலகில் வரவேண்டிய தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறேன்'' ஓ, என்னே! அவர் அங்கு அடையாளம் கண்டுகொள்ளப்பட்டார். எனவே ஏதோ ஒன்று அங்கு நிகழ வேண்டும். “லாசருவே, வெளியே வா!'' அவர் பேசினபோது மரித்துப் போயிருந்த அந்த மனிதன் வெளியே வந்தான். ”என்னாலே முடியுமா? என்றல்ல. அவர் பேசினார். அந்த விசுவாசம் சந்திக்கப்பட்ட போது காரியமானது சம்பவித்தது. 102அவர் பேசுகிறார், அவர் பேசினார். குருடர் பார்வையடைந்தனர், சப்பாணிகள் நடந்தனர். செவிடர் கேட்டனர். பிசாசுகள் அலறி வெளியே வந்தன. மரித்தோர் உயிரோடெழுந்தனர். இவையாவும் நிகழ்ந்தன. என்ன? இதற்காக அவர் ஜெபம் எதுவும் ஏறெடுக்கவில்லை. அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியா அவரே. அந்த மேசியா அவரே, அவர் தம்முடைய ஸ்தானத்தை அறிந்திருந்தார். அவர் எதை செய்ய அனுப்பப்பட்டார் என்பது அவருக்குத் தெரியும். பிதாவானவர் விசுவாசிகளிடம் அவரை மேசியாகவே வெளிப்படுத்தியிருக்கின்றார் என்பது அவருக்குத் தெரியும். எனவே விசுவாசம் கொண்டிருந்த அந்த விசுவாசியை அவர் சந்தித்த போது, வார்த்தையை பேசினார். உடனே பிசாசுகள் சிதறின. ஆம், ஐயா “முறையிடாதே, சொல்'' ஆமென். தேவன் அளித்திருந்த உரிமைகளை அவர் அறிந்திருந்தார். நாமோ நமக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையை அறியாதவர்களாயிருக்கிறோம். தாம் யாரென்பதை அறிந்திருந்தார். நாம் யாரென்பதை நாம் அறியாமலிக்கிறோம். மோசே தான் வகித்த பதவி என்னவென்பதை மறந்து போனான். சிம்சோன் அதை உணர்ந்தான். மற்றவர்களும் அதை உணர்ந்திருந்தனர். யோசுவாவும் அதை உணர்ந்திருந்தான். ஆனால் மோசேயோ அதை மறந்து போனான். எனவே தேவன் அதை நினைவுபடுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவர் மோசேயிடம், ''என்னிடத்தில் நீ முறையிடுகிறதென்ன? அந்த பணியை செய்வதற்கே நான் உன்னை அனுப்பியிருக்கிறேன். பேசு! பின்பு உன் நோக்கம் நிறைவேற முன் செல்வாயாக. இந்த மலைக்கு நீங்கள் வருவீர்கள் என்று நான் வாக்களித்தேன். அல்லவா? இஸ்ரவேல் புத்திரரைக் கூட்டிக்கொண்டு போ. அவர்களை வழி நடத்திச் செல்வாயாக. நீ பேசினால் மாத்திரம் போதும். உன் வழியின் குறுக்கே எது நின்றாலும் பரவாயில்லை. அதை நீ அகற்றமுடியும். அதற்காக நான் உனக்கு அதிகாரத்தை அளித்திருக்கிறேன். நான் பேசினேன்.... நீ பேசி வண்டுகள் சிருஷ்டித்தல் இன்னும் மற்ற காரியங்கள் நடப்பிக்கப்பட்டன. இப்பொழுது நீ எதைக் குறித்து என்னிடம் முறையிட்டு கதறிக் கொண்டிருக்கிறாய்? ஏன் என்னிடம் நீ வந்து இக்காரியங்களைக் குறித்து என்னிடம் முறையிட்டு கதறிக் கொண்டிருக்கின்றாய்? பேசு, பிறகு அது கிரியையில் வருவதை பார், அவ்வளவு தான்.'' ஓ, என்னே! ஓ, இது, எனக்கு மிகவும் விருப்பமானது. 103இங்கே, இயேசு, அவர் கூறின எல்லாக் காரியங்களும், அவர் வார்த்தையை மாத்திரம் பேசினார். அது நிறைவேறிற்று. அவர் குமாரன் என்பதை தேவன் சரியாக உறுதிப்படுத்தியிருந்தார். ''இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன். இவருக்கு செவி கொடுங்கள்'' என்றார் அவர். அவரை கவனியுங்கள். இது எனக்கு பிடிக்கும். எப்படி அவர், தம்மை விமர்சனம் செய்து குற்றஞ்சாட்டினவர்களுக்கு முன்பாக தைரியமாகவும், கம்பீரமாகவும், ஆமென், அவர் இந்த ஆலயத்தை இடித்து போடுங்கள். என் பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்வேன். அவர் என்ன செய்வார் என்பதை கவனியுங்கள். இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், நான் மறுபடியும் அதை எழுப்புவேன்'' என்று உறுதியாகக் கூறினார். ''நான் எழுப்பலாம் என்று நினைக்கிறேன். நான் முயற்சி செய்வேன்'' என்றா அவர் கூறினார்? இல்லை. நான் எழுப்புவேன்'' என்று ஆணித்தரமாகக் கூறினார். ஏன்? ஏனெனில் வேதவாக்கியம் அவ்வாறு கூறியிருக்கின்றது. தேவன் அவருடைய சரீரத்தை உயிரோடே எழுப்புவார் என்று வாக்களித்த அதே வேதாகமம் தான் நமக்கு அதிகாரத்தையும் வல்லமையையும் அளித்துள்ளது. ஆமென். ''என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றை குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.'' “ஏன் என்னை நோக்கி முறையிடுகின்றாய்? பேசு, பிறகு முன்னேறிச் செல்'' ஓ, தைரியமாக நான்..... 104ஆகவே இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். (நாம் முடிக்க போகிறோம்) அவர் தான் யோவான் 14:12ல், “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்'' என்று உரைத்திருக்கின்றார். அது சரியா? (சபையார் ”ஆமென்'' என்று கூறுகின்றனர் - ஆசி). அவர் தாம் அவ்விதம் கூறியுள்ளார். இயேசு தாம் மாற்கு; 11:24ல், ''எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து; சொல் இந்த மலையைப் பார்த்து; நீ பெயர்ந்து சமுத்திரத்தில் தள்ளுண்டு போ என்று சொல்லி தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும்'' என்று கூறியிருக்கிறார். இப்பொழுது, நீங்கள் அகந்தையாய் சொன்னால் ஒன்றும் நடக்காது. ஆனால் அந்த பணிக்கென்று நீங்கள் அபிஷேகம் பண்ணப்பட்டு, அவ்விதம் செய்வது தேவனுடைய சித்தமாயுள்ளது என்பதை திட்டவட்டமாய் அறிந்து அதைச் சொன்னால், அது கண்டிப்பாக நிறைவேறும். ''நீ...'' அவரே தான், ''நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்ளவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்'' என்று கூறியிருக்கிறார். நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிகின்றதா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). 105என்னை மன்னியுங்கள் இதை நான் கூறுவதற்கு தூண்டப்படுகின்றேன். இதை நான் கூறியாக வேண்டும். அன்று காட்டுக்குள் நான் இருக்கும் போது, என்று கூறியவர் அவர்தான். “வேட்டையாடுவதற்கு உனக்கு ஒன்றுமில்லையே.” ஆகவே, அவர் மூன்று அணில்களை சிருஷ்டித்து எங்களுக்கு முன்பாக நிற்கும்படிக்கு செய்தார். எங்களுக்கு முன்பாக மூன்று அணில்களை சிருஷ்டித்தார். அது என்ன? வார்த்தையை மாத்திரம் பேசுதல், சொல், ''அவை அங்கே, அங்கே, அங்கே இருக்கும்'' அங்கே அவை இருந்தன. அதைச் செய்தவர் அவரே தான். சார்லி, ராட்னி, அங்கே கெண்டக்கியிலுள்ள அவர், நெல்லி, மார்ஜி, இன்னும் உங்களிலுள்ள மற்றவர். அது அவரே, அங்கே மோசேயோடு பேசின அதே தேவன் தான், ''ஏன் என்னிடம் முறையிட்டு கொண்டிருக்கிறாய்? வார்த்தையை பேசு!'' அவைகளை சிருஷ்டித்து கொண்டு வந்தவரும் அவர்தான். அது அவரே. அவர் தான். ஓ, என்னே! அவரே தான், ஒரு ஆண்டுக்கு முன்பு ஒரு தரிசனத்தை எனக்களித்து, நாங்கள் அங்கு செல்வோம் என்றும், இந்த ஏழு முத்திரைகளைப் பற்றியும், எப்படி அங்கே ஒரு -ஒரு - ஒரு - ஒரு மகத்தான இடி முழக்கம் அதை துவக்கிவிடும் என்றும் அது ஒரு கூர்நுனி கோபுர வடிவில் அது இருக்கும் என்றும் கூறினார். ஆகவே, அந்த லுக் பத்திரி... ஃலைப் (Life) பத்திரிகை அதை வெளியிட்டது. அந்த புகைப்படம் அதோ சுவரில் தொங்குகின்றது. அதைக் கூறினவர் அவரே தான். 106அன்றிரவு நான் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு கொடிய விஷத்தன்மையுடைய நீண்ட கிழக்கு ஆப்பிரிக்க பச்சை நிற மாம்பா (Mamba) பாம்பு என் சகோதரனை கடிக்க வரும் என்று அவர் கூறினார். ஆகவே, அவர் ''உனக்கு... அதை கட்டுக்குள் கொண்டு வர உனக்கு வல்லமை அளிக்கப்பட்டுள்ளது. அல்லது அவைகளில் மற்றவற்றை கூறினார். அதைக் கூறியவர் அவரே ஆகும். அங்கே உட்கார்ந்திருக்கின்ற என்னுடைய தலை நரைத்த என்னுடைய மனைவியிடம். அவர் தான் அன்று காலை என்னை உறக்கத்தினின்று எழுப்பி அந்த அறைக்குள் மூலையில் நின்று கொண்டு, ''நீ எதை செய்வதற்கும் எங்கு செல்வதற்கும், எதை சொல்வதற்கும் சற்றேனும் அஞ்ச வேண்டாம். ஏனெனில் என்றென்றும் கைவிடாத இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் நீ எங்கு சென்றாலும் உன்னுடன் இருக்கும்'' என்றார். அங்கே, சபின்யோ கான்யானில் (Sabinyo Canyon) அவர், மூன்று மாதங்களுக்கு முன்பாக என்ன நடக்கப்போகின்றது என்று எதிர்பார்த்து நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன், நான் அங்கே நின்று கொண்டிருந்த போது ஒரு பட்டயம் என் கையில் விழுந்தது, ''இது தான் அந்த ராஜாவின் பட்டயம்'' என்றார். அது அவரே தான். அவர் தான் என்னிடம், “நான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடு இருக்கிறேன். நான் உன்னை அனுப்புகிறேன்'' என்றார். 107அவர் தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு சிறு பையனாக ஒரு சிறு பிரசங்கியாக நான் நதியின் கரையில் நின்று கொண்டிருந்த போது, அந்த ஒளி அதே அக்கினி ஸ்தம்பம் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து அங்கே நின்று, “கிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானனை நான் அனுப்பினது போன்று, உன் செய்தி அவருடைய இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக உலகெங்கும் செல்லும்'' என்று வாக்களித்தார். என் போதகர் அதைக் கேட்ட போது, அது எப்படி முடியும்? என்று எள்ளி நகையாடினார். ஆனால், அவர் அன்று அளித்த வாக்குத்தத்தம் எவ்வித பிழையுமின்றி நிறைவேறினது. அவர் தான் அதை சொன்னார். ஆம் ஐயா! அவர் தான் தரிசனத்தில், ''அது நிறைவேறும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தவர் அவர் தான், ''உங்களில் ஒருவன் தரிசனம் கண்டு, அல்லது தீர்க்கதரிசனம் உரைத்து அது நிறைவேறினால், அப்படியானால் நினைவில் கொள்ளுங்கள், அது அவன் அல்ல அது நான் தான்“ என்று கூறினார். ஓ, என்னே! அது அவர் தான், அது அவர் தான், அது அவர் தான், என்று நான் கூறிக் கொண்டே இருந்தாலென்ன. 108அந்த நதிக்கரையில் அக்கினிஸ்தம்பம் இறங்கி வந்தது என்று நான் கூறின போது, அவர்கள் என் சொற்களை நம்பவில்லை. ஆனால் அன்றிரவு முப்பதாயிரம் பேர் முன்னிலையில் நான் அந்த பாப்டிஸ்டு பிரசங்கியுடன் சாம் ஹஸ்டம் அரங்கத்தில் இருந்த போது, கர்த்தருடைய தூதன் அவருடைய புகைப்படத்தை எடுக்க அனுமதித்தார். அது அவர் தான், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவர் தான் இவை எங்கு நிகழும் என்பதை முன்னறிவித்தார். அவர் தான். இதைக் கூறினவர் அவர் தான். இந்த காரியங்களைச் செய்தவர் அவர் தாம். தான் செய்ய போவதாக கூறின எல்லா காரியத்தையும் சரியாக அவர் செய்திருக்கின்றார். ஆமென்! நான் எதற்காக காத்திருக்க வேண்டும்? தேவன் அந்த வார்த்தையை நம்மிடையே உறுதிப்படுத்தியிருக்கின்றார். அதுதான் சத்தியம். ஆகவே, நாம் பிரயாணப்பட்டு செல்வோம். எல்லா அவநம்பிக்கையையும், பாவங்களையும் நாம் உதறித்தள்ளி, கர்த்தருடைய வழியில் நடந்து செல்வோம். உங்கள் வீட்டை சுத்தப்படுத்துங்கள். அதை நன்றாக தேய்த்து கழுவுங்கள். ஜூனியர் ஜாக்ஸன் தன் தரிசனத்தில் விளக்குகள் மாத்திரம் இருந்ததாக கூறினார்; அல்லது அவருடைய சொப்பனத்தில், அவர் இங்கே உட்கார்ந்து கொண்டிருப்பாரானால், தான் கண்ட சொப்பனத்தைஅன்றிரவு என்னிடம் கூறினார். அந்த சொப்பனத்தில் அவர் விளக்குகளைத் தவிர வேறொன்றையும் காணவில்லை. அந்த விளக்குகள் பொன் கயிறுகளால் சுற்றப்பட்டிருந்தனவாம். 109சகோ. காலின்ஸ் அந்த மீனை குறித்து கவலைப்பட வேண்டாம். அது வெண்மை நிறம் கொண்டதாயிருந்தது. அதை எப்படிகையாளுவது என்று உமக்குத் தெரியவில்லை. சத்தியத்திற்கு முரணாயுள்ள எல்லாவற்றையும் உதறித் தள்ளுங்கள். இது எவ்வளவு மூடத்தனமாக தென்பட்டாலும், இதுதான் சத்தியம். முன்னேறிச் செல்லுங்கள். இயேசு கிறிஸ்துவை மரித்தோலிருந்து எழுப்பின அதே பரிசுத்த ஆவியானவரே இவர். வாயினால் பேசி சிருஷ்டித்தவரும் மோசேயின் காலத்தில் இருந்தவருமாகிய அவர் இன்றும் மாறாமல் இருக்கிறார். இந்த கடைசி கால அழைப்பை அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். “சோதோமின் நாட்களில் நடந்தது போல மனுஷக்குமாரன் வரும் நாட்களில் நடக்கும். அவர், அந்த வாக்கை நிறைவேற்றினார். சோதோம் அங்கு இருக்கின்றது. பில்லி கிரகாமும், ஓரல் ராபர்ட்ஸும் அங்கிருக்கின்றனர். இவ்விரு ஸ்தலங்களிலும், அவர் வாக்களித்த அதே அடையாளங்கள் நிகழ்ந்து வருகின்றன. சபைமுன் சென்று கொண்டிருக்கிறது. அவர்தான் அவ்வாறு நிகழுமென்று கூறினார். ஓ, கர்த்தாவே எனக்கு தைரியத்தைத் தாரும் என்பதே என் விண்ணப்பம். ஓ, தேவனாகிய கர்த்தாவே, எனக்கு உதவிபுரியும். நான் முடிக்க வேண்டும். தாமதமாகின்றது. 110“நான் உன்னுடன் இருக்கின்றேன் என்பதை நான் நிரூபித்த பின்பும் ஏன் முறையிட்டு கொண்டிருக்கின்றாய்? நான் உங்களுடைய வியாதியஸ்தரைச் சுகப்படுத்தவில்லையா? உனக்கு நான் முன்னறிவித்த யாவும் அப்படியே பிழையின்றி நிறைவேற வில்லையா? உங்கள் போதகர் இவைகளைச் செய்ய முடியாது. அவர் சாதாரண ஒரு மனிதன். கர்த்தராகிய நானே இவைகளை செய்தேன். நான்தான் அவர் மூலம் எல்லாவற்றையும் அறிவிக்கிறேன். போதகரல்ல, அது என் சத்தம். அவர்கள் மரித்து விழும் போது அவர்களை எழுப்புவது நான்தான். நான்தான் பிணியாளிகளை சுகப்படுத்துகிறேன். நான்தான் இவையனைத்தையும் முன்னறிவிக்கிறேன். நான்தான் மக்களை இரட்சிக்கிறேன். நான்தான் வாக்குத்தத்தத்தை அளிக்கிறேன்” என்று கூறுகின்றார் அவர். தேவனே, முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், என்கையில் நீர் கொடுத்த வார்த்தையாகிய பட்டயத்தை பிடித்துக் கொண்டு, மூன்றாம் இழுப்பை நோக்கி அணிவகுத்துச் செல்ல எனக்கு துணிவைத்தாரும் என்பதே என் விண்ணப்பமாயிருக்கிறது. நாம் தலை வணங்குவோம். 111பரலோகப் பிதாவே, நேரம் தாமதமாகி கொண்டே செல்கின்றது. அதே சமயத்தில் உம் வார்த்தையும் விலை மதிக்க முடியாத அளவுக்கு முக்கியத்துவம் அடைந்து வருகின்றது. ஒவ்வொரு காலத்திலும் என்றென்றும் மாறாத கிறிஸ்துவின் பிரசன்னம் தம் பிள்ளைகளை சந்திப்பதை நாங்கள் அறிகிறோம். உம் நன்மைகளுக்காக எவ்வளவாக உமக்கு நன்றி செலுத்துகின்றேன். எங்களை இம்மட்டும் காத்து கொண்டு ஆசீர்வதித்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். இந்த உறுமால்களை என் கைகளில் ஏந்தி கொண்டிருக்கும் இந்நேரத்தில் கர்த்தாவே, இதை விசுவாசிக்க ஜனங்களுக்குப் போதிய விசுவாசம் உண்டு. ஒவ்வொரு பிசாசும், எல்லா நோய்களும் ஜனங்களை விட்டு அகன்று போகட்டும். தேவன் மூலமாய் தோன்றாத ஆவிகளாகிய எல்லாவித அசுத்த ஆவிகளையும் வியாதிகளையும் வெளியே வரும் படி கட்டளையிடுகிறேன். ஒவ்வொரு வியாதிகளின் ஆவியும், எல்லா வியாதிகளும், துன்பங்களும் நாங்கள் மனிதனுடைய நிழல் படும்படியாக படுத்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி செய்வது வேத பூர்வமானதாக இருக்கும். ஆனால், உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுவிசேஷத்தின் நிழலில் நாங்கள் படுத்து கொண்டிருக்கிறோம். அந்த மகத்தான அக்கினிஸ்தம்பம் முன்னாலும் பின்னாலும் இக்கட்டடத்தில் அசைந்து கொண்டிருக்கையில், அதே காரியம் அவர் அதன் மூலமாகத்தான் கீழ் நோக்கினார், அப்பொழுது சிவந்த சமுத்திரம் பிளவுண்டு, இஸ்ரவேல் ஜனங்கள் அதன் வழியாகக் கடந்து சென்றனர். ஆனால், இச்சமயம் அவர் நோக்கும் போது, அவருடைய சொந்த குமாரனுடைய இரத்தம் தெளிக்கப்பட்ட ஒன்றாய் அது இருந்தது, கிருபையும் இரக்கமும் இருந்த ஒன்று. கீழ்ப்படிதல் உள்ளவர்களாக நாம் இருப்போமாக. கதறுவதையும் முறையிடுவதையும் நாங்கள் விட்டுவிடட்டும். இந்த பணிக்கு எங்களை நீர் அழைத்திருக்கிறீர் என்பதை உணருவோமாக. இதுதான் அந்த நேரம். நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதைப் பேசுகின்றேன். எல்லாவித வியாதியும் இவ்விடத்தை விட்டுவெளியேறுவதாக. 112இயேசு கிறிஸ்துவின் நாமத்தைக் கூப்பிடும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இன்று தாங்கள் வாழ்க்கையை மறுபடியுமாக பிரதிஷ்டை செய்து கொள்ள அருள்புரியும். கர்த்தாவே, என் ஜீவியத்தையும் நான் பலிபீடத்தில் அர்ப்பணிக்கிறேன். நான் வெட்கத்தால் தலைகுனிந்து, எந்த பூமியிலிருந்து என்னை உண்டாக்கினீரோ, அந்த பூமிக்கு என் தலையைத் தாழ்த்துகிறேன். தேவனாகிய கர்த்தாவே, என் பெலவீனத்தையும், அவிசுவாசத்தையும் குறித்து வெட்கமடைகிறேன். கர்த்தாவே, என்னை மன்னியும். எனக்கு தைரியத்தைத் தாரும். எங்கள் அனைவருக்கும் தைரியத்தைத் தாரும். நான் மோசேயைப் போன்ற உணர்வு பெறுகின்றேன். நாங்கள் எல்லோரும் சாலையில் சென்று கொண்டிருக்கிறோம். யாரையும் விட்டுவிட்டுப் போக எங்களுக்கு விருப்பமில்லை. கர்த்தாவே, ஒவ்வொருவரையும் எங்களுடன் கொண்டு செல்ல விரும்புகின்றோம். அவர்கள் உம்முடையவர்கள். நான் அவர்களை உமக்காக உரிமை கோருகிறேன். கர்த்தாவே, அதை அருளும். இன்று மக்களை ஆசீர்வதியும், பிதாவே, அவர்களுடன் சேர்த்து என்னையும் ஆசீர்வதியும். உம் நாமம் மகத்துவம் பெறுவதாக, உமது மகிமை உமக்கே உரியது. ஆண்டவரே, இப்பொழுது எங்களை உமக்கென்று நாங்கள் அர்ப்பணிக்கும் போது எங்களுக்கு நித்திய விசுவாசத்தையளியும். 113நானும், இந்த வேதாகமத்தின் சாட்சியாக, இந்த பிரசங்க பீடத்தினின்று என் வாழ்க்கையை உமக்கு பிரதிஷ்டை செய்கின்றேன். கர்த்தாவே, நீர் அளித்திருக்கும் ஒவ்வொரு வாக்குத்தத்தத்தின் பேரிலும் நான் சார்ந்திருக்கிறேன். அவை ஊர்ஜிதப்படுமென்று அறிந்திருக்கிறேன். அவை யாவும் சத்தியம் என்பது எனக்கு தெரியும். கர்த்தாவே, எனக்கு தைரியத்தைத் தாரும். என் பேச்சிலும், செய்கையிலும் என்னை வழி நடத்தும். கர்த்தாவே, இந்த சபையுடன் கூட சேர்த்து என்னையும் உமக்கு அளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். விசுவாசம்... உம்மை நோக்குகிறது, கல்வாரி ஆட்டுக்குட்டியாகிய உம்மை, தெய்வீக இரட்சகர்! இப்பொழுது நான் ஜெபிக்கையில் செவிக்கொடும், என் பாவங்களையெல்லாம் எடுத்துப் போடும், ஓ, இன்றைய நாளிலிருந்து நான், முற்றிலும் உம்முடையவனாக இருப்பேனாக. இப்பொழுது நாம் எழுந்து நின்று மிருதுவாக அதை வாய் மூடிக்கொண்டு இசைப்போமாக. (சகோ. பிரான்ஹாமும் சபையோரும் வாயை மூடி என் விசுவாசம் உம்மை நோக்குகிறது என்று இசைக்க ஆரம்பிக்கின்றனர் - ஆசி). ...உம்மை நோக்குகிறது. ஆட்டுக்குட்டியாகிய... நாம் நம்முடைய கரங்களை உயர்த்துவோமாக. ஓ தெய்வீக இரட்... இப்பொழுது நம்மை தேவனுக்கென்று அர்ப்பணிப்போமாக. இப்பொழுது நான் ஜெபிக்கையில் செவிகொடும், என் சந்தேகங்களெல்லாவற்றையும் நீக்கும், ஓ, இன்றைய நாளிலிருந்து நான், முற்றிலும் உம்முடையவனாக இருப்பபேனாக. 114இப்பொழுது நமது கரங்களையுயர்த்தி, நாம் ஒன்று சேர்ந்து இந்த ஜெபத்தை சொல்வோம். (இந்த ஜெபத்தை சகோதரன் பிரான்ஹாம் கூற, சபையார் அதை திரும்பவும் கூறுகின்றனர் - ஆசி). கர்த்தராகிய இயேசுவே, (கர்த்தராகிய இயேசுவே) இப்பொழுது நான் என்னை, (இப்பொழுது நான் என்னை) உமக்கு அர்ப்பணிக்கிறேன், (உமக்கு அர்ப்பணிக்கிறேன்) நான் முன்பிருந்ததைக் காட்டிலும், (நான் முன்பிருந்ததைக் காட்டிலும்) அதிக விசுவாசத்தைப் பெற்று, (அதிக விசுவாசத்தைப் பெற்று) பரிசுத்தமான ஊழியம் செய்து, (பரிசுத்தமான ஊழியம் செய்து) உமக்கு முன்பை விட சிறந்த, (உமக்கு முன்பை விட சிறந்த) உமக்கேற்ற தாசனாக விளங்க, (உமக்கேற்ற தாசனாக விளங்க) கிருபை செய்யும். (கிருபை செய்யும்.) என் அவிசுவாசத்தை மன்னித்து, (என் அவிசுவாசத்தை மன்னித்து) பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை அளிக்கப்பட்ட விசுவாசத்தை, (பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை அளிக்கப்பட்ட விசுவாசத்தை) திரும்பவும் எனக்களியும், (திரும்பவும் எனக்களியும்) இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் (இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்) என்னை உமக்கு அளிக்கிறேன். (என்னை உமக்கு அளிக்கிறேன்.) இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில். ஜீவியத்தில் இருளில் நான் நடக்கையில், என்னைச் சுற்றிலும் துன்பம் சூழ்கையில், என்னுடைய வழிகாட்டியாக நீர் இரும், இருள் பகலாகட்டும், என்னுடைய எல்லா பயங்களை கழுவியருளும், உம்மிலிருந்து நான், வழி விலகாமல் இருப்பேனாக. 115நாம் தலை வணங்குவோம்: இன்றைய காலை செய்தி உங்களுக்கு நன்மை பயத்தது என்கின்ற உணர்வைப் பெற்றிருக்கின்றீர்களா? (சபையார், “ஆமென்'' என்கின்றனர் - ஆசி). அது உங்களுக்கு தைரியத்தை அளித்துள்ளதா? (''ஆமென்'') உங்கள் கரங்களை ஆண்டவருக்கு முன்பாக உயர்த்தி, ''தேவனே, உமக்கு நன்றி செலுத்துகின்றேன்'' என்று கூறுங்கள். ''தேவனே, உமக்கு நன்றி செலுத்துகின்றேன்'' இந்த செய்தி எனக்கு தைரியத்தை அளித்து, உதவிபுரிந்துள்ளது. எனவே, நான் என் இரு கரங்களையும் உயர்த்தியிருக்கிறேன். இன்று நான் உங்களிடம் எடுத்துரைத்த சில காரியங்களை நான் கூறுவேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. ஆயினும், அவை கூறப்பட்டுவிட்டன. அது எனக்கும், கடிந்து கொள்ளுதலாக அமைந்திருந்தது. வார்த்தையைப் பேசுவதற்கு பதிலாக, முறையிடும் குற்றத்தை நான் புரிந்து வந்தேன் என்றும், நான் சென்று கொண்டிருக்கிறேன் என்று எண்ணியிருந்த வழியில் உண்மையாக செல்லவில்லை என்பதையும் செய்தியின் மூலம் அறிந்து கொண்டேன். தேவனே, இந்நேரம், இன்னும் அதிகமாக என்னை அர்ப்பணிக்கும் ஊழியக்காரனாக ஆக உதவி செய்யும். எனக்காக மாத்திரமல்ல, இவ்வுலகினின்று அழைக்கப்பட்டு கிறிஸ்துவின் சரீரமாக ஒருங்கிணைந்து, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தை அடைய ஆயத்தமாகி கொண்டிருக்கும் உங்களுக்காகவும் நான் மன்றாடுகிறேன். உங்கள் வழியை செவ்வை பண்ணி, அடிச்சுவடிகளை நீங்கள் காணத்தவறாமலிருக்க, உங்களுக்கு உதவ எனக்கு தைரியத்தையளிக்கவும் தேவனை நோக்கி வேண்டிக்கொள்கிறேன். தேவனுடைய கிருபையால் நமக்கு முன்சென்ற இரத்த மயமான அடிச்சுவடுகளை நான் பின்பற்றுவேன் என்று உறுதி கூறுகின்றேன். பிரதிஷ்டிக்கப்பட்ட சிலுவையை நான் சுமப்பேன், மரணம் என்னை விடுதலை செய்யும்வரை, பிறகு வீடு செல்ல சூடிக்கொள்ள ஒருகிரீடம் இருக்கும், எனக்காக ஒரு கிரீடம் அங்குண்டு. பிதாவே, எங்கள் அர்ப்பணிப்பை உம் கரங்களில் தருகிறோம். உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். (ஒரு சகோதரன் அந்நிய பாஷையில் பேசுகிறார். ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி.) 116இந்த பிரதிஷ்டையின் ஜீவியத்திற்காக நாம் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நீங்கள் இனியகுணம் படைத்தவர்களாய், தாழ்மையுள்ளவர்களாய், ஆவியிலே நடவுங்கள் கிறிஸ்தவர்களை போல் நடந்து, உரையாடி, உடைகளை உடுத்து, தாழ்மையுள்ளவர்களாகவும்; இனிய குணம் படைத்தவர்களாகவும் இருக்க தவற வேண்டாம். தேவனுடைய சத்தம் வார்த்தையின் மூலமாகவும், அவரளித்த வரங்கள் மூலமாகவும் தொனித்துக் கொண்டிருக்கிறது. ஒரு வரம் கிரியை செய்யும் போது, தேவனுடைய சத்தத்தை அது வெளிப்படுத்துகின்றது. மற்றொரு வரம் கிரியை செய்யும் போதும், அதையே தான் அது வெளிப்படுத்துகின்றது. அதிலிருந்து, அது வார்த்தையுடன் ஒத்து போகின்றது என்றும், அது இக்காலத்திற்குரியது என்றும், நமக்குப் புலனாகின்றது. தேவன் நம்மோடே கூட இருக்கிறார். அதற்காக அவரை நாம் துதிக்க கடமைப்பட்டிருக்கின்றோம். சகோதரி, வாத்தியக் கருவியின் சுருதியைத் தருகையில், நாம் நமது தலைகளை வணங்குவோம். இயேசுவின் நாமத்தை உன்னோடு எடுத்துச் செல், ஒவ்வொரு கண்ணிக்கும் கேடகமாக; சோதனைகள் உன்னை சுற்றி சூழ்கையில், அப்பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் சுவாசி. அதை மாத்திரமே செய்யுங்கள், வார்த்தையை பேசுங்கள், அவருடைய நாமத்தை பேசுங்கள். முடிக்கும் தருவாயில் அதை நாம் இப்பொழுது பாடுவோமாக. இயேசுவின் நாமத்தை உன்னோடு எடுத்து செல், துன்பத்திற்கு... கேடகமாக உனக்கு இன்பத்தையும் ஆறுதலையும் அளிக்க வல்லது. ஓ! நீ செல்லும் எவ்விடம் அதை எடுத்து செல். இப்பொழுது நாம் ஒருவரோடொருவர் கைகுலுக்கி, ''சகோதரனே நான் உனக்காக ஜெபிப்பேன், நீர் எனக்காக ஜெபியும் என்று கூறுவோம்.'' விலையேறப்பெற்ற நாமம்... பரலோகத்தில் விலையேறப்பெற்ற நாமம், விலையேறப்பெற்ற நாமம். ஓ, எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கை... இப்பொழுது நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில் அடுத்த சரணத்தை பாடுவோமாக. இயேசுவின் நாமத்தை உன்னோடு எடுத்துச் செல், ஒவ்வொரு கண்ணிக்கும் கேடகமாக; சோதனைகள் உன்னை சுற்றி சூழ்கையில், அப்பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் சுவாசி. விலையேறப்பேற்ற நாமம், விலையேறப்பெற்ற நாமம்; ஓ, எவ்வளவு இனிமை! விலையேறப்பேற்ற நாமம், விலையேறப்பெற்ற நாமம்; ஓ, எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கை பரலோகத்தின் சந்தோஷம் விலையேறப்பெற்ற நாமம், ஓ, எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கை பரலோகத்தின் சந்தோஷம். 117இப்பொழுது நம் தலைகளையும் அதனுடன் நம் இருதயங்களையும் தாழ்த்தி, “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன், ஆக்கினை தீர்ப்புக்குட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்,” என்று இயேசு மொழிந்த வார்த்தைகளை உணர்ந்தவர்களாய், தேவனுடைய கிருபையால் அதை நாம் ஏற்கெனவே பெற்று கொண்டுவிட்டோம் என்பதை அறிந்து இன்று காலை முதல் நம் வாழ்க்கை மாற வேண்டும் என்னும் எண்ணத்துடன் நம்மை அவருக்கு அர்ப்பணித்து நமது தீர்மானத்தில் உறுதியாய் நிலை நிற்போம். நாம் இனிய குணம் படைத்தவர்களாய், தாழ்மை சிந்தையுள்ளவர்களாய் வாழ முயன்று அவரிடத்தில் நாம் கேட்டுக் கொண்டதை அவர் நம் ஒவ்வொருவருக்கும் தந்தருளுவார் என்னும் விசுவாசம் கொண்டவர்களாய் இருப்போம். நாம் ஒருவர் பேரில் ஒருவர் தீங்கு சொல்லாமல் வாழ்ந்து, நமது விரோதிகளின் நலனுக்காக ஜெபம் செய்து, அவர்களை நேசிப்போம். நமக்கு தீங்கிழைப்பவர்க்கு நன்மை செய்வோம். யார் சரி, யார் தவறு என்று தீர்ப்புரைக்கும் நியாயாதிபதி தேவன் ஆவார். இதன் அடிப்படையில், நாம் தலை வணங்கியிருக்கும் இந்நேரத்தில், நமது அருமை நண்பர், சகோ. லீவேயில் ஜெபம் செய்து கூட்டத்தை முடிக்கக் கோருகிறேன். சகோ. லீவேயில்.